search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "clash"

    • பூ வியாபாரிகள் மோதல்; 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வியாபாரிகள், போலீசார் விசாரணை, Clash, arrested

    மதுரை

    திருப்பரங்குன்றம் கீழத்தெருவை சேர்ந்த பழனிவேல் மனைவி புஷ்பவல்லி (வயது28). இவர் கோவில் முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகன் மதன் (30). இவரும் கோவில் முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்குள் வியாபாரம் செய்வது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அவர்க ளிடையே வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட போட்டியில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொ ண்டனர். இந்த மோதலில் மதன், அவரது தாய் செல்வி, சகோதரி உமாராணி, மாமா ராஜபாண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து புஷ்ப வல்லியை ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து புஷ்பவல்லி, திருப்பரங் குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனையும், அவருடைய மாமா ராஜபாண்டியையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ராஜபாண்டி தரப்பிலும் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் புஷ்ப வல்லி, சரவணன், கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சரவணன், கணேசன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலைமை ஆசிரியையை சக ஆசிரியைகள் அங்குள்ள வயல்வெளியில் தள்ளி கடுமையாக தாக்கினர்.
    • வகுப்பறை ஜன்னல்களை மூடுவது தொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் மோதல்

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியைக்கும், இரண்டு ஆசிரியைகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    ஆசிரியைகளில் ஒரு தரப்பினர் வகுப்பறையின் ஜன்னல்களை மூடுமாறு கூறி உள்ளனர். மற்றொரு தரப்பினர் அதற்கு மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தலைமை ஆசிரியை வகுப்பறையை விட்டு வெளியேறினார். ஆனால் அவரை துரத்தி வந்த இரண்டு ஆசிரியைகள், தலைமை ஆசிரியையை அங்குள்ள வயல்வெளியில் தள்ளி சரமாரியாக அடித்தனர். செருப்பாலும் தாக்கினர். அதன்பின்னர் அந்த வழியாக சென்ற சிலர் சண்டையை விலக்கிவிட்டுள்ளனர். சக மாணவர்கள் வேடிக்கை பார்க்க ஆசிரியைகள் அடித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இரு ஆசிரியைகளுக்கிடையே உள்ள தனிப்பட்ட தகராறு காரணமாக, பள்ளியில் மோதிக்கொண்டதாக கல்வி அதிகாரி நரேஷ் கூறினார். மேலும், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் நரேஷ் கூறினார்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்து வைத்தனர்.
    • என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே தொடர்ந்து எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில் இந்த உத்தரவால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி இந்து அறநிலையத்துறை மூலம் பிரசித்தி பெற்ற கோவில்க ளுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவி லுக்கென தனி அதிகாரி இல்லாமல் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.

    மேலும் புதியதாக அறங்காவலர் குழுவை தேர்ந்தெடுக்க கூடாது என்று நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.  இந்த நிலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த பாகூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா அடுத்த மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதற்காக இந்து அற நிலைத்துறை அறங்காவல் குழுவுடன் புதிதாக தீ மிதி திருவிழாவிற்கென 9 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது.

    இந்த குழு வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்தில் இருந்து ஜூன் மாதம் 18-ந் தேதி வரை அதிகாரத்தில் இருக்குமென அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி மற்றும் கோவில் பத்திரிகை படையல் நிகழ்ச்சியும்  நடைபெற்றது.

    இந்த நிலையில் தீமிதி குழுவை அழைக்காமல் அறங்காவல் குழு விழா ஏற்பாடுகளை செய்து இருந்தது. மேலும் பத்திரிக்கை படையலிட்டது. இதனால் தீமிதி விழா குழு தனியாக பத்திரிகை எடுத்து வந்து படையலிட வலியு றுத்தியதுடன், அறங்காவல் குழுவிற்கு அதிகாரம் இல்லை என பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் இரு தரப்பும் வாய்தகராறில் ஈடுபட்டனர். பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்து வைத்தனர். இருந்தபோதும் இரு தரப்பும் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

     இந்து அறநிலைத்துறை குளறுபடியான உத்தரவால் பாகூர் தொகுதியில் தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே தொடர்ந்து எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில் இந்த உத்தரவால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி அமைதியான முறையில் திருவிழா நடத்த அரசு மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்கினர்.
    • கலவரம் விவகாரம் தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள பழைய நகர காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்கினர். இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். அந்த கும்பல் சில வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தங்கள் பலத்தை பயன்படுத்தி கும்பலை கலைத்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்த, வன்முறையைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.
    • வன்முறையைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள பழைய நகர காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித்தாக்கினர். மேலும் அந்த கும்பல் சில வாகனங்களையும் சேதப்படுத்தியது.

    அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தங்கள் பலத்தை பயன்படுத்தினர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது.

    இந்நிலையில், அகோலாவில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • போதையில் இருந்த 2 பேரையும் போலீசார் பரிசோதனை செய்ய முயன்றனர்.
    • சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை நெல்சன் மாணிக்கம் ரோடு சந்திப்பில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் லோகிதக்கன், காவலர் வெள்ளதுரை ஆகியோர் அந்த வழியாக சென்ற வாகனங்களை மடக்கி உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதமும் விதித்து வந்தனர்.

    இந்த நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் வாகன ஆவணத்தை கேட்டனர். அப்போது இருவரும் இது எங்கள் சித்தப்பா வாகனம் என்றும், ஆவணங்கள் வீட்டில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

    போதையில் இருந்த 2 பேரையும் போலீசார் பரிசோதனை செய்ய முயன்றனர். அதற்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. பிடிபட்டவர்களில் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். எங்களை போலீசார் பிடித்து வைத்துள்ளனர். உடனே வாருங்கள் என்று கூறினார்.

    அப்போது சம்பவ இடத்துக்கு பெண் ஒருவர் வந்தார். அவரது கணவரும் உறவினருமே போலீசில் பிடிபட்டிருப்பது தெரிய வந்தது. 2 பேரையும் விடுவிக்குமாறு கூறி அந்த பெண் அதிரடி காட்டினார். போலீசாருடன் கடுமையான மோதலில் ஈடுபட்ட அவர் ஆபாச வார்த்தைகளையும் அள்ளி வீசினார். இதனை காவலர் வெள்ளதுரை வீடியோவாக பதிவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தான் வைத்திருந்த தொப்பியால் திடீரென தாக்குதலிலும் ஈடுபட்டார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் உள்பட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தகவல் அறிந்ததும் அவர்களுடன் குளத்தூர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு துலுக்கன்குளம் புதியபூக்கள் கபடி குழு சார்பாக கபடி போட்டி நடைபெற்றது.

    இதில் கலைஞானபுரம் அணியும், சிலுவைபுரம் அணியும் மோதினர். இதில் சிலுவைபுரம் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தோல்வி அடைந்த அணியை மற்றொரு அணியினர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு தரப்பை சேர்ந்த 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கலைஞானபுரம் தொண்டியம்மாள் என்பவர் வீட்டின் வழியாக சென்ற போது அதிகமான ஒலி எழுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனை தொண்டியம்மாள் என்பவர் கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது.

    தகவல் அறிந்ததும் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் கிராமத்திற்கு சென்று கற்களால் மாறி, மாறி தாக்கி கொண்டனர். அப்போது இருதரப்பினரும் காயம் அடைந்தனர். இதில் பொன்னுச்சாமி, பள்ளி மாணவி பிரியதர்ஷினி, மாடசாமி, பரமசிவம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் தலையில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி நள்ளிரவு துலுக்கன்குளத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அவர்களுடன் குளத்தூர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    எனினும் அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் இன்று காலை நீடித்தது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வாலிபர் அஜய் சாமி ஊர்வலத்தில் ஏன் அதிக சத்தத்துடன் மேளம் அடித்து வருகிறீர்கள் என தட்டிக் கேட்டார்,. இதனால், இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அஜயை அரிவாளால் வெட்டினார்கள்.

