search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் திருடிய 2 பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைப்பு
    X

    கைது செய்யப்பட்ட 2 பெண்களையும் படத்தில் காணலாம்.

    செல்போன் திருடிய 2 பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைப்பு

    • செல்போன் வாங்குவது போல் நடித்து, ஒரு செல்போனை திருடிய 2 பெண்களை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஊழியர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
    • பெண்களையும் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களும் செல்போனை திருடவில்லையென கூறினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள செல்போன் கடையில், செல்போன் வாங்குவது போல் நடித்து, ஒரு செல்போனை திருடிய 2 பெண்களை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஊழியர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள, தனியார் செல்போன் கடையில், 2 பெண்கள், செல்போன்கள் வாங்குவதாகக் கூறி பல செல்போன்களை எடுத்து காட்டச்சொல்லி பார்த்துள்ளனர். அப்போது கடையின் ஊழியர் கவனிக்காத நேரத்தில், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான செல்போனை ஒரு பெண் எடுத்து மற்றொரு பெண்ணிடம் கொடுப்பதையும், அந்த செல்போனை அந்தப்பெண் தனது புடவையில் மறைத்து வைப்பதையும், கடையின் மேலாளர் முகமது பக்ருதீன் கண்காணிப்பு கேமராவில் பார்த்துள்ளார்.

    தொடர்ந்து, கடை மேலாளர், ஊழியர்கள் உதவியுடன், 2 பெண்களையும் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களும் செல்போனை திருடவில்லையென கூறினர். பின்னர், செல்போனை திருடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது என எடுத்து கூறியதும், 2 பