search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coconut"

    • தேங்காய் ஒன்றுக்கு ரூ.25 அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
    • கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.250 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள படப்பை காட்டில் ஒன்றிய தென்னை விவசாயிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. அத்திவெட்டி வடிவேல் மூர்த்தி தலைமை வகித்தார் . மன்னாங்காடு முத்துராமன், சிராங்குடி கோவிந்தராசு, மூத்தாகுறிச்சி ராஜேந்திரன், அத்திவெட்டி அண்ணாதுரை, ஆலத்தூர் பாஸ்கர், புலவஞ்சி கோவிந்தன், சிரமேல்குடி ராஜேந்திரன், புலவஞ்சி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் தேங்காய் ஒன்றுக்கு ரூ.25 அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை ஒரு கிலோ ஒன்றுக்கு 250 விலை நிர்ணய செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன. இதனை அடுத்து கருப்பூர் முருகேசன், சிரமேல்குடி தமிழ்ச்செல்வன், புலவஞ்சி செல்லக்கண்ணு, அத்திவெட்டி பெரிய தம்பி, புலவஞ்சி திருஞானசம்பந்தம், விக்ரமம் தனபால், பெரிய கோட்டை முருகேசன், ஆலத்தூர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
    • வரலாறு காணாத விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகமான உழவாலய த்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளர் இ .பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். இந்த கூட்டத்தில் கொப்பரை தேங்காய் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.

    முன்னதாக கோவை வேளாண்மை பல்கலைக்க ழகத்தில் தென்னை தொழில்நுட்ப மேலாண்மை விருது பெற்ற நல்லேர் உழவர் உற்பத்தியாளர் சங்க இயக்குனர் ரங்கநா தனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கட்சித் தலைவர் செல்லமுத்து கூறியதாவது. தக்காளி விலைஉயர்ந்த போது,தக்காளியா தங்கமா என விவாதம் செய்தவர்கள், தங்கம் விலை குறையாது என்று உத்தரவாதம் உண்டு.

    அதேபோல தக்காளி விலை குறையாது என அவர்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா ? தக்காளி விலை உயர்ந்த போது அதனை உபயோகிப்பவர்கள் மட்டும் கஷ்டப்பட்டனர். விலை உயர்வால் விவசாயிக்கு லாபம் இல்லை. வரலாறு காணாத விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொப்பரை கொள்முதல் முழுமையாக செய்யப்படவில்லை. குறிப்பிட்ட இலக்கு வைத்து கொப்பரை கொள்முதல் செய்யப்ப டுகிறது. இதனைத் தவிர்த்து கொப்பரையை முழுமையாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதுகுறித்து விரைவில் பிரதமரை நேரில் சந்தித்து கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர்.

    நீலாம்பூர்:

    தமிழகத்தில் 18 மாவட்டங்களில் விவசாயிகள் தென்னை விவசாயத்தை காக்க வலியுறுத்தியும், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூர், செஞ்சேரி மலை பச்சாபாளையத்திலும் விவசாயிகள், தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்.

    விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளிடம் இருந்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர்.

    ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 8-வது நாள் போராட்டத்தின் போது, விவசாயிகள், கோவை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் வேலு மந்திராச்சலம் தலைமையில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி காய்ச்சி அதனைக் குடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர். இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்று 9-வது நாளாக போராட்டம் நடக்கிறது.

    • விவசாயிகள் சங்கம் சார்பில் ஜலகண் டாபுரம் பேருந்து நிலையத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.

    நங்கவள்ளி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜலகண்டாபுரம் பேருந்து நிலை யத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.

    இதில் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 கொள்முதல் செய்ய வேண்டும், அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும், சேலம் மாவட் டத்தில் நிபந்தனை இன்றி விவசாயிகளிட மிருந்து தேங்காய் கொப்பரையை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி, வரியை ரத்து செய்ய வேண்டு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட் டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கொப்பரை தேங்காய் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்.
    • ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 108.60 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் நகர்ப்புறங்களில் ஏராளமான தென்னை சாகு படி செய்யப்பட்டுள்ளது. கரும்பு பயிருக்கு மாற்றாக கரும்பு தோட்டங்கள் உள்ள இடங்களில் தென்னை மரங் கள் நடவு செய்யப்பட்டுள் ளது.

