

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் நான்கு ரோடு அருகே உள்ள ஒரு மறைவிடத்தில் சிலர் பணம் வைத்து சூதாட்டிக் கொண்டிருப்பதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பரமத்தி வேலூர் மீனவர் தெருவை சேர்ந்த செல்வம் (வயது 20),பொத்தனூர், பாலாஜி நகரை சேர்ந்த கார்த்திக் (27), அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (39), பரமத்திவேலூரைச் சேர்ந்த மலையாளி (53), மோகனூர் மணப்பள்ளியைச் சேர்ந்த குரு (29) ஆகிய 5 பேர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1050 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.