search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "clash"

    • சம்பவத்தன்று புதுமனை தெரு பகுதியை சேர்ந்த பாலு , சங்கம் ஆகியோர் மணிகண்டன் வீட்டு வாசலில் பூ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
    • இதனை மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார், அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மகன் மணிகண்டன். இவர் சம்பவத்தன்று புதுமனை தெரு பகுதியை சேர்ந்த பாலு (வயது 29), சங்கம்(34) ஆகியோர் மணிகண்டன் வீட்டு வாசலில் பூ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனை மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க சிவசக்தி என்பவர் அங்கு வந்துள்ளார். அவரை 2 பேரும் தாக்கி உள்ளனர்.

    இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் பாலுவை கைது செய்தனர். இதற்கிடையே தகராறின் போது தனது 12 பவுன் தங்கநகையை காணவில்லை என்று பாலு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது.
    • தாக்குதலில் மாணவர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அந்த பகுதியில் தங்கள் வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் கண்டித்து உள்ளனர்.

    இது தொடர்பாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது.

    இந்த தாக்குதலில் மாணவர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நம்பிராஜன் தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த நவீனுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • ஜெகன் (40) என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்துக்குள் புகுந்து தண்ணீர் பாய்க்க பயன்படுத்தப்படும் குழாய்கள் உள்பட சுமார் ரூ.10 லட்சம் பொருட்களை சேதப்படுத்தினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வை சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மகன் முகில்(வயது 20). இவர் தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த நவீனுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    சமாதானம்

    கடம்போடுவாழ்வு ரோட்டில் சென்ற போது, மற்றொரு தரப்பை சேர்ந்த ராஜா உள்பட சிலர் சேர்ந்து தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து முகிலின் மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் தங்களுக்குள் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் இந்த சமரசத்தை ஏற்றுக்கொள்ளாத கடம்போடுவாழ்வை சேர்ந்த ராஜா உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் இரவில் முகில் தரப்பினர் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து முத்து(75) என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள மோட்டார் அறைக்கு தீ வைத்தனர்.

    வழக்குப்பதிவு

    தொடர்ந்து அந்த கும்பல், ஜெகன் (40) என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்துக்குள் புகுந்து தண்ணீர் பாய்க்க பயன்படுத்தப்படும் குழாய்கள் உள்பட சுமார் ரூ.10 லட்சம் பொருட்களை சேதப்படுத்தினர்.

    இதுபற்றி தகவல் அறிந்து களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கடம்போடு வாழ்வை சேர்ந்த சின்னத்துரை மகன்கள் ராஜா, முத்து மற்றும் மாரியப்பன் மகன்கள் வெள்ளையன், கொம்பையா உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இடத்தை சுத்தம் செய்வது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகில் கணபதிபாளையம் கூட்டுறவு சொசைட்டி அருகே ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இந்த நிலையில்,அங்குள்ள இடத்தை சுத்தம் செய்வது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பினர் கொடுத்த புகாரையடுத்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • தி.மு.க.- விடுதலை சிறுத்தை கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
    • அலெக்ஸ், சகோதரர் ஜெயக்குமார், சதீஷ்குமார், சதீஷ் சகோதரர் மற்றும் சிறுத்தை ராஜா உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வைத்தியநாதபுரம், கங்காணி சந்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி. சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் எஸ்.எஸ்.காலனி பழைய போலீஸ் நிலையம் அருகில், கட்சிக்கொடியேற்ற முயன்றனர்.

    இதற்கு அதே பகுதியை சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கினர். இது தொடர்பாக சதீஷ்குமார், எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ரமேஷ் (48), மணிகண்டன், கார்த்திக், அவரது சகோதரர் மற்றும் சிலரை தேடி வருகிறார்.

    இதே வழக்கில் ராஜீவ்காந்தி நகர், ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ், சகோதரர் ஜெயக்குமார், சதீஷ்குமார், சதீஷ் சகோதரர் மற்றும் சிறுத்தை ராஜா உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கே. கே. நகரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது
    • 2 பேருக்கு அருவாள் வெட்டு

    திருச்சி:

    திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் நேற்று இரவு உடையான் பட்டி அருகே வார சந்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இதனை பார்த்த உடையான் பட்டி பகுதியை சேர்ந்த கதிர்வேலு என்பவர், பழனிச்சாமியின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி மெதுவாக செல்லும்படி கூறியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறி உள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஆத்திரம் அடங்காத பழனிச்சாமி செம்பட்டு பகுதிக்கு சென்று விக்கி, கோபாலகிருஷ்ணன், பாலமுருகன், ராஜா, அண்ணாமலை, ராஜ்குமார், நாகராஜ் உள்ளிட்டோரை அழைத்துக்கொண்டு மீண்டும் உடையான் பட்டி வார சந்தைக்கு வந்து அங்கு இருப்பவர்களிடம் தகராறு செய்து ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

