search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறித்த"

    • பொதுமக்கள் பிடித்து போலீசில ஒப்படைத்தனர்
    • தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு தொடுகுளம் பகுதியை சேர்ந்தவர் லேகா (வயது44). இவர் நட்டாலம் தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தபால் நிலையத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக மாமூட்டுகடை - பாண்டியன் விளைச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நெட்டி யான்விளை பகுதியில் வைத்து, லேகாவின் இரு சக்கர வாகனத்தின் பின்னால் பதிவு எண் இல்லாத இருசக்கர வாக னத்தில் வந்து கொண்டிருந்த மர்ம நபர், திடீரென அவரது மோட்டார் சைக்கிளில் மோதி கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த லேகாகத்தி கூச்சலிட்டுள்ளார்.

    உடனே உஷாரான அந்த மர்மநபர், லேகாவின் கன்னத்தில் சரமாரியாக தாக்கி காயப்படுத்தி கீழே தள்ளி விட்டு, அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கத்தாலி செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென் றுள்ளார். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவரை துரத்தி பிடித்தனர்.

    பின்பு அவருக்கு தர்ம அடி கொடுத்து மார்த்தாண் டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஐரேனிபுரம் ஆரியூர் கோணம் சங்கர்(33) என்பதும், மரவேலை செய்து வருபவர் எனவும் தெரியவந்தது.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், பறித்த தாலி செயினை பொதுமக்கள் துரத்திய போது அங்கு ஒரு தோப்பில் வீசி விட்டதாக தெரி வித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்தனர். அவர் தூக்கி வீசப்பட்ட தாலி செயினை தேடி வருகின்றனர் .

    • பொதிந்து கொடுத்த பேப்பரில் வெறும் கற்கள் மட்டுே இருந்தது அம்பவம்
    • பொள்ளாச்சி கிழக்கு போலீசில் மூதாட்டி புகார்

    கோவை,

    கோவ மாவட்டம் பொள் ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த வர் சந்திரன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 65). இவர் கடந்த 2 மாதங்களாக சிங்காநல்லூரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று ராஜம்மாள் பொள்ளாச்சியில் உள்ள மகன் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் பொள்ளாச்சிக்கு சென்றார். பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ராஜம்மாளின் அருகே வந்து இவ்வளவு நகைகளை அணிந்து உள்ளீர்கள். இது பாதுகாப்பானது இல்லை. எனவே நகைகளை கழற்றி கைப்பையில் வையுங்கள் என்று கூறினர்.

    இதனையடுத்து மூதாட்டி தான் அணிந்து இருந்த 5 பவுன் செயின், 3 பவுன் வளையல் ஆகியவற்றை கழற்றி வாலிபர்களிடம் கொடுத்தார். அப்போது அந்த வாலிபர்கள் நகைகளை பேப்பரில் சுற்றி கொடுத்தனர். வீட்டிற்கு செல்லும் வழியில் ராஜம்மாள் பேப்பரை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. கற்கள் மட்டுமே இருந்தது. அந்த வாலிபர்கள் உதவி செய்வது போல நடித்து மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 8 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து ராஜம்மாள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் கவனத்தை திசைதிருப்பி 8 பவுன் நகைகளை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.

    சேலம்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் அடுத்த காட்டாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் வீரபாலன். இவரது மகன் ராஜதுரை (25).

    இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

    செல்போன் பறிப்பு

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து ராஜதுரை பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது சேலம் அரிசிபாளையம் ஆர்.டி.பால் தெருவை சேர்ந்த பிரகாசம் மகன் லோகேஷ் (18), பள்ளப்பட்டி நாராயணசாமிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் பிரகாஷ் (20) என்பது தெரியவந்து.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று அதிகாலை 5 மணி அளவில் கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் பைபாஸ் சாலையில் ஒரு தனியார் பள்ளியின் அருகில் லாரியை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
    • அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்துக் கொண்டு 2 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கீழ் குப்பம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி வயது 35 இவர் பார்சல் நிறுவனத்தில் டிரைவராக கோவை விழுப்புரம் செல்லும் லாரியை ஓட்டி வருகிறார்.இன்று அதிகாலை 5 மணி அளவில் கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் பைபாஸ் சாலையில் ஒரு தனியார் பள்ளியின் அருகில் லாரியை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்துக் கொண்டு 2 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.திடீரென கண் விழித்த வீரமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் துரத்திச் சென்று ஒருவரை பிடித்து அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.போலீசார் விசாரணையில் செல்போனை பறித்த வாலிபர் அம்மாபேட்டை அருகே உள்ள நஞ்சம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 20), என்பது தெரியவந்தது.

    தப்பி ஓடிய மற்றொருவர் சேலம் அருகே உள்ள கூட்டாத்துபட்டி பகுதியைச் சேர்ந்த அருண் (24) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சொகுசு வாழ்க்கை நடத்தினர்.
    • பெண்களை குறிவைத்து தாக்கி நகைகளை ஒரு கும்பல் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக வாகனங்களில் செல்லும் பெண்களை குறிவைத்து தாக்கி நகைகளை ஒரு கும்பல் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் காப்பிகாடு பகுதியை சேர்ந்த டயானா என்ற பெண்ணிடம், 16½ பவுன் தங்க சங்கிலியை கடந்த 4-ந் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக மார்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த சாலையோரம் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் டயானாவிடம் நகை பறித்ததாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த செய்யது அலிகான் (வயது 24), அப்துல் ராசிக்(29) ஆகியோரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பல் தலைவனாக சேக்ஜாமான் மைதீன் என்பவர் செயல்பட்டதும் இந்தக் கும்பல் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள சேக்ஜாமான் மைதீனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள், அதில் கிடைக்கும் பணத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று சொகுசாக வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 17 வயது சிறுவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 58).

    இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் கொள்ளை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சூழலில் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகள் அடிப்படையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய நெல்லை டவுனை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட சிறுவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவனுக்கு நகை திருட்டு வழக்கில் தொடர்பு தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அய்யப்பனையும், 17 வயது சிறுவனையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கைது செய்யப்பட்ட அய்யப்பனிடம் விசாரணை நடத்திய போது, அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. அய்யப்பனின் தாயார் வீடு ஆசாரிபள்ளத்தில் உள்ளது. அவர் அடிக்கடி இங்கு வந்து சென்றுள்ளார். சம்பவத் தத்தன்று வந்தபோது செலவுக்கு பணம் தேவைப்பட்ட தால் வசந்தா வின் நகையை பறித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவருக்கும் குமரி மாவட்டத்தில் வேறு வழக்குகளில் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோட்டில் வாகன சோதனையின் போது பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்த குமார் தலைமையில் கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்ப–ட்டது.

    இந்நிலையில் வீரப்பன் சத்திரம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி–ருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அந்த வாலிபர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன்பட்டி, குட்டை தெருவை சேர்ந்த மணிகண்டன் என்கிற மணி (27), நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 4 -வது வீதியை சேர்ந்த தவச்செல்வன் (21) என்பது ெதரிய வந்தது. மேலும் இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈரோடு சூரம்பட்டி, வீரப்பன் சத்திரம் பகுதியில் 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து இருந்து 7 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 

    ×