search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cell phones"

    • ரூ.10.40 லட்சம் மதிப்புள்ள 52 ஸ்மார்ட் செல்போன்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
    • வேறு வங்கி கணக்கு எண்ணுக்கு அனுப்பிய ரூ.10 ஆயிரம் தொகையும் திரும்ப பெறப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் மற்றும் திருடிச் சென்ற செல்போன்களை மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கலந்து கொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.

    இதன்படி ரூ.10.40 லட்சம் மதிப்புள்ள 52 ஸ்மார்ட் செல்போன்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் பே.டி.எம், மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.3 லட்சம் பணத்தை வங்கி மற்றும் பேடிஎம், நிர்வாகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு உரியவரிடம் கொடுக்கப்பட்டது.மேலும் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டுவின் கார் டிரைவர், தவறுதலாக வேறு வங்கி கணக்கு எண்ணுக்கு அனுப்பிய ரூ.10 ஆயிரம் தொகையும் திரும்ப பெறப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் பண மோசடி நீலகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையம் மூலம் ஆன்லைன் பண மோசடி, லோன் ஆப் மூலம் மோசடி, மார்பிங், ஆன்லைன் மூலம் ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுவரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 67 வழக்குகளுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 679 புகார்கள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நடந்த சைபர் கிரைம் வழக்குகளில் இதுவரை ரூ.6 கோடியே 1 லட்சத்து 67 ஆயிரத்து 232 பணம் மோசடி பேர்வழிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளது. இதில் ரூ.8 லட்சத்து 52 ஆயிரத்து 230 மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர சுமார் ரூ.4 கோடியே 39 லட்சத்து 90 ஆயிரத்து 404 பணம் செல்லாமல் வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. முடக்கப்பட்டுள்ள பணம் நீதிமன்ற உத்தரவு பெற்று மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை தொலைந்து போன 129 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மோசடி தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிலிப், சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி, சப் இன்ஸ்பெக்டர்கள் கலைவாணி, யசோதா மற்றும் போலீசார் பிரவீன், கருணாகரன், ஜெகதீஸ், கண்ணன் உள்பட பலர் இருந்தனர்

    • மதுரை அருகே கட்டிட காண்டிராக்டரிடம் பணம், செல்போன்கள் திருடப்பட்டன.
    • இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சக்தி சிவராஜ் (வயது 36). கட்டிட கான்ட்ராக்டரான இவர் மதுரை துவரிமான் மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கி, நாகமலை புதுக்கோட்டையில் திருமண மண்டபம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தி தங்க வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் சக்தி சிவராஜ் சம்பவத்தன்று இரவு அறையில் படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அவர் வைத்திருந்த 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை காணவில்லை. இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் அறைக்குள் புகுந்து பணம் மற்றும் செல்போன்களை திருடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி மேற்கண்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லேப்டாப், 3 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்.

    பட்டீஸ்வரம்:

    தஞ்சை மாவட்டம் அய்ய ம்பேட்டை கடைத்தெருவில் உள்ள ஒரு இடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரன்ட் பூரணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து இதில் சம்பந்தபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யுமாறு அய்யம்பேட்டை போலீசா ருக்கு உத்தரவிட்டார்.

    அதன் அடைப்படையில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கு மார் தலைமையில் போலீசார் அருண் மற்றும் கார்த்திக் ஆகியோர் அய்யம்பேட்டை கடைவீதியில் உள்ள காம்ப்ளக்ஸில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த முகமது ரஃபீக் (வயது48), அவரது மனைவி மும்தாஜ் பேகம் (44) ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் ஆன்லைன் லாட்டரி வியாபாரத்திற்கு பயன்படுத்திய லேப்டாப், 3 செல்போன்கள், மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கைப்பற்றி தம்பதியினர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், ராசா மிராசுதாரர் மருத்துவமனை உள்பட மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதையடுத்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில்
    சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் , ஏட்டு செந்தில் குமார் மற்றும் போலீசார்
    காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    மாயமான செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் ஈரோடு, நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் சிலர் ஏற்கனவே கடைகளில் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர்களிடம் செல்போன்களை போலீசார் மீட்டனர்.

    மேலும் சில செல்போன்கள் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் சில இடங்களில் உள்ள கடைகளில் விற்கப்பட்டதும் தெரியவந்தது. அதனை ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர்.

    சில செல்போன்களை கீழே கிடந்ததாக பொதுமக்கள் சிலர் போலீசிடம் ஒப்படைத்தனர். இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.

    இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரா முன்னிலையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா இன்று சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.

    அப்போது அவர், கஷ்டப்பட்டு செல்போன்கள் வாங்குகிறீர்கள். அதனை சரியான முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.

