search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cell phone theft"

    • சிசிடிவி காட்சி ஆய்வு
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன் மண்டி வீதியில் ஆரணி டவுன் வி.ஏ.கே நகர் பகுதியை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் செல்போன் உதிரி பாகம் மற்றும் ரீ சார்ஜ் கடை நடத்தி வருகின்றார்.

    நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து கருணாகரன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது டிப்டாப் ஆசாமி ஒருவர் கடையில் உள்ளே வந்தார்.

    சிறிது நேரத்தில் திரும்பி பார்த்த போது டிப்டாப் ஆசாமி காணவில்லை இதனையடுத்து தனது கடையில் மேஜை மீது வைத்திருந்த செல்போன் காணாததை கண்டு கருணாகரன் அதிர்ச்சியடைந்தார். மேலும் தன் செல்போன் கடையில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தார்.

    அப்போது டிப்டாப் ஆசாமி செல் போனை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து கருணாகரன் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.

    • ஆத்தூரில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடிய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.
    • குழந்தையுடன் சென்று கைவரிசை காட்டிய தம்பதிக்கு வலைவீச்சு

    ஆத்தூர்:

    ஆத்தூரில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடிய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.

    செல்போன் திருட்டு

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பாத்திரக் கடை உள்ளது. இந்த கடைக்கு தேவையான பாத்திரங்கள் நேற்று காலை வெளியூரில் இருந்து சரக்கு வாகனத்தில் வந்தது.

    இந்த வாகனத்தை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் ஓட்டி வந்தார். இவர், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தனது செல்போனை வண்டியின் முன் பகுதியில் வைத்தவிட்டு வாகனத்தின் மேலே ஏறி மழை பாதுகாப்புக்காக தார்பாய் போட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே குழந்தையுடன் சென்ற தம்பதி, வாகனத்தில் செல்போன் இருப்பதை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை முன்பு அனுப்பிவிட்டு குழந்தையுடன் சென்று அப்பெண்ணின் கணவர், செல்போனை திருடிச் சென்றுள்ளார். இதன் சி.சி.டி.வி காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தம்பதிக்கு வலைவீச்சு

    இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப் பகலில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • ஆப்பிள் ெசல்போனை சார்ஜ் போட்டுவிட்டு சேலம் ரெயில் நிலையம் வந்ததும் தண்ணீர் வாங்குவதற்காக கீழே இறங்கினார்.
    • பின்னர் உள்ளே சென்று பார்த்த போது போனை காணவில்லை.

    சேலம்:

    சென்னை விரும்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (வயது 48). இவர் பெங்களூ ரில் இருந்து விருதுநகர் செல்வதற்காக நகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்.5 கோச்சில் 19 நம்பர் சீட்டில் நேற்று முன்தினம் பயணம் செய்தார்.

    அப்போது ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள ஆப்பிள் ெசல்போனை சார்ஜ் போட்டுவிட்டு சேலம் ரெயில் நிலையம் வந்ததும் தண்ணீர் வாங்குவதற்காக கீழே இறங்கினார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது போனை காணவில்லை. இது குறித்து அவர் ெரயில்வே போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நேற்று காலை காவல் உதவி ஆய்வாளர் தங்க ராசு பிளாட்பாரம் - 1-ல் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தே கத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரணை நடத்தி யதில் அவர் செல்போன் திருடியது தெரியவந்தது அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து விசாரித்ததில் சேலம் பழைய சூரமங்கலம் பாண்டியன் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் கார்த்திக் (25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • செல்போன் வாங்குவது போல் நடித்து, ஒரு செல்போனை திருடிய 2 பெண்களை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஊழியர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
    • பெண்களையும் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களும் செல்போனை திருடவில்லையென கூறினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள செல்போன் கடையில், செல்போன் வாங்குவது போல் நடித்து, ஒரு செல்போனை திருடிய 2 பெண்களை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஊழியர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள, தனியார் செல்போன் கடையில், 2 பெண்கள், செல்போன்கள் வாங்குவதாகக் கூறி பல செல்போன்களை எடுத்து காட்டச்சொல்லி பார்த்துள்ளனர். அப்போது கடையின் ஊழியர் கவனிக்காத நேரத்தில், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான செல்போனை ஒரு பெண் எடுத்து மற்றொரு பெண்ணிடம் கொடுப்பதையும், அந்த செல்போனை அந்தப்பெண் தனது புடவையில் மறைத்து வைப்பதையும், கடையின் மேலாளர் முகமது பக்ருதீன் கண்காணிப்பு கேமராவில் பார்த்துள்ளார்.

