search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்முதல்"

    • பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டுத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்
    • கறவை மாடு கடன் பால் உற்பத்தி நிலையங்களை தரமான பால் சங்கத்திற்கு கடன்கள் வழங்க அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கே.பி.ரோட்டில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு துறை இயக்குநர் வினித் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தினமும் பால் கொள் முதல், பால் பாக்கெட் விற்பனை சரிவர நடை பெறுகிறதா என்றும், பால் உப பொருட்கள், பால் கோவா, தயிர், மோர், குல்பி, சாக்லேட் போன்றவை உரிய முறையில் தயாரிக்கப் படுகிறதா என ஒவ்வொரு பிரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள். பால் கொள்முதல் அதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    உடனடியாக பால் உற்பத்தி அதிகரிக்க கறவை மாடு கடன் பெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கினை அடைய வேண்டும் என்று எடுத்து ரைத்தார். பால் பண்ணை யில் உள்கட்டமைப்புகளில் சில மாற்றங்கள் செய்திடவும் ஒவ்வொரு பிரிவிலும் பணிகள் ஒரே சீரான முறை யில் உரிய பால் பண்ணை யின் அமைப்பின்படி செயல் படுத்த அறிவுறுத்தினார்.

    பால் உற்பத்தி அதிக ரிக்கவும், பால் கொள்முதல் செய்வதே உறுதிப்படுத்தி செயல்படுத்திடவும், பொது மக்களுக்கு பால் பாக்கெட் மற்றும் பால் உபப்பொ ருட்கள் தங்கு தடையின்றி அனைத்து பகுதியிலும் கிடைத்திட அறிவுறுத்தினார். பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு கடன் பால் உற்பத்தி நிலையங்களை தரமான பால் சங்கத்திற்கு கடன்கள் வழங்க அறிவுறுத்தினார்.

    ஆவின் பொது மேலாளர் அருணகிரிநாதன், துணை பதிவாளர் சைமன் சார்லஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒரு வாரமாக காத்து கிடக்கின்றனர்.
    • அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் இருக்க விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்பு தலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை முன்பரு வத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இரும்புதலை அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒருவார காலமாக காத்து கிடக்கின்றனர். கொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் இருக்க விவசாயிகள் தினசரி சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே கொள்முதல்நி லையத்தை உடனடியாக திறந்து நெல்கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பா் 30-ந் தேதி வரையில் 11,143 விவசாயிகளிடம் இருந்து ரூ.172.92 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • தேங்காய் கொப்பரைக்கான உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களது வருவாயைப் பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயனடையும் வகையில் அவா்கள் விளைவித்த கொப்பரையை விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கூடுதலாக 6,600 மெட்ரிக் டன் அரவை கொப்பரை, 400 மெட்ரிக் டன் பந்து கொப்பரை ஆகியவற்றை கொள்முதல் செய்ய நவம்பா் 26-ந் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேங்காய் கொப்பரை கிலோ ரூ.108.60, பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலமாக கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு, கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பா் 30-ந் தேதி வரையில் 11,143 விவசாயிகளிடம் இருந்து ரூ.172.92 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு விவரம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். தேங்காய் கொப்பரைக்கான உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகள் தமிழக அரசின் இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்னிந்திய தேவை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் தகவல்
    • 15 நாட்களுக்கு ஒருமுறை பசுந்தேயிலையை பறித்து, தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்க அறிவுறுத்தல்

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு-குறு விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக அங்கு 110 தொழிற்சாலைகளும், 35க்கும் மேற்பட்ட பெரிய எஸ்டேட் ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. மேலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு தேயிலைதோட்ட கழகம் மற்றும் இன்கோசர்வ் மூலமாகவும் தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பசுந்தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.இதுகுறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் கூறியதாவது:-

    தேயிலை விவசாயிகள் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பசுந் தேயிலையை அறுவடை செய்ய வேண்டும். இதற்கு அவர்கள் கத்தியை பயன்படுத்தக்கூடாது. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை விவசாயிகள் சங்கம் மற்றும் கிராமப்புற விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.

    மேலும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை வழங்குவதற்கான முயற்சிகளை தென்னிந்திய தேவை வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த மாதம் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.14.90 வழங்க வேண்டுமென தேயிலை வாரிய விலை நிர்ணய கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பசுந்தேயிலை வரத்து அதிகரித்து உள்ளது. எனவே 7 மற்றும் 15 நாட்களுக்கு ஒரு முறை பசுந்தேயிலையை பறித்து, தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இதன் மூலம் தேயிலை வாரியம் நிர்ணயித்ததைவிட, தரமான இலைக்கு கூடுதல் விலை கிடைக்கும். எனவே சிறு-குறு விவசாயிகள் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.16.79 லட்சம் ஆகும்.
    • குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 739 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் இரா.தாட்சா யினி தலைமையில் பருத்தி ஏலம் நடைப்பெற்றது.