    இந்நிலையில் தேங்காய் விலை படு பாதாளத்தை நோக்கி சென்றுவிட்ட நிலை யில் தென்னை விவசாயிகள் மாற்று வழி தெரியாத நிலை யில் கவலையில் உள்ளனர். தேங்காய்க்கு விலை நிர்ண யம் செய்ய இயலாத நிலை யில் தமிழக அரசு அறிவித் துள்ள கொப்பரை தேங்காய் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ. 108.60 வீதம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    தென்னை விவசாயிகளி டம் ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொள்முதல் செய் யப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 108.60 வீதம் வழங்கப் பட்டு வருகிறது. இது வெளி மார்க்கெட் ரேட்டை விட மிகவும் அதிகமாகும். என வே ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை விவசாயி கள் கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்க மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக அரசு ராஜபாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 300 மெட்ரிக் டன் கொள்முதல் என்று இருந்த தை தற்போது 200 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித் துள்ளது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 500 மெட்ரிக் டன் வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இருக் கும் நிலையில் 200 ஆக குறைத்து இருப்பது தென்னை விவசாயம் இடை யே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு பரிசீலனை செய்து ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 500 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாய் தென்னை விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    • கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்து.
    • இதில், விவசாயிகள் சுமார் 185 மூட்டை தேங்காய் பருப்புகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்திருந்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்து. இதில், விவசாயிகள் சுமார் 185 மூட்டை தேங்காய் பருப்புகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்திருந்தனர்.

    இதில் ஆதார விலை திட்டத்தின் கீழ் 7 மூட்டை தேங்காய் பருப்புகள் கிலோ ஒன்று ரூ.108 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற போது ஏலத்தில், முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.7190 முதல் ரூ.8230 வரை விற்பனையானது.

    இரண்டாம் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.5575 முதல் ரூ.6486 வரை விற்பனையானது. நாள் முழுதும் நடைபெற்ற ஏலத்தில் ரூ.6 லட்சத்து 48 ஆயிரத்து 561 மதிப்பிலான தேங்காய் பருப்பு விற்பனையானது.

    • மாநாட்டில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தேங்காய் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
    • நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய நிலம் இழப்பீடு தொகையை பொதுப்பணித்துறையினர் உடனடியாக வழங்க வேண்டும்.

    தாராபுரம்:

    தாராபுரம் அருகே உள்ள சந்திராபுரத்தில் 5-ந் தேதி உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தியாகிகள் தின மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை பார்வையிட உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தாராபுரம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் கோரிக்கைக்காக நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கான மாநாடு தாராபுரத்தில் நாளை 5-ந் தேதி நடக்கிறது. மாநாட்டில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தேங்காய் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு காலி மதுபாட்டில் கொடுத்தால் 10 ரூபாய். ஆனால் உழைத்து உற்பத்தி செய்த தேங்காய் 8 ரூபாய்.தேங்காயை விவசாயிகளிடம் இருந்து முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். எனவே அந்த முழுமையான கோரிக்கையை இந்த மாநாட்டிலே எடுத்து இருக்கிறோம்.

    மேலும் பால், வெங்காயம், மக்காச்சோளம் போன்ற வேளாண் உற்பத்தி பொருள் அனைத்திற்கும் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்று மாநாட்டிலே வலியுறுத்த இருக்கிறோம்.ஆனைமலை திட்டத்திற்கு ஒரு தீர்வு காண வேண்டும். உடனடியாக அதற்கு நிதி ஒதுக்க அறிவிப்பு செய்ய வேண்டும். கர்நாடக மந்திரி தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட விடமாட்டேன் என்று சொல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அந்த தண்ணீரை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.தமிழ்நாடு அரசு வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய நிலம் இழப்பீடு தொகையை பொதுப்பணித்துறையினர் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

    • வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
    • 2500 தென்னங்கன்றுகள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் தொடங்கி வைத்தார்.

    வக்கீல் அருண் ஷோரி முன்னிலை வகித்தார்.

    முதல் கட்டமாக 2500 தென்னங்கன்றுகளை வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர். தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும் என சுர்ஜித் சங்கர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் மற்றும் வட்டார தலைவர் வேனுகோபால், முன்னாள் வட்டார தலைவர் கனகராஜ், நாகை நகர தலைவர் உதய சந்திரன், மாவட்ட இணை செயளாலர் பாரதிராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் தெய்வானை, வட்டார பொருளாளர் மணிஷ், பஞ்சாயத்து தலைவர் ரவிகுமார், இளைஞரணி தலைவர் சுரேஷ், நகர துணை தலைவர் கார்த்தி, நகர துணை செயலாளர் நாகேந்திரன், மாவட்ட துணை தலைவர் மகளிர் அணி மாலா, நகர செயலாளர்கள் சுரேஷ், ஹரி, சென்னை ராஜா, ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
    • மறைமுக ஏலத்தில் 1.30 டன் தேங்காய் பருப்பு ரூ.78 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

    முதல் தர பருப்பு மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்திலும், 2, 3-ம் தர பருப்பு, மறைமுக ஏலத்தி லும் விவசாயி களிடம் இருந்து கொள் முதல் செய்யப்பட்டது.