    தொடர்ந்து, கடை மேலாளர், ஊழியர்கள் உதவியுடன், 2 பெண்களையும் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களும் செல்போனை திருடவில்லையென கூறினர். பின்னர், செல்போனை திருடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது என எடுத்து கூறியதும், 2 பெண்களும் செல்போன் திருடியதை ஒப்புகொண்டனர். தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், 2 பெண்களையும், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை செய்ததில், அந்த 2 பெண்களும், நாகப்பட்டினம் ெரயிலடி தெருவைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது60) மற்றும் அவரது மகள் மணிமேகலை (36) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கடை மேலாளர் கொடுத்தப் புகாரின் பேரில், போலீசார் 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • மாநகர பகுதியில் திருட்டுப் போன செல்போன்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • சுமார் ரூ.25 லட்சத்து 2500 மதிப்பிலான திருட்டுப் போன 100 செல்போன்களை போலீசார் மீட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் மற்றும் அனிதா ஆகியோரின் மேற்பார்வையில் சைபர் கிரைம் தொடர்பான புகார் மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் மாநகர பகுதியில் திருட்டுப் போன செல்போன்கள் குறித்து இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்- இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், வித்யா லட்சுமி, கலை சந்தனமாரி, தொழில்நுட்ப சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் சுமார் ரூ.25 லட்சத்து 2500 மதிப்பிலான திருட்டுப் போன 100 செல்போன்களை போலீசார் மீட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும்,பல்வேறு ஆப்கள் மூலம் ஓ.டி.பி. பெற்றுக் கொண்டு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக மோசடி செய்யப்பட்ட சுமார் 29 பேருடைய ரூ.34 லட்சத்து 92 ஆயிரத்து 133-ஐ மீட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.

    இதில் கமிஷனர் அவினாஷ்குமார் கலந்துகொண்டு உரியவர்களிடம் செல்போன் மற்றும் மீட்கப்பட்ட பணத்தினை வழங்கினார்.

    • 2 செல்போன்கள் பறிமுதல்
    • திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சின்னக்கோடியூர் பகுதி சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). இவர் நேற்று ஹட்டியாவிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் செல்லும் ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு பொது பெட்டியில் நேற்று பயணம் செய்துள்ளார்.

    அப்போது காட்பாடியை கடந்து சிறிது நேரத்தில் இவர் வைத்திருந்த செல்போன் மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் ரெயில் ஜோலார்பேட்டை 2-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றதும் தனது பின்புறத்தில் நின்று இருந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாக அந்த நபரை பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பின்னர் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பட்ல பள்ளி பகுதியை சேர்ந்த கோவிந்தன் (27) என்பதும் இவர் ராஜேசின் செல்போன் திருடியதும் தெரிய வந்தது.

    மேலும் இதே போன்று வேலூர் மாவட்டம் காட்பாடி கிழித்தான் பட்டறை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (52) என்பவர் நேற்று சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டியில் பயணம் கொண்டிருந்தார். அப்போது அவர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென காணாமல் போனது.

    இது குறித்து தான் பயணித்த பெட்டியில் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஜோலார்பேட்டை ெரயில்வே ேபாலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் ெரயில்வே போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பன்னீர்செல்வம் நகர் பகுதியை சேர்ந்த நவீன் குமார் (21) என்பதும் இவர் கோவிந்தராஜ் என்பவரின் செல்போனை திருடியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து ெரயில்வே போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேலத்தில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
    • தனிப்படை போலீசார் மாமாங்கத்தில் இருந்த வெங்கேடேச னை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் செல்போன் உள்பட விலை உயர்ந்த பொருட்கள் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    34 செல்போன்கள்

    அந்த நிறுவனத்தில் மதுரை பில்லாபுரத்ைத சேர்ந்த வெங்கடேஷ் (வயது 31) என்பவர் பணியாற்றினார். சேலம் மாமாங்கத்தில் வீடு எடுத்து தங்கியிருந்த அவர் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய செல்போன்களை முறையாக கொடுக்காமல் ரூ. 9 லட்சம் மதிப்பிலான 34 செல்போன்களை அவர் முறைகோடு செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கூரியர் நிறுவன மேலாளரான மல்லூரை சேர்ந்த திருநாவுக்கரசு (46) கடந்த மாதம் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை தேடினர். மேலும் உதவி கமிஷனர் நாகராஜ், இன்ஸ்பெக்டர் கந்தவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் மாமாங்கத்தில் இருந்த வெங்கேடேச னை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்யும் வகையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 

    தண்டையார்பேட்டை அருகே சிறுமியிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை காந்தி நகரை சேர்ந்த சிறுமி திவ்யா. இவர் செல்போன் பேசியபடி அங்குள்ள வைத்தியநாதன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் திவ்யாவிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினர்.