    பருத்தி ஏலத்தில் பாபநா சத்தை சுற்றியுள்ள கிராம த்தில் இருந்து மொத்தம் 209 லாட் பருத்தி கொண்டு வரப்பெற்றது.

    சராசரியாக 292.60 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.

    கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 8 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்ட னர் பருத்தியின் மதிப்பு சராசரியாக 16.79 லட்சம் ரூபாய் ஆகும்.

    இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6,999/- குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,409 /-சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.5,739/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    • தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 996.
    • சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,009-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைப்பெற்றது

    பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 342 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 358.80 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 06 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6,996/-

    குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,329/- சராசரி மதிப்பு குவிண்டா லுக்கு ரூ.6,009/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    • 20 ஆயிரம் டன் மூட்டைகள் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    • குறைந்தபட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த பயிர்கள் ஆகஸ்டு மாதத்தில் துவங்கி அறுவடை செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சேமிப்பு கட்டிடங்கள் கூடிய நெல் கொள்முதல் நிலையம், திறந்தவெளி கொள்முதல் நிலையம் என 120 இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கொள்முதல் நிலையங்களிலும் இதுவரை 35ஆயிரம் டன்களுக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் 20 ஆயிரம் டன் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    15 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடப்பதால் எடை குறைவு ஏற்பட்டால் ஊழியர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து கொள்முதல் நிலைய ஊழியர்கள், விவசாயிகள் தெரிவிக்கையில் குறுவை நெல் எப்போதும் அறுவடை செய்து பல நாட்கள் அடுக்கிவைத்திருந்தால் இயல்பாகவே எடை குறையும்.

    கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப்படாமல் தேங்கி கிடக்கிறது, கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரத்தில் மழையும் பெய்துவருகிறது.

    கடந்த சில வாரங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் குறைந்த பட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் குறையாமல் தேங்கி கிடக்கிறது,

    இதனால் ஏற்படும் எடை இழப்பிற்கு ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது.

    மேலும் மழைபெய்வதாலும், கால்நடைகள், எலி ஆகியவற்றால் ஏற்படும் சேதத்திற்கும் ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது, கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவத்றகு முன்பு உடனுக்குடன் கிடங்கிற்கு கொண்டு செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
    • வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், திருக்கருகாவூர், இடையிருப்பு ஊராட்சியில் இடையிருப்பு ஊராட்சியில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி புதுப்பிக்கும் பணி, ஜல்ஜுவன் திட்டப்பணிகள், சிறு பாலம் கட்டுமானப்பணி மற்றும் சாலைப்பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை யிட்டு பணிகள் தரமாக செய்யப்படுகிறது என தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது இடையி ருப்பு அரசு நெல் கொள்முதல்நி லையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டித் தரவும் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றிட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த ஆய்வின் போது பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன்,அமானுல்லா இடையிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் வனிதா கார்த்திகேயன், மற்றும் ஊராட்சி செயலாளர் ராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2 ஆயிரத்து 203 ஆக அறிவித்துள்ளது.
    • விவசாயிகள் தங்களது நெல்லை அருகிலுள்ள கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் 2023-24 காரீப் சந்தை பருவத்தில் குறுவை பட்ட நெல் அறுவடையை யொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2023-24-ம் காரீப் சந்தை பருவத்துக்கு அரசால் நெல்லுக்கான கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டு ள்ளது.

    சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2 ஆயிரத்து 203, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 183 என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் ஆணைப்படி ஊக்கத் தொகையாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டா லுக்கு ரூ.107, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 82 அறிவித்துள்ளது.

    இதன் மூலம், மொத்தம் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 310, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 265 கொள்முதல் தொகையாக (ஊக்கத்தொகை உட்பட) வழங்கப்படும்.

    விவசாயிகள் தங்களது நெல்லை அருகிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரி வித்துள்ளார். 

    • இ-நாம் திட்டத்தின்கீழ் விளைபொருள்களை விற்பனை, கொள்முதல் செய்ய விவசாயிகள், வியாபாரிகள் முன்வரவேண்டும் என கலெக்டர் சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • 4320 விவசாயிகளும் 211 வியாபாரிகளும் பதிவு செய்துள்ளனர்.

    மதுரை

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் மதுரை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்க ளில் இ-நாம் எனும் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உரிய தரப்பகுப்பாய்வு செய்து சந்தைப்படுத்திட ஆய்வக வசதி ஏற்படுத்தப்பட் டுள்ளது. இவ்வசதியினால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மின்னணு முறையில் தேசிய அளவில் சந்தைப்படுத்திட வாய்ப்பு ஏற்படுத்ததப் பப்பட்டுள்ளது.

    மேலும் சொந்த மாவட்டம், பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள வணிகர்கள், இணைய வழியில் பங்கேற்கும் வசதி உள்ளதால் போட்டி அடிப்படையிலான லாபகரமான விலையினை விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு பெறலாம்.

    விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடையே எவ்வித இடைத்தரகர்களும் இன்றி விற்பனைத்துறை அலுவலர்களின் உதவியுடனான நேரடி வர்த்தகம் நடைபெறுவதால் இடைத்தரகு/கமிஷன் போன்றவை இத்திட்டத்தின் கீழ் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.

    இ-நாம் திட்டத்தின் கீழ் விளைபொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு விற்பனைத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 48 மணி நேரத்தில் மின்னணு முறையில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    லாபகரமான வரவு கிடைப்பதால் விவசாயிகளும் தரமான விளைபொருட்களை கொள்முதல் செய்வதால் வியாபாரிகளும் இத்திட்டடத்தினால் பயனடைந்து வருகின்றனர்.

    இதுவரை மதுரை மாவட்டத்தில் 4320 விவசாயிகளும் 211 வியாபாரிகளும் பதிவு செய்துள்ளனர். இந்நிதி யாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் 589 விவசாயி களின் 2369 டன் அளவிலான விளைபொருட்கள் 3 கோடியே 59 லட்சம் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 589 விவசாயிகள் 79 வியாபாரிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

    விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு இலாபகரமான விலையினைப் பெற்றிட தத்தமது பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு சென்று தங்களைப் பதிவு செய்து கொண்டும் வியாபாரிகள் உரிய உரிமம் பெற்றும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

    மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இ-நாம் திட்டத்தின் கீழ் பதிவு செய்திட விவசாயிகள் தங்கள் ஆதார் நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் அலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனையாகி வருகிறது
    • தமிழ்நாட்டில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

    கோவை,

    தமிழ்நாட்டில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நா டகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியா ளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது. கடந்த 7-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.99 என இருந்தது.

    கடந்த 8-ந் தேதி ரூ.101, 10-ந் தேதி ரூ.105, 11-ந் தேதி ரூ.107, நேற்று முன்தினம் ரூ.112 என கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    ஒரு வாரத்தில் நுகர்வு அதிகரித்து கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ.13 வரை உயர்ந்து உள்ளது. தற்போது ஒரு கிலோவிற்கு ரூ.18 வரை உற்பத்தியாளர்க ளுக்கு லாபம் கிடைக்கிறது.

    இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோகறிக்கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனையாகி வருகிறது.தற்போது ஆடி மாதம் முடிவடைய உள்ளதால் வரும் நாட்களில் நுகர்வு இன்னும் அதிகரித்து விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • இதுவரை 264 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • அறுவடை பணிகள் நடைபெறும் இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், சேமங்கலம் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    பின்னர் செய்தியாள ர்களிடம் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஏற்கனவே 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வந்தன. மேலும் 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு திறக்கப்படுகிறது.

    அதில், மயிலாடுதுறை வட்டத்திற்கு இளந்தோப்பு, திருவாளபுத்தூர், கிழாய், கொற்கை, கோடங்குடி, திருச்சிற்றம்பலம், ஆத்துக்குடி, முருகமங்களம், தாழஞ்சேரி, திருவிழந்தூர், சித்தமல்லி, 24 வில்லியநல்லூர், குத்தாலம் வட்டத்திற்கு பழையகூடலூர், மேலையூர், குத்தாலம், நச்சினார்குடி, கங்காதாரபுரம், கொக்கூர்.

    வழுவூர், எழுமகலூர், ஆலங்குடி, 52 வில்லியநல்லூர், பேராவூர், சீர்காழி வட்டத்திற்கு கொண்டத்தூர், அரசூர், பனங்காட்டாங்குடி, உள்ளிட்ட கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 264 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ.59 இலட்சத்து 79 ஆயிரத்து 420 பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை 57 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், மாவட்டத்தில்; எங்கெல்லாம் அறுவடைக்கு தயாராகி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறதோ அந்த இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    ×