search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 arrested"

    • போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    சங்கராபுரம், மே.20-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, ராஜா தலைமையிலான போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேஷசமுத்திரம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சோ்ந்த ஜெயராமன்(வயது 63), அம்பிகா(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் அரசம்பட்டு கிராமத்தில் சாராயம் விற்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ்(44), ஆரூர் கிராமத்தில் சாராயம் விற்ற அர்ச்சுனன்(75), குளத்தூரில் சாராயம் விற்ற செல்வம்(40) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து மொத்தம் 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமை யில் போலீசார் திடீர் ரோந்துப் பணியில் ஈடு பட்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் சட்ட விரோதமாக மது மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமை யில் போலீசார் திடீர் ரோந்துப் பணியில் ஈடு பட்டனர்.

    அப்போது மது விற்றதாக கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த முருகேசன், கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். வட்டமலை பகுதியில் ஓட்டலில் மது குடிக்க அனுமதித்த உரிமை யாளர்கள் முருகையன், இளங்கோ ஆகியோரையும், நாராயணநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த சண்முகம் எனபவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சுஷ்வந்த் உக்கடம்-பேரூர் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார்.
    • செல்போன் பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் சுஷ்வந்த் (30), போட்டோர் கிராபர். சம்பவத்தன்று இவர் உக்கடம்-பேரூர் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சுஷ்வந்தை வழிமறித்து அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து சுஷ்வந்த் பெரியகடைவீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மவுலிதரன் (19), தெலுங்குபாளையத்தை சேர்ந்த சஞ்சய் (22), செல்வபுரத்தை சேர்ந்த சதீஷ் குமார் (26), சூலூரை சேர்ந்த மகேந்திரன் (25) மற்றும் சுங்கத்தை சேர்ந்த அலெக்ஸ் (23) என்பது தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி ள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது
    • இதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அரசுப் பள்ளியில் நத்தமேடு, குமுடிமுளை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

     சேர்ந்த மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி பள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.அதன்படி நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து மாணவர்கள் வீடு திரும்பினர். அப்போது அரசு பஸ்சின் படிகட்டில் தொங்கியபடி செல்வதில் மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுஇதில் நத்தமேடு மாணவர்கள், குமுடிமுளை மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து குமுடிமுளை மாணவர்கள் மருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் மாணவர்களாவர்கள். அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 3 பேரை சிறையில் அடைத்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் நான்கு ரோடு அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 5 பேர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1050 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் நான்கு ரோடு அருகே உள்ள ஒரு மறைவிடத்தில் சிலர் பணம் வைத்து சூதாட்டிக் கொண்டிருப்பதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பரமத்தி வேலூர் மீனவர் தெருவை சேர்ந்த செல்வம் (வயது 20),பொத்தனூர், பாலாஜி நகரை சேர்ந்த கார்த்திக் (27), அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (39), பரமத்திவேலூரைச் சேர்ந்த மலையாளி (53), மோகனூர் மணப்பள்ளியைச் சேர்ந்த குரு (29) ஆகிய 5 பேர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1050 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலத்தில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள பைப் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பைப் மற்றும் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தற்போது தனியார் தொலைதொடர்பு நிறுவனம் 5ஜி இணைப்பு கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளது.

    இதற்காக நகர் முழுவதும் புதிதாக பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் காமராஜபுரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இங்கு 49 பைப்புகள் ஒரு இடத்தில் தொலைதொடர்பு நிறுவனம் சார்பில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் 29 பைப்புகளை கடந்த 2-ந் தேதி முதல் காணவில்லை. இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவன மேலாளர் மதுரை கூடல்நகரை சேர்ந்த சீனிநிதன் கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.இதில் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சென்னப்ப நாயக்கனூரைச் சேர்ந்த சுரேஷ் (வயது35) மற்றும் ஆரப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (42), செல்லூர் விஸ்வநாதன் (40), கோரிப்பாளையம் பிரவீன்ராஜ் (32) உள்பட 5 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பைப் மற்றும் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    • திருச்சியில் கஞ்சா விற்பனை 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    திருச்சி

    போதை பொருட்களான கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனிப்படை அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கிறார்கள். இருந்தபோதிலும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருச்சி தீரன் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மயிலாடுதுறை வடக்கு ெரயில்வே காலனி பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1,330 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோன்று கண்டோன்மென்ட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சோமரசம்பேட்டை வாசன் சிட்டி பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (28) என்பவரை கண்டோன்மென்ட் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    திருச்சி இ.பி. ரோடு மகாராணி திரையரங்கு அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கோட்டை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த முத்துக்கருப்பன் (27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் காந்தி மார்க்கெட் சூரஞ்சேரி பால பத்திரகாளி கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காந்தி மார்க்கெட் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் பாலக்கரை காஜாப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக பாலக்கரை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடத்தியதில் அங்கு காஜாப்ேபட்டை அண்ணா நகரை சேர்ந்த பிலாலுதீன் (27) என்பவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து 1,100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • மதுரை பகுதியில் 25 கிலோ கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    மதுரை

    மதுரையில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாக உள்ளனர். இதுபற்றி தொடர்ந்து புகார் வந்ததால் கஞ்சா விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷ னர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் ரீகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் நேற்று வைகை வடகரை, குமரன் சாலை சந்திப்பு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு ஆட்டோ வந்தது. அதில் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர்.அவர்களிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர். இதில் அவர்கள் மறைத்து வைத்திருந்த 23 கிலோ 500 கிராம் கஞ்சா, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுச்சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் செல்லூர், கீழத்தோப்பைச் சேர்ந்த தங்கபாண்டியன் (வயது 42), அவரது மனைவி மகாலட்சுமி, கல்பாலம் செல்வீர் (26), மகேஸ்வரன் (42) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் மதுரை உத்தபுரம் தோட்டத்தில் முதியவர் ஒருவர் கஞ்சா பதுக்கி விற்பனை செய்து வருவதாக எழுமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை சோதனை நடத்தினர். அப்போது முதியவர் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உத்தப்புரம் தெற்குதெருவை சேர்ந்த நாகன் (72) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுகுடித்து விட்டு ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    பெரியக்கடை போலீசார்  காந்திவீதி-தியாகு முதலியார் வீதி சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் மது குடித்து விட்டு போதையில் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார்  அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்த முகமது அலி (வயது50) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் உப்பளம் அம்பேத்கர் சாலை  துறைமுக வாயில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் மது குடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் உப்பளம் ராசுஉடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த ஜோசப்(36), கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த வேலவன்(24), லாஸ்பேட்டை எழில் நகரை சேர்ந்த சதீஷ்(25) மற்றும் விழுப்புரம் அத்தியூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் சண்முகாபுரம் பகுதியில்  பொது இடத்தில் ரகளை செய்த வடக்கு பாரதிபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் குண்டுமணி(30) என்பவரை மேட்டுப்பாளையம் போலீசாரும், கன்னியக்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த அதே பகுதியை சேர்ந்த தேவா என்ற தேவநாதன்(35) என்பவரை கிருமாம்பாக்கம் போலீசாரும் கைது செய்தனர்
    ×