search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய்"

    • ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது.
    • பாமாயில் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும்.

    பல்லடம்:

    ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக்கோரி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக திருப்பூர் -கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    இந்தியா விவசாய நாடு, விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. ஆனால் 72 சதவீதம் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதியாகும் அவலம் உள்ளது. உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்பு, உள்நாட்டு எண்ணெய் வித்துக்களான தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு ஊக்குவிப்பு செய்யாமல், மானியம் வழங்காமல், இந்தோனேசிய- மலேசியா பாமாயிலை லிட்டர் ரூ. 100க்கு மத்திய, மாநில அரசுகள் வாங்கி ரூ.30க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்கின்றனர். அதாவது ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் மானியம் கொடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

    ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது. ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ரூ.1500 கோடிகளை மானியமாக பாமாயில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.

    கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தி.மு.க., 66-வது வாக்குறுதியாக தேங்காய் எண்ணெய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பாமாயிலை தடை செய்து, நன்மை விளைவிக்கும் உள்நாட்டு எண்ணெய்களை விற்பனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தென்னை விவசாயிகளாலும், விவசாய சங்கங்களாலும் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

    கடந்த 2019ல் ரூ.20 க்கு விற்பனையை கொண்டு இருந்த தேங்காய் தற்போது ரூ.10க்கு மட்டுமே விற்பனையாவதால் 22 மாவட்டங்களில் உள்ள தமிழ்நாட்டின் 20 லட்சம் தென்னை விவசாயிகள் மிகக் கடுமையான நஷ்டத்தில் உள்ளார்கள். நிலக்கடலை விவசாயிகள் பறிக்கும் கூலி கூட கிடைக்காமல் கடும் கஷ்டத்தில் உள்ளார்கள்.

    எனவே பாமாயில் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும். தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் .

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உறித்தார்.
    • பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு தங்கள் செல்போன்களில் படம் பிடித்து அந்த வடமாநில இளைஞரை பயபக்தியுடன் வழிபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்ட அலகுமலை கோவில் பிரசித்தி பெற்ற முருகர் தலமாக இருந்து வருகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளான நேற்று காரிய சித்தி ஆஞ்சநேயர் சந்நிதி முன்பு வட மாநில இளைஞர் ஒருவர் தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருள் ஏற்பட்ட நிலையில் ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து ஆஞ்சநேயர் சிலையிடம் இந்தியில் பேசியவாறு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உறித்தார்.

    அனுமன் போலவே பாவனை செய்து அவர் தேங்காய்களை பற்களால் உறித்ததை கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு தங்கள் செல்போன்களில் படம் பிடித்து அந்த வடமாநில இளைஞரை பயபக்தியுடன் வழிபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்பு அந்த இளைஞர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து தேங்காயை பற்களால் உறித்து வழிபட்ட பக்தர்.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.36 லட்சத்து 32 ஆயிரத்து 343-க்கு விற்பனையானது.

    எழுமாத்தூர்:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 994 மூட்டைகள் கொண்ட 45 ஆயிரத்து 525 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தரபருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.78.90 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.89.25 காசுகள், சராசரி விலையாக ரூ.87.42 காசுகள் என்ற விலை களிலும்,

    2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.63.35 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.84.01 காசுகள், சராசரி விலையாக ரூ.75.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.36 லட்சத்து 32 ஆயிரத்து 343-க்கு விற்பனையானது.

    இதேபோல கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த தேங்காய்கள் மற்றும் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 16 ஆயிரத்து 255 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 797 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22 .88 காசுகள்,

    அதிகபட்ச விலையாகரூ 29. 60 காசுகள், சராசரி விலையாக ரூ.27.10 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 479-க்கு விற்பனையானது.

    இதனையடுத்து நடந்த தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 765 மூட்டைகள் கொண்ட 36 ஆயிரத்து 349 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பி்ல் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.78.99 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.86.49 காசுகள், சராசரி விலையாக ரூ.85.89 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.64.68 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.84.36 காசுகள், சராசரி விலையாக ரூ.80.89 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.28 லட்சத்து 95 ஆயிரத்து 671-க்கு விற்பனையானது.

    மொத்தம் எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் சேர்த்து தேங்காய்கள், தேங்காய் பருப்பு ரூ.66 லட்சத்து 70 ஆயிரத்து 493-க்கு விற்பனையானது.

    • தேங்காய் எண்ணை உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது.
    • தேங்காய் களங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிகளில் நூற்றுக் கணக்கில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிக அளவில் களங்களை அமைத்துள்ளனர். தேங்காய் எண்ணை உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது.

    தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப்பணிகள் முற்றிலுமாகப் பாதிப்படும். இந்த நிலையில் காங்கயம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் அவ்வப்போது விட்டு விட்டு பெய்துவரும் சாரல் மழை மற்றும் கன மழையால் தேங்காய் கள பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் செய்யமுடியாமல் முடங்கியுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்டு உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். இதன் காரணமாக தேங்காய் களங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 

    • ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார்.
    • சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுத பூஜை, நவராத்திரி விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் தங்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

    கோயில்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, ஆற்றுக்குச் சென்று கரகம் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் சுவாமிகளை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

    அதைத் தொடர்ந்து சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விரதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பாக அமர்ந்தனர்.

    அப்போது ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார். பின்னர் கோவில் முன்பாக வரிசையாக உட்கார்ந்திருந்த பக்தர்களின் தலையில் பூசாரி ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார்.

    அதனைத்தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமியை வழிபாடு செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.72 லட்சத்து தேங்காய் விற்பனை நடைபெற்றது
    • லோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 90 காசுக்கு விற்பனையானது

    எழுமாத்தூர்,

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 29 ஆயிரத்து 245 எண்ணிக்கையிலான 12 ஆயிரத்து 158 கிலோ எடைகொண்ட தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 90 காசுகள், அதிகபட்ச விலையாக 23.39 காசுகள், சராசரி விலையாக 22.55 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 888-க்கு விற்பனையானது.

    • பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
    • மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 15 ஆயிரத்து 960 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.01க்கும், குறைந்தபட்சமாக 51.99 க்கும்,சராசரியாக ரூ.76.89 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 17ஆயிரத்து 263- க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 10 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 78.99 க்கும் குறைந்தபட்சமாக ரூ 51.48 க்கும், சராசரியாக ரூ 77.49 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.

    • வயல்களில் வரப்பு ஓரங்களிலும், 8,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு நீண்டகால பலன் தரும் தென்னை பயரிடப்பட்டுள்ளது.
    • வாழப்பாடி பகுதியில் தேங்காய் மொத்த உற்பத்தியில், 60 சதவீதத்திற்கு மேல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேஷம், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், வாழப்பாடி, பெத்த நாயக்கன்பாளையம், பேளூர், ஏத்தாப்பூர், அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களில், மரத்தோப்புகள் அமைத்தும், கிணற்று மேடுகளிலும், வயல்களில் வரப்பு ஓரங்களிலும், 8,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு நீண்டகால பலன் தரும் தென்னை பயரிடப்பட்டுள்ளது.

    வாழப்பாடி பகுதியில் தேங்காய் மொத்த உற்பத்தியில், 60 சதவீதத்திற்கு மேல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேஷம், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. எஞ்சிய 40 சதவீதம், உள்ளூர் விற்பனை, கொப்பரைத் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    வாழப்பாடி பகுதியில் மட்டும் தேங்காய் உற்பத்தி, அறுவடை மற்றும் வர்த்தகத்தில், தென்னை விவசாயிகள், வியாபாரிகள், தரகர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், கொப்பரை பதப்படுத்துவோர் உட்பட 50ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாழப்பாடி பகுதியில் இருந்து பிற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளின் ஆர்டருக்கு ஏற்ப, பருமனுக்கு ஏற்ப ஒரு மூட்டையில் 80 முதல் 120 தேங்காய் கொண்ட 300 மூட்டைகளில் ஏறக்குறைய 30ஆயிரம் தேங்காய் வரை ஒரு லாரியில் ஏற்றி எண்ணிக்கை அடிப்படையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தேங்காய் உற்பத்தி தருணத்தில் வாழப்பாடி பகுதியிலுள்ள தனியார் தேங்காய் மண்டிகளில் இருந்து நாளொன்றுக்கு ஏறக்குறைய 30 லாரிகளில் 9 லட்சம் தேங்காய்கள் வரை பிற மாநில வியாபாரிகளுக்கு அனுப்பப்படுகிறது ஒரு லாரி தேங்காய் விற்பனையில், லாரி வாடகை, தொழிலாளர் கூலி, வரி உள்பட ரூ.4 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

    வாழப்பாடி பகுதியில் தேங்காய் அறுவடை தொடங்கிய நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவும் நெருங்கியுள்ளதால், தேங்காய் வர்த்தகம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதால், விவசாயிகளிடம் தேங்காய்களை கொள்முதல் செய்து, தொழிலாளர்களை கொண்டு மட்டை உரித்து, மூட்டைகளில் தைத்து லாரியில் ஏற்றி அனுப்பும் பணியில் வாழப்பாடி பகுதி தேங்காய் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் ரூ.7,000 வரை விலை போன 1,000 தேங்காய்க்கு தற்போது ரூ. 10,000 வரை விலை கிடைத்து வருவதால், வாழப்பாடி பகுதியில் தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தேங்காய் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
    • கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.

