search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cell Phone"

    • மாணவ,மாணவிகள் செல்போனை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
    • விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கோடியே 54 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

    தொடர்ந்து அமைச்சர் கூறும் ேபாது,

    படித்து கற்றுத்தேர்ந்த மாணவர்கள் நடிகர், நடிகைகள், ஜாதி, மதம் பின்பு செல்வதை தவிர்க்க வேண்டும். படிக்கும் போது பகுத்தறிவோடு படிக்க வேண்டும்.

    பெற்றோர்கள் உழைத்துக்கொ ண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோர்களின் கனவை நினைவாக்குவதற்கு நாம் படித்து முன்னேற வேண்டும்.

    விழுப்புரத்திலிருந்து அரசுப்பள்ளியில் படித்த வீரமுத்துவேல், விஞ்ஞானியாகி சந்திராயன் 3 என்ற செயற்கைகோளினுடைய திட்ட இயக்குனராக பணியாற்றியவர்.

    விஞ்ஞானத்திலும் மற்ற தொழில்நுட்பத்திலும் வல்லரசு நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் நாம் உயர்ந்திருக்கிறோம் என்பதை ஒரு தமிழர் மீட்டுத்தந்திருக்கிறார்

    அதேபோல, ஒவ்வொருவருக்கும் ஒரு தளம் காத்துக்கிடக்கிறது.மாணவ மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது உடல் நலத்திற்கு தீங்கானது.

    எங்கிருந்தாலும் நல்லவர்கள் வாழ்வார்கள் வாழ்ந்து பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். துன்பப்பட்டு தடைகளை தாண்டி முன்னேறி செல்லும் போது அந்த முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது உறுதியுடன் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சிகளில், டிஆர்ஓ செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, ஆர்டிஓ முருகேசன், அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர்

    ராஜேஸ்வரி, ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், பிடிஓக்கள்

    ஆயிஷாராணி, கோகுலகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர்கள் துணைத் தலைவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சம்பவம் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள சுனாபி நகரில் நடைபெற்றுள்ளது.
    • ‘டைவ்’ அடித்து குதித்து நீந்தி சென்று தனது முதல் முயற்சியிலேயே அந்த செல்போனை மீட்டு கொண்டு வந்து உரியவரிடம் ஒப்படைத்தார்.

    தொலைந்து போன செல்போனை கண்டுபிடிப்பதற்காக வாலிபர் ஒருவர் ஏரியில் குதித்து அதனை மீட்ட வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள சுனாபி நகரில் நடைபெற்றுள்ளது.

    அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஏரியையொட்டி நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக அவரது செல்போன் ஏரிக்குள் விழுந்துள்ளது. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கதறி உள்ளார். இதைப்பார்த்த சைமன் என்ற வாலிபர் உடனடியாக ஏரிக்குள் 'டைவ்' அடித்து குதித்து நீந்தி சென்று தனது முதல் முயற்சியிலேயே அந்த செல்போனை மீட்டு கொண்டு வந்து உரியவரிடம் ஒப்படைத்தார்.

    இதை அங்கிருந்தவர்கள் பார்த்து சைமனை பாராட்டிய காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ 5 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதோடு, நெட்டிசன்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

    • இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.

    சேலம்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் அடுத்த காட்டாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் வீரபாலன். இவரது மகன் ராஜதுரை (25).

    இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

    செல்போன் பறிப்பு

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து ராஜதுரை பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது சேலம் அரிசிபாளையம் ஆர்.டி.பால் தெருவை சேர்ந்த பிரகாசம் மகன் லோகேஷ் (18), பள்ளப்பட்டி நாராயணசாமிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் பிரகாஷ் (20) என்பது தெரியவந்து.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திடீரென இப்பகுதியில் இணைப்பு துண்டிக்கப்படுகிறது நெட்வொர்க் டவர் இல்லாதது இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
    • பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பர்லியார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்றுலாத்தலங்களான டால்பின்நோஸ், லேம்ஸ் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இதுதவிர பழங்குடியினர், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செல்போன் கொண்டு செல்வோர் திடீரென இப்பகுதியில் இணைப்பு துண்டிக்கப்படுகிறது நெட்வொர்க் டவர் இல்லாதது இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

    இப்பகுதியில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. டவர் அமைப்பதற்கு இடத்தை கொடுக்க முன் வந்தும் எந்தவித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படாதது வேதனை அளிப்பதாக உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அப்பகுதியில் செல்போன் டவர்களை அமைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் செல்போன் தொடர்பை விரைவாகப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • செல்போன் டவரால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என கூறி கோஷம் எழுப்பினர்.
    • டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை தெற்கு தெருவில் உள்ள ஒரு பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க பணிகள் நடைபெற்றது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செல்போன் டவரால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என கூறி கோஷம் எழுப்பினர்.

    தகவலறிந்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும்.
    • சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1913 எனும் உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

    முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 98 வார்டுகளில் உள்ள 703 நியாய விலைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும்.

    குடும்ப அட்டை பயன்பாட்டில் இருக்கும் நியாயவிலைக் கடையில் நடைபெறும் முகாமில் குடும்பத் தலைவி டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இப்பதிவின் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து வர வேண்டும்.

    விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் இணைக்க தேவையில்லை. வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத் தேவையில்லை.

    விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். விரல் ரேகை சரியாக பதிவாக வில்லை என்றால் ஆதார் அட்டையுடன் இணைக்கப் பட்ட கைப்பேசி வழியாக ஒரு முறை கடவுசொல் (ஓ.டி.பி.) பெறப்படும்.

    எனவே முகாமுக்கு வரும் போது ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசியை எடுத்து வர வேண்டும்.

