search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரி கட்டாமல் இயங்கிய ஆம்னி பஸ் பறிமுதல்
    X

    வரி கட்டாமல் இயங்கிய ஆம்னி பஸ் பறிமுதல்

    • அந்த பஸ் நிற்காமல் அதிவேகமாக சென்றது.
    • விதிமீறல்கள் தொடர்பாக ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை வட்டார போக்கு வரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நாகை புறவழிச்சாலை செல்லூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வேதாரண்யத்தில் இருந்து நாகை வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிறுத்த முயன்றனர்.

    ஆனால் அந்த பஸ் நிற்காமல் அதி வேகமாக சென்றது.

    இதில் சந்தேகம் அடைந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 2 கிலோ மீட்டர் விரட்டி சென்று வாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே பஸ்சை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் ஆவணங்களை சோதனை செய்த போது, வரி கட்டாமல் பஸ்சை இயங்கியதும், பல்வேறு ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.

    இதையடுத்து விதிமீறல்கள் தொடர்பாக ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஆம்னி பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவல கத்திற்கு கொண்டு சென்றனர்.

    Next Story
    ×