    இதில் ஒருவர் நிலைதடுமாறி கீழேவிழுந்தார் சிறுமியின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து செல்போன் பறித்த கொள்ளையர்களை பிடித்தனர். இதில் ஒருவர் காசிமேட்டை சேர்ந்த ரூபான்குமார் (19), மற்றொருவன் 16 வயது சிறுவன். 2 பேரையும் ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    செல்போன் திருட்டு தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற் சாலையில் பீகார் மாநிலம் சிக்கந்தரா மண்டலத்தைச் சேர்ந்த சச்சின்குமார் (வயது 22). தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் புது கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தார்.

    அவரது வீட்டின் அருகே ஒடிசாவைச் சேர்ந்த அஜய் உள்பட சில தொழிலாளர்களும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அஜய்யின் செல்போன் திருட்டு போனதாக தெரிகிறது. அதனை பக்கத்து வீட்டில் தங்கி இருந்த வடமாநில வாலிபர் ராஜேஷ் திருடியதாக அஜய் தகராறில் ஈடுபட்டார்.

    இதனை அறிந்து சச்சின்குமார் அங்கு வந்தார். அவர் ராஜேசுக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்தார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அஜய் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சச்சின் குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடல் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சச்சின்குமார் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அஜய், அவரது நண்பர்கள் அர்ஜுன், ரமித்குமார் உள்பட 7 பேரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களிடம் லேப்-டாப், செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பூர்:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிபவர் மன்னர் மன்னன்.

    நேற்று முன்தினம் டாக்டர் மன்னர்மன்னன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அறையில் தனது பையை வைத்து இருந்தார். ஒரு ஆபரே‌ஷனை முடித்து விட்டு அறைக்கு திரும்பினார்.

    அப்போது, லேப்-டாப் வைத்திருந்த அவருடையை பை, செல்போன், ஆகியவற்றை யாரோ திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பூக்கடை புறநகர் போலீஸ் நிலையத்தில் டாக்டர் மன்னர் மன்னன் புகார் செய்தார். இஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்தார்.

    இதையடுத்து, உதவி கமி‌ஷனர் லட்சுமணன், மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று டாக்டரிடம் திருடிய வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அவருடைய பெயர் விமல்பாபு (39). விசாரணையில் இவர், கே.எம்.சி., ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்களிடம் திருடியது தெரியவந்தது.

    அவரிடம் இருந்து 3 லேப்-டாப், 2 டேப்லட், 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விமல்பாபு புழல் ஜெயலில் அடைக்கப்பட்டார்.

    துரைப்பாக்கத்தில் செல்போனை திருடி ரூ.5 ஆயிரம் கேட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    துரைப்பாக்கம் போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள மகளிர் விடுதியில் காவலாளியாக பணியாற்றி வருபவர் காமராஜ்.

    இவர் இரவு அறையில் தூங்கி கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்த போது செல்போன் திருடு போனது தெரியவந்தது.

    இந்நிலையில் காமராஜ் தனது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசியவர் நான்தான் செல்போனை திருடி உள்ளேன். 5000ரூபாய் கொடுத்தால் தான் செல்போனை கொடுக்க முடியும். திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே வந்து பெற்று கொள்ளுங்கள் என்று கூறினார்.

    இது குறித்து காமராஜ் துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின் பேரில் திருவான்மியூர் சென்று பணத்தை கொடுத்து விட்டு செல்போனை வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் திருச்சி துவரக்குறிச்சியை சேர்ந்த அப்துல் ஹமீம் என்பது தெரியவந்தது.அவரை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சென்னை அசோக்நகரில் வாலிபரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
    போரூர்:

    புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இளவரசு. இவர் வேலை காரணமாக சென்னை வந்தார். அப்போது அசோக் நகர், சாலையில் உள்ள சிக்னல் அருகே உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்ற இளவரசு பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம வாலிபர் இளவரசுவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றான்.

    இதுகுறித்து அசோக் நகர் போலீசில் இளவரசு புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சங்கர் கொள்ளைபோன செல்போன் ஐ.எம்.இ நம்பரை கொண்டு ஆய்வு செய்து அதை பயன்படுத்தி வந்த கண்ணம்மாபேட்டை கார்ப்பரே‌ஷன் காலனி 2-வது தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது19) என்பவரை கைது செய்தார்.

    அவனிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திகேயன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் இரவு நேரங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
    ×