    கடலூர்:

    புவனகிரி அருகே சாமி ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் வாலிபருக்கு வெட்டு விழுந்தது. மாசிமகத்தை யொட்டி புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடியை சேர்ந்த பொதுமக்கள் சாமியை தீர்த்தவாரிக்கு கடற்கரைக்கு கொண்டு சென்றனர். தீர்த்தவாரி முடிந்ததும் சாமியை மீண்டும் ஊர்வலமாக எடுத்து வந்தனர்  புவனகிரி அருகே உள மேலமானகுடி பகுதியில் சாமியை கொண்டு வந்த போது அப் பகுதியை சேர்ந்த வாலிபர் அஜய் சாமி ஊர்வலத்தில் ஏன் அதிக சத்தத்துடன் மேளம் அடித்து வருகிறீர்கள் என தட்டிக் கேட்டார்.   இதனால் சாமியை ஊர்வமாக கொண்டு வந்தவர்கள் ஆக்திரம் அடைந்தனர். இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அஜயை அரிவாளால் வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  இந்த தகராறில் எதிர் தரப்பை சேர்ந்த 4 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி ள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது
    • இதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அரசுப் பள்ளியில் நத்தமேடு, குமுடிமுளை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

     சேர்ந்த மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி பள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.அதன்படி நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து மாணவர்கள் வீடு திரும்பினர். அப்போது அரசு பஸ்சின் படிகட்டில் தொங்கியபடி செல்வதில் மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுஇதில் நத்தமேடு மாணவர்கள், குமுடிமுளை மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து குமுடிமுளை மாணவர்கள் மருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் மாணவர்களாவர்கள். அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 3 பேரை சிறையில் அடைத்தனர்.

    • திண்டிவனத்தில் வேலையை முடித்துவிட்டு வானூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
    • அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் சந்தை புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாவாடை ராயன் (வயது 27). இவரது நண்பர் வேல்முருகன் (30). இவர் வானூர் பகுதியை சேர்ந்தவர்.இவர்கள் 2 பேரும் நேற்று இரவு திண்டிவனத்தில் வேலையை முடித்துவிட்டு வானூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். வானூர் அருகே தென்கோடிபாக்கம் மெயின்ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 ேபரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவாடைராயன் இறந்தார். வேல்முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து கிளியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி கண்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தவளக்குப்பம் அருகே நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். மீனவர். இவரது மகன் சுரேந்தர் (வயது23). அங்குள்ள கடற்கரை பகுதியில் வளை பின்னும் கட்டிடம் அருகில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன் தன்னை பற்றித்தான் சுரேந்தர் பேசுவதாக கருதி அவரிடம் தகராறு செய்தார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். மீனவர். இவரது மகன் சுரேந்தர் (வயது23). அங்குள்ள கடற்கரை பகுதியில் வளை பின்னும் கட்டிடம் அருகில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன் தன்னை பற்றித்தான் சுரேந்தர் பேசுவதாக கருதி அவரிடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.

    அப்போது ஆத்திரமடைந்த பிரவீன் தகாத வார்த்தைகளால் திட்டி சுரேந்தரை கையால் தாக்கினார். இதையடுத்து சுரேந்தர் இதுபற்றி போலீசில் புகார் செய்யப்போவதாக தெரிவித்த போது உன்னை இங்கிருந்து உயிரோடு விட்டால்தானே போலீசில் புகார் செய்வாய் என கூறியப்படியே பிரவீன் அங்கிருந்த தடியை எடுத்து சுரேந்தரை தாக்கினார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த சுரேந்தரை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து சுரேந்தரின் தந்தை பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓட்டேரியில் மாதா ஆலய தேர் ஊர்வலத்தில் மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்பத்தூர்:

    ஓட்டேரி, சத்யவானி முத்துநகரில் மாதா ஆலயம் உள்ளது. இங்கு நடைபெற்ற விழாவையொட்டி நேற்று இரவு தேர் ஊர்வலம் நடந்தது.

    நள்ளிரவு ஒரு மணியளவில் தேர் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அவர்கள் கத்தி, அரிவாள், கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இந்த மோதலில் இருதரப்பையும் சேர்ந்த அசோக்குமார், ராஜன், அர்ஜூன், தர்மா, விக்னேஷ் உள்பட 10 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இதனால் நள்ளிரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் தலைமைச் செயலக காலனி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உடனே மோதலில் ஈடுபட்டவர்கள். அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    மோதலில் படுகாயம் அடைந்த 10 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான நிலை நீடித்து வருகிறது.

    மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டு உள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×