    மதுரை

    வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. சில மாதமாக மட்டை தேங்காய் சந்தை விலை குறைவாக இருந்தது. தற்போது மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.10.65-க்கும் குறைந்தபட்சமாக ரூ.6.10-க்கும் விலைபோனது. கொப்பரை ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.74.50-க்கும் குறைந்த பட்சமாக ரூ.56.30- க்கும் விலைபோனது.

    மறைமுக ஏலத்தில் 20 வியாபாரிகள் போட்டி முறையில் பங்கேற்றனர். விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைத்தது என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    மேலும் மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு விவசாயிகள் கொப்பரை எடுத்து வந்தததை மதுரை விற்ப னைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி ஆய்வு செய்தார். மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டம் செப்டம்பர் வரை மட்டுமே உள்ளதால், தென்னை விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து தங்களின் தேங்காய்களை கொப்ப ரையாக மதிப்பு கூட்டி முதல் தர கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.

    • சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.
    • தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.

    இதில் சுமார் 152 குவிண்டால் எடையுள்ள 303 மூட்டை தேங்காய் பருப்புகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தர தேங்காய் பருப்புகள் குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்று ரூ.7,556 முதல் ரூ.7,810 வரை விற்பனையானது. 2-ம் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.6,175 முதல் ரூ.7,475 வரை விலை போனது. இதன்படி மொத்தம் ரூ.11 லட்சத்து 23 ஆயிரத்து 771-க்கு தேங்காய் பருப்புகள் விற்பனையானது.

    தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • கொடுமுடி , எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தேங்காய், கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.87 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனையாகின.

    ஈரோடு:

    கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் 10 ஆயிரத்து 267 எண்ணிக்கையிலான 3 ஆயிரத்து 711 கிலோ எடை கொண்ட தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்று க்கு குறைந்தபட்ச விலையாக ரூ.19.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.23.65 காசுகள், சராசரி விலையாக ரூ.22.70 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் 82 ஆயிரத்து 601 ரூபாய்க்கு விற்பனையாகின.

    இதனை யடுத்து நடந்த தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 835 மூட்டைகள் கொண்ட 40 ஆயிரத்து 340 கிலோ எடைகொண்ட தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட் சவிலையாக ரூ.77.95 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.78.98 காசுகள், சராசரி விலையாக ரூ.78.70 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.60, அதிகபட்ச விலையாக ரூ.76.49 காசுகள், சராசரி விலையாக ரூ.74.39 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.30 லட்சத்து 19 ஆயிரத்து 114 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் தேங்காய் மற்றும் தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.31 லட்சத்து 1 ஆயிரத்து 715-க்கு விற்பனையாகின.

    இதேபோல எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூ டத்தில்74 ஆயிரத்து 398 கிலோ எடையுள்ள தே ங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.78.85 காசு கள், அதிகபட்ச விலையாக ரூ.81, சராசரி விலையாக ரூ.79.99 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.60.15 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.74.66 காசுகள், சராசரி விலையாக ரூ.73.36 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.56 லட்சத்து 88 ஆயிரத்து 779-க்கு விற்பனையானது.

    மொத்தம் கொடுமுடி , எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.87 லட்சத்து 90 ஆயிரத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனையாகின.

    • முத்தூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
    • ரூ.2.92 லட்சம் மதிப்பிலான தேங்காய், கொப்பரை ஆகியவை விற்பனையாயின.

    வெள்ளகோவில்

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனா்.

    இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4.9 டன் தேங்காய், 3.7 டன் கொப்பரை ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் தேங்காய் கிலோ ரூ.17.65 முதல் ரூ. 22.70 வரையிலும், கொப்பரை கிலோ ரூ.59.00 முதல் ரூ.75.35 வரைக்கும் விற்பனையானது.

    ஏலத்தில் மொத்தமாக ரூ.2.92 லட்சம் மதிப்பிலான தேங்காய், கொப்பரை ஆகியவை விற்பனையாயின.

    ×