கோவை வாலிபரிடம் செல்போன் பறித்த 5 பேர் கைது

சுஷ்வந்த் உக்கடம்-பேரூர் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். செல்போன் பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை வாலிபரிடம் செல்போன் பறித்த 5 பேர் கைது
Published on

கோவை,

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் சுஷ்வந்த் (30), போட்டோர் கிராபர். சம்பவத்தன்று இவர் உக்கடம்-பேரூர் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சுஷ்வந்தை வழிமறித்து அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து சுஷ்வந்த் பெரியகடைவீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மவுலிதரன் (19), தெலுங்குபாளையத்தை சேர்ந்த சஞ்சய் (22), செல்வபுரத்தை சேர்ந்த சதீஷ் குமார் (26), சூலூரை சேர்ந்த மகேந்திரன் (25) மற்றும் சுங்கத்தை சேர்ந்த அலெக்ஸ் (23) என்பது தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com