    மறைமுக ஏலத்தில் 1.30 டன் தேங்காய் பருப்பு ரூ.78 ஆயிரத்துக்கு விற்பனையானது. 2-ம் தர தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.65.65 வரையும், 3-ம் தரம் ரூ.58.05 வரையும் ஏலம் போனது. இந்த ஏலத்தில் சேலம், நாமக்கல், வெள்ளக் கோயில் மற்றும் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி பகுதியில் தேங்காய் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள், வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, மத்திய அரசின் ஆதரவு விலை பெறலாம்.

    நேரடியாக வியாபாரி களிடம் ஏல முறையில் விற்பனை செய்து பயன் பெறலாம் என, விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரபாவதி தெரிவித்தார்.

    • தேங்காய் சிரட்டை கை களை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.
    • கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விற்ப னையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.7 -க்கு விற்ப னையாகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், கண்டிப்பாளை யம், கொத்தமங்கலம், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.

    தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் தேங்கா யைப் பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்ற னர்.

    அதே போல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டை கை களை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய தேங்காய் சிரட்டைகளை தேங்காய்சி ரட்டை மூலம் கரி தயார் செய்பவர்களுக்கும், தேங்காய் சிரட்டையை அரைத்து பவுடர் தயாரிக்கும் மில்க ளுக்கு அனுப்பி வைக்கின்றனர். சிலர் தேங்காய் சிரட்டைகள் மூலம் உண்டி யல், பல்வேறு வகையான பொம்மைகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விற்ப னையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.7 -க்கு விற்ப னையாகிறது. தேங்காய் சிரட்டை விலை வீழ்ச்சி யால் விவசா யிகள் கவலை அடைந்து ள்ளனர்.

    • ஆழ்குழாய் வசதி கொண்ட விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.
    • தென்னையில் நோய் மற்றும் பூச்சியின் கட்டுப்பாட்டு முறைகளை எடுத்துரைத்தார்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டாரம் அக்கரைவட்டம் கிராமத்தில் உழவர் வயல் தின விழா நடைபெற்றது.

    விழாவில் வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன் பேசியதாவது:-

    குறுவை சாகுபடி நெல் சாகுபடியில்மற்ற பருவங்களை விட குறுவையில் கூடுதல் மகசூல் பெறுவதற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை உள்ளதால் ஆழ்குழாய்வசதி கொண்ட விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.

    குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டும்.

    குறுகிய கால ரகங்களான ஆடுதுறை 37, ஆடுதுறை 53, ஏஎஸ்டிடி 16 டி பி எஸ், கோ 5, போன்ற குறைந்த வயதுடைய ரகங்களின் சான்று பெற்ற விதைகளை குறுவை பருவத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

    தென்னையில் நோய் மற்றும் பூச்சியின் கட்டுப்பாட்டு முறைகளையும் எடுத்துரைத்தார்.

    முன்னதாக அக்கரை வட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணையன் வரவேற்றார்.

    விழாவில் உதவி வேளாண்மை அலுவலர் பதிராஜன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் முத்துக்குமரன், உதவி தொழில் நுட்ப மேலாளர் அணு, பவதாரணி, ஊராட்சி செயலர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசு தென்னை சாகுபடிக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியும் பயனுள்ள முறையில் செலவழிக்கப்படும்

    மடத்துக்குளம்:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தேங்காய், கொப்பரை உற்பத்தியை ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை வெகுவாக குறைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட கால பயிராக தென்னை பராமரிக்கப்படுவதால் உடனடியாக மாற்றுச்சாகுபடிக்கும் செல்ல முடியாது. எனவே இத்தகைய விலை வீழ்ச்சி காலங்களில் நிலைமையை சமாளிக்க மாற்று வழிகளை அனைத்து தரப்பினரும் யோசிக்கத்துவங்கிஉள்ளனர்.

    அவ்வகையில் தேங்காயிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் விவசாயிகளிடம் ஆர்வம் உள்ளது. ஆனால் போதிய வழிகாட்டுதல் கிடைப்பதில்லை.

    இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:- தேங்காய் விலை வீழ்ச்சியால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். இச்சூழ்நிலையை சமாளிக்க, மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

    மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வழிகாட்டுதல் வழங்குகின்றனர். ஆனால் அனைத்து விதமான பயிற்சிகளும் கேரளா ஆலுவாவிலுள்ள பயிற்சி மையத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் அங்கு சென்று தங்கி பயிற்சி பெற தயக்கம் காட்டுகின்றனர்.

    எனவே தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிபுணர்களைக்கொண்டு திருமூர்த்திமலை தென்னை நாற்றுப்பண்ணை அல்லது உடுமலையில் இத்தகைய பயிற்சிகளை வழங்க வேண்டும். இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள். மத்திய அரசு தென்னை சாகுபடிக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியும் பயனுள்ள முறையில் செலவழிக்கப்படும் என்றனர்.

    ×