என் மலர்
இந்தியா

இரு தரப்பினரிடையே மோதல் - மகாராஷ்டிராவின் அகோலாவில் 144 தடை உத்தரவு
- மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.
- வன்முறையைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள பழைய நகர காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித்தாக்கினர். மேலும் அந்த கும்பல் சில வாகனங்களையும் சேதப்படுத்தியது.
அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தங்கள் பலத்தை பயன்படுத்தினர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது.
இந்நிலையில், அகோலாவில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story






