குறிஞ்சிப்பாடி அருகேஅரசு பள்ளி மாணவர்கள் மோதல்:5 பேர் கைது

மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி ள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறதுஇதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.
குறிஞ்சிப்பாடி அருகேஅரசு பள்ளி மாணவர்கள் மோதல்:5 பேர் கைது
Published on

கடலூர்:

குறிஞ்சிப்பாடி அரசுப் பள்ளியில் நத்தமேடு, குமுடிமுளை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

 சேர்ந்த மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி பள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.அதன்படி நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து மாணவர்கள் வீடு திரும்பினர். அப்போது அரசு பஸ்சின் படிகட்டில் தொங்கியபடி செல்வதில் மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுஇதில் நத்தமேடு மாணவர்கள், குமுடிமுளை மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து குமுடிமுளை மாணவர்கள் மருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் மாணவர்களாவர்கள். அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 3 பேரை சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com