வீடு வீடாக சென்று தென்னங்கன்று வழங்கல்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும்.2500 தென்னங்கன்றுகள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் தொடங்கி வைத்தார்.

வக்கீல் அருண் ஷோரி முன்னிலை வகித்தார்.

முதல் கட்டமாக 2500 தென்னங்கன்றுகளை வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர். தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும் என சுர்ஜித் சங்கர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் மற்றும் வட்டார தலைவர் வேனுகோபால், முன்னாள் வட்டார தலைவர் கனகராஜ், நாகை நகர தலைவர் உதய சந்திரன், மாவட்ட இணை செயளாலர் பாரதிராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் தெய்வானை, வட்டார பொருளாளர் மணிஷ், பஞ்சாயத்து தலைவர் ரவிகுமார், இளைஞரணி தலைவர் சுரேஷ், நகர துணை தலைவர் கார்த்தி, நகர துணை செயலாளர் நாகேந்திரன், மாவட்ட துணை தலைவர் மகளிர் அணி மாலா, நகர செயலாளர்கள் சுரேஷ், ஹரி, சென்னை ராஜா, ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com