என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றக் காட்சி.
கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கேட்டு பிரதமரை சந்திக்க உழவர் உழைப்பாளர் கட்சி முடிவு
- விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
- வரலாறு காணாத விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகமான உழவாலய த்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளர் இ .பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். இந்த கூட்டத்தில் கொப்பரை தேங்காய் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.
முன்னதாக கோவை வேளாண்மை பல்கலைக்க ழகத்தில் தென்னை தொழில்நுட்ப மேலாண்மை விருது பெற்ற நல்லேர் உழவர் உற்பத்தியாளர் சங்க இயக்குனர் ரங்கநா தனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கட்சித் தலைவர் செல்லமுத்து கூறியதாவது. தக்காளி விலைஉயர்ந்த போது,தக்காளியா தங்கமா என விவாதம் செய்தவர்கள், தங்கம் விலை குறையாது என்று உத்தரவாதம் உண்டு.
அதேபோல தக்காளி விலை குறையாது என அவர்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா ? தக்காளி விலை உயர்ந்த போது அதனை உபயோகிப்பவர்கள் மட்டும் கஷ்டப்பட்டனர். விலை உயர்வால் விவசாயிக்கு லாபம் இல்லை. வரலாறு காணாத விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொப்பரை கொள்முதல் முழுமையாக செய்யப்படவில்லை. குறிப்பிட்ட இலக்கு வைத்து கொப்பரை கொள்முதல் செய்யப்ப டுகிறது. இதனைத் தவிர்த்து கொப்பரையை முழுமையாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதுகுறித்து விரைவில் பிரதமரை நேரில் சந்தித்து கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