    இதுகுறித்து சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை 044-25619208 எனும் தொலைபேசி எண்.94454 77205 எனும் வாட்ஸ் அப் எண் மற்றும் 1913 எனும் உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தாங்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

    • கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மிளகரணை சங்கீத் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பிருந்தா காமேஷ் (வயது 19). இவர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார். கல்லூரி பகுதியில் நடந்து சென்ற போது அவரின் பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் மாணவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இது குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாணவியிடம் செல்போனை பறித்தது பொம்மிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 19), ராஜ்குமார் வயது (18) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • விமானத்தில் மொத்தம் 140 பயணிகள் இருந்தனர்.
    • விமானம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அனைத்தையும் சீரானதும் டெல்லிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் இருந்து ஏர்இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. விமானம் புறப்படும் போது பயணி ஒருவரின் செல்போன் திடீரென வெடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் புகை வந்ததை தொடர்ந்து விமானி விமானத்தை அவசரமாக தரை இறக்கினார்.

    அந்த விமானத்தில் மொத்தம் 140 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அனைத்தையும் சீரானதும் டெல்லிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    அவசரமாக தரை இறக்கப்பட்ட அந்த விமானம் 1 மணி நேரத்துக்குள் உதய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. கடந்த ஜூன் 21-ந் தேதி டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டோராடூனுக்கு புறப்பட்ட உடனேயே இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதை சரி செய்த பிறகு விமானம் புறப்பட்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஊருக்கு செல்வதற்காக ஒரத்தநாடு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
    • பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை ராமன் என்பவர் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பட்டதாரி பெண் தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் கலைஞர் உரிமை திட்டத்தின் பயிற்சிக்காக ஒரத்தநாடு யூனியன் அலுவலத்திற்கு வந்துள்ளார்.

    பின்னர் பயிற்சி முடித்துவிட்டு ஊருக்கு செல்ல பஸ்சுக்காக ஒரத்தநாடு பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராமன் (வயது46) மேடை பாடகர்.

    என்பவர் பஸ்சுக்காக காத்திருந்த பட்டதாரி பெண்ணை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

    இதற்கு அந்த பட்டதாரி பெண் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ராமன் வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து ஒரத்தநாடு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்துள்ளனர்.

    புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தினார்.

    பின்னர் ராமரை ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படத்தி சிறையில் அடைத்தார்.

    • 2 பேரும் சம்பவத்தன்று சிங்கம்பத்தில் உள்ள பாலத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
    • ஆத்திரம் அடைந்த விக்னேஷ், சிறுவனை அவதூறாக பேசி, கற்களால் தாக்கினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கலுங்கடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனும், கீழப்பத்தையை சேர்ந்த லெட்சுமணன் மகன் விக்னேசும் (வயது26) நண்பர்கள் ஆவார்கள்.

    இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று சிங்கம்பத்தில் உள்ள பாலத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது விக்னேஷ் சிறுவனிடம், அவரது செல்போனை கேட்டுள்ளார்.

    அதற்கு சிறுவன் தனது செல்போனை கொடுக்க மறுத்து விட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த விக்னேஷ், சிறுவனை அவதூறாக பேசி, கற்களால் தாக்கினார்.

    இதில் காயமடைந்த சிறுவன் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி.ராஜு மற்றும் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி சிறுவனை தாக்கிய விக்னேசை தேடி வருகின்றனர்.

    • ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்கப்பட்டன.
    • செல்போன் திரும்ப கிடைத்த உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக வழக்குகள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதையடுத்து, மயிலா டுதுறை மாவட்ட எல்லை க்குள் காணாமல் போன செல்போன்களை கண்டறிந்து மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவிட்டார். அதன் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில், சைபர் கிரைம் காவல் அய்வாளர் புயல் பாலச்சந்திரன், தலைமை காவலர் சுதாகர் மற்றும் போலீஸாரின் முயற்சியால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்க ப்பட்டன.

    இைதயடுத்து, எஸ்.பி.அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கைப்பற்றப்பட்ட செல்போ ன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஒப்படைத்தார்.

    இதனால் செல்போன் திரும்ப கிடைத்த உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • பஸ்கள் வரும் நேரத்தை காண்பிப்பது பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.
    • பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அறிவிப்புகள் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் எந்தெந்த பஸ் நிறுத்தத்துக்கு எப்போது வரும். அங்கிருந்து எப்போது புறப்படும் என்ற தகவலை வழங்குவதற்காக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இந்த தகவல்களை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள 7 போக்குவரத்து கழகங்கள் டெண்டர் விட்டுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, சேலம், கோவை, மதுரை ஆகிய 7 போக்குவரத்து கழகங்களில் பஸ் நிறுத்தத்துக்கு பஸ்கள் வரும் நேரம், அங்கிருந்து புறப்படும் நேரம் ஆகியவை செல்போன் செயலி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்ப டும். இது அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள், பஸ் வழித் தடங்களில் பஸ்களின் வருகை, புறப்படும் நேரம் பற்றிய தற்போதைய போக்குவரத்து தகவல்களை வழங்கும்.

    இந்த டெண்டரில் 7 போக்குவரத்து கழகங்களுக்கான வடிவமைப்பு, மேம்பாடு, செயல்படுத்தும், ஒருங்கிணைப்பு, வாகன திட்டமிடல் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

    இந்த வசதி 2213 புதிய டீசல் பஸ்கள், 500 மின்சார பஸ்களில் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பஸ்களின் வருகை, புறப்பாடு குறித்த தகவல் அமைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். பஸ்கள் வரும் நேரத்தை காண்பிப்பது பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.

    மேலும் பஸ்கள் வரும்போது பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அறிவிப்புகள் வழங்க வேண்டும் என்றனர்.

    ×