என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருச்சியில் கஞ்சா விற்பனை 5 பேர் கைது
  X

  திருச்சியில் கஞ்சா விற்பனை 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சியில் கஞ்சா விற்பனை 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

  திருச்சி

  போதை பொருட்களான கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனிப்படை அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கிறார்கள். இருந்தபோதிலும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில் திருச்சி தீரன் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மயிலாடுதுறை வடக்கு ெரயில்வே காலனி பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1,330 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  அதேபோன்று கண்டோன்மென்ட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சோமரசம்பேட்டை வாசன் சிட்டி பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (28) என்பவரை கண்டோன்மென்ட் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  திருச்சி இ.பி. ரோடு மகாராணி திரையரங்கு அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கோட்டை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த முத்துக்கருப்பன் (27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  மேலும் காந்தி மார்க்கெட் சூரஞ்சேரி பால பத்திரகாளி கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காந்தி மார்க்கெட் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  அதேபோல் பாலக்கரை காஜாப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக பாலக்கரை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடத்தியதில் அங்கு காஜாப்ேபட்டை அண்ணா நகரை சேர்ந்த பிலாலுதீன் (27) என்பவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து 1,100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  Next Story
  ×