    பெண் ஊழியரிடம்நைசாகபேசிபெண் ஊழியரின்செல்போனை அபேஸ்செய்துகொண்டுஅங்குஇருந்துவெளியே சென்றான்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராமசாமி தெருவில் சூப்பர்மார்க்கெட் உள்ளது .இங்கு வந்த டிப்டாப் சாமி ஒருவன்,தான் முதியோர்காப்பகம் நடத்துவதாக கூறி ஒரு பிட் நோட்டீசுடன் கடைக்குள் புகுந்தான். .அங்கிருந்த பெண் ஊழியரிடம்நைசாகபேசிபெண் ஊழியரின்செல்போனை அபேஸ்செய்துகொண்டுஅங்குஇருந்துவெளியே சென்றான்.

    பின்னர் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் உள்ளமற்றொருகடையிலும் கைவரிசை காட்டி விலை உயர்ந்த செல்போனை அபேஸ் செய்துள்ளான்.

    இது குறித்து பண்ருட்டி போலீசர் விசாரித்து வருகிறார்கள். 

    • மாணவா்களுக்கு புத்தொளிப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
    • மாணவா்கள் முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவையாற்றும் போது சமுதாயத்தில் மதிக்கப்படுவாா்கள்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 மாணவா்களுக்கு புத்தொளிப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பேரிடா் காலங்களில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் பங்கு சிறப்பாக இருக்க வேண்டும். மாணவா்கள் முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவையாற்றும்போது சமுதாயத்தில் மதிக்கப்படுவாா்கள். அதே வேளையில், மாணவா்கள் சேவை மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். 

    இன்றைய காலகட்டத்தில் தேவைப்படும்போது மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்திவிட்டு மற்ற நேரங்களில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் வாழ்க்கையில் வெற்றியடையலாம் என்றாா்.இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • மானாமதுரையில் தி.மு.க. பூத் ஏஜெண்டுகளுக்கு செல்போன்களை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் தேர்தல் நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய 323 பாகமுகவர்களுக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளைமுன்னிட்டு மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தனது பரிசாக செல்போன் வழங்கினார். மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதியில் உள்ள ஒன்றியசெயலாளர்கள், நகரசெயலாளர்கள் ஆகியோருக்கும் செல்போன் வழங்கினார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் சேகரிக்கும், பாகமுகவர்கள் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ரொக்கபரிசு வழங்கபடும் என்று தமிழரசி எம்.எல்.ஏ. தெரிவித்தார். இந்த விழாவில் மாவட்ட துணை செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர்சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ.-இளையான்குடி ஒன்றிய செயலாளர் சுபமதியரசன், மானாமதுரை ஒன்றியசெயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை, நகர் செயலாளர் பொன்னுசாமி, இளையான்குடி நகர செயலாளர்-பேரூராட்சி தலைவர் நஜீமுதின், மானாமதுரை ஒன்றியகுழு துணைத்தலைவர் முத்துசாமி, ராஜகம்பீரம், மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர்கள் முஜிப்ரகுமான், முருக வள்ளி தேசிங்கு ராஜா, ஒன்றிய கவுன்சிலர் ராதாசிவசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 121 செல்போன்கள் மீட்கப்பட்டது.
    • உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.

    vசெல்போன்கள் ,recovery, மீட்பு, cell phones

    மதுரை

    மதுரை நகரில் மீனாட்சி அம்மன் கோவில் (7), தெற்கு வாசல் (2), திடீர்நகர் (17), திலகர் திடல் (10), திருப்பரங்குன்றம் (5), தல்லாகுளம் (39), செல்லூர் (10), அண்ணாநகர் (31) ஆகிய இடங்களில் தொலைந்து போன ரூ.12.10 லட்சம் மதிப்பு உடைய 121 செல்போன்கள் போலீசாரால் மீட்கப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

    மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.82.10 லட்சம் மதிப்பு உடைய மொத்தம் 821 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • தென்காசியில் பலரது செல்போன்கள் காணாமல் போனதாக மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
    • இந்த புகாரை விசாரணை செய்ய கூடுதல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

    தென்காசி:

    தென்காசியில் பலரது செல்போன்கள் காணாமல் போனதாக மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த புகாரை விசாரணை செய்ய கூடுதல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி, தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செண்பகப்பிரியா மற்றும் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதில் தொலைந்த மற்றும் திருடுபோன ரூ.7 லட்சம் மதிப்பிலான 62 செல்போன்கள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் தென்காசியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஒப்படைத்தார்.

    மேலும் செல்போன்களை தவறவிட்ட நபர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

    பின்னர் சிறப்பாக பணிபுரிந்து செல்போன்களை மீட்டு கொடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரி வித்தார்.

    செல்போன்களை பெற்றுக் கொண்ட நபர்கள் மாவட்ட போலீசாருக்கு தங்களின் நன்றியினை தெரிவித்தனர்.

    • ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை இருக்கும். அதனை வெளிப்படுத்த வேண்டும்.
    • சமூகவலைதளங்களில் அதிக அளவில் நண்பர்களை சேர்ப்பது தேவையற்றது. மனதை கட்டுப்படுத்தினால் பல விஷயங்களில் வெற்றி பெற முடியும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 56 அரசு பள்ளிக்கூடங்கள் உள்பட மொத்தம் 139 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 673 மாணவர்கள், 8 ஆயிரத்து 825 மாணவிகள் ஆக மொத்தம் 16 ஆயிரத்து 498 மாணவ, மாணவிகளுக்கு ரூ.8 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 175 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

    அமைச்சர் கீதாஜீவன்

    இதன் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 236 மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசியதாவது:-

    சைக்கிள் ஓட்டுவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. மேலும் கொரோனா காலத்துக்கு பிறகு மாணவ, மாணவிகளின் மனநிலை மாறி உள்ளது. படிக்காமல், பரீட்சை எழுதாமல் பாஸ் ஆகிவிடாலாமா என்று நினைக்கிறார்கள். அவ்வாறு பாஸ் ஆனால் எந்த பலனும் இருக்காது. அந்த எண்ணத்தை தூக்கி எறிந்து விட வேண்டும்.

    தினமும் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை படித்து விட்டால் எந்த சிரமமும் இருக்காது. எல்லோரும் 100 மதிப்பெண் பெற வேண்டும் என்று கூற மாட்டேன்.

    ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை இருக்கும். அதனை வெளிப்படுத்த வேண்டும். தேர்ச்சி பெறுவதற்காக மட்டும் படிக்கவில்லை. அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் படிக்கிறோம். ஆகையால் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும்.

    படிப்பு, விளையாட்டு, நண்பர்களுடன் இருத்தல் போன்ற ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும். டி.வி.சீரியல்களை மாணவிகளை அடிமைப்படுத்திவிடுகிறது. தற்போதைய சீரியல்கள் அறிவை வளர்க்கும் வகையில் இல்லை. அதே போன்று செல்போன்களை நல்ல விஷயங்களுக்காக மட்டும், தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். சமூகவலைதளங்களில் அதிக அளவில் நண்பர்களை சேர்ப்பது தேவையற்றது. மனதை கட்டுப்படுத்தினால் பல விஷயங்களில் வெற்றி பெற முடியும்.

    நல்ல முடிவு

    மாணவிகள் எப்போதும் நேர்மறை எண்ணம் கொண்ட வர்களாக இருக்க வேண்டும். சிறிய விஷயங்களுக்காக குழம்பக்கூடாது. பள்ளிக்கூடங்களில் உள்ள கட்டுப்பாட்டுக்கும், அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் உண்டு. அதனை மாணவிகள் புரிந்து கொள்ள வேண்டும். மாணவிகள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் கண்டிக்கிறார்கள். கீழ்படிதல் உள்ள மாணவ, மாணவிகள் நல்ல நிலையை அடைவார்கள். ஒவ்வொருவரும் தைரியமான குழந்தைகளாக இருக்க வேண்டும். மாணவிகள் எடுக்கும் நல்ல முடிவு வெற்றியைத் தரும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் புகார் கொடுக்க தயங்காதீர்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, தாசில்தார் செல்வக்குமார், கவுன்சிலர் பேபி ஏஞ்சலின், பள்ளி தலைமை ஆசிரியை ஞானம் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • அதன்படி காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் முழுமையாக இயங்கி வருகின்றது. இந்நிலையில் சமீப காலமாக கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல் இருமல், சளி அறிகுறி இருப்ப வர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

    அதன்படி காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதில் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படாமல் அவர்கள் அருகில் இருக்கும் மருத்து வமனை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

    மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தாக்கம் ஏற்பட்டு வருவதையடுத்து தடுப்பு நடவடி க்கையாக காலையில் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதில் காய்ச்சல், சளி அறிகுறி உள்ளவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனை ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதேபோல் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ள மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளோம். எனவே இதைப்பற்றி அச்சப்பட தேவையில்லை.

    இதேபோல் நமது மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் செல்போன்களை பயன்படுத்துவதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. எனினும் சோதனை செய்யும் போது செல்போன் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் ஜெயிலில் சென்னை கைதி மண்ணில் புதைத்து வைத்திருந்த 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #VelloreJail
    வேலூர்:

    சென்னை எண்ணூரை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 40). கொலை வழக்கில் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக தகவல் வந்தது.

    இதனையடுத்து ஜெயில் காவலர்கள் ஜெயில் வளாகத்தில் சோதனையிட்டனர். அப்போது கார்மேகம் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு பின்னால் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 செல்போன், ஒரு சிம்கார்டு சிக்கியது.

    இது குறித்து ஜெயில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கார்மேகம் 3 செல்போன்களை மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இது பற்றி பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் செல்போனில் இருந்து யாருடன் பேசி உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #VelloreJail
    ×