    இதில் கோபாலகிருஷ்ணன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து கே.கே. நகர் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ் என்பவரை 2020-ம் ஆண்டு எதிர்த்தரப்பினர் கொலை செய்தனர்.
    • சுபாஷ் தரப்பை சேர்ந்த அமிர்தலிங்கத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் கீழ் அருங்குணம்பகுதியை சேர்ந்தவர் கவியரசு(வயது 23).இவரது தந்தை தங்கவேலுவை கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த நபர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்தனர். இதனை தொடர்ந்து பழிக்கு பழி வாங்கும் சம்பவமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ் என்பவரை 2020-ம் ஆண்டு எதிர்த்தரப்பினர் கொலை செய்தனர். இதன் காரணமாக2 தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கவியரசு, அவரது உறவினர் ராஜதுரை ஆகியோர் குச்சிபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக 2 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததனர். மேலும் சுபாஷ் தரப்பை சேர்ந்த அமிர்தலிங்கத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த மோதலில் ராஜதுரை மற்றும் அமிர்தலிங்கம் ஆகியவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் கீழ் அருங்குணம் சேர்ந்தவர்கள் சேதுபதி, கண்ணதாசன், ஆகாஷ், ஸ்ரீதர், பாஸ்கர் ஆகியோர் மீதும் அமிர்தலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கவியரசன், ராஜதுரை என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சேதுபதி, கண்ணதாசன், கவியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • நெட்டப்பாக்கம் அருகே நிலத்தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • இந்த நிலையில் மதியம் முத்து கிருஷ்ணன் தனது நிலத்தில் விவசாயம் செய்ய டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே நிலத்தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

    நெட்டப்பாக்கம் அருகே முளப்பாக்கம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது62). விவசாயி. இவரது நிலத்துக்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த பழனிராஜா என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

    இந்த நிலையில் மதியம் முத்து கிருஷ்ணன் தனது நிலத்தில் விவசாயம் செய்ய டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டார். அப்போது டிராக்டர் பழனிராஜா நிலத்தின் வழியே சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு பழனிராஜா எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் இருவருக்கு வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

    இதுகுறித்து இவரும் தனித்தனியே நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரு பிரிவினரிடையே மோதல் பெண்ணாடத்தில் பதட்டம்-போலீஸ் குவிப்பு

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் திருவட்ட த்துறை கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பை சேர்ந்த 6 இளைஞர்கள் 3 இருசக்கர வாகனங்களில் திருவட்டத்துறையிலிருந்து பெண்ணாடம் நோக்கி விருத்தாசலம் - திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரவு 9 மணியளவில் வந்து கொண்டிருந்தனர்.

    பெண்ணாடம் அம்பேத்கர் நகர் அருகே வந்த போது அவர்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இன்னொரு பிரிவை சேர்ந்த 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு பிரிவினரும் தாக்கி கொண்டனர்.

    இதற்கிடையில் ஒருதர ப்பினர் இந்த தாக்குதலை கண்டித்து மறியல் செய்தனர்.

    தகவலறிந்து வந்த விருத்தாச்சலம் ஏ.எஸ்.பி., அங்கித்ஜெயின், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் இரவு பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு வந்த போலீஸ் சூப்பிபரண்டு சக்தி கணேஷ் சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டார் . பெண்ணாடத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவி வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக 2 தரப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    • ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருப்பூர் :

    திருப்பூர் பி.என் ரோடு சாந்தி தியேட்டர் அருகில் வேன் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு ஏராளமான வேனை நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.இந்த நிலையில் வேனை நிறுத்துவதில் டிரைவர்கள் ராஜா மற்றும் வசீகரன் ஆகியோரு கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜாவின் நண்பர்கள் ஆனந்த் சிவகுமார் ஆகியோர் நேற்று இரவு வேன் ஸ்டாண்டிலிருந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் வசீகரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு வந்துள்ளனர்.

    அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில் அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் சமாதியாக தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த வசீகரனின் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து ஆனந்த் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரையும் சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் இரண்டு பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தில் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக வேன் டிரைவர்கள் விக்னேஷ், காளிதாஸ் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோதலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 2 பேருக்கும் முன் விரோதம் உள்ளது.

    மதுரை

    பழங்காநத்தம், பசும்பொன் நகர், ஜீவா தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (60). இவரும் ராமலிங்க நகரை சேர்ந்த விக்னேஷ் குமார் (34) என்பவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வருகின்றனர். 2 பேருக்கும் முன் விரோதம் உள்ளது. நேற்று கந்தசாமி ராமலிங்க நகருக்கு வந்தார்.

    அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கந்தசாமிக்கு அடி, உதை விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக கந்தசாமி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் விக்னேஷ் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், சாமுவேல் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • சிறிது நேரத்தில் இருதரப்பு மாணவர்களுக்கும் ஆதரவாக மேலும் சில மாணவர்கள் சேர்ந்து கொண்டனர்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

    நெல்ைல:

    பாளை சமாதானபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். நேற்று மாலை வகுப்பில் இருந்து வெளியே வந்த மாணவர்களில் 3 பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அவர்கள் இரு பிரிவாக பிரிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இருதரப்பு மாணவர்களுக்கும் ஆதரவாக மேலும் சில மாணவர்கள் சேர்ந்து கொண்டனர்.

    பின்னர் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் கும்பலாக தாக்கி கொண்டனர். இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை விலக்கிவிட்டனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடையே சமரசம் ஏற்படுத்தினர். இந்நிலையில் பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீகா மற்றும் போலீசார் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது இனி இதுபோன்று மாணவர்கள் மோதலில் ஈடுபட்டால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    கடந்த ஆண்டு இதேபள்ளியில் சில மாணவர்கள் கும்பலாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அப்ேபாதைய இன்ஸ்பெக்டர் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் திருக்குறள் எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினார். இந்நிலையில் தற்போது அந்த பள்ளியில் மீண்டும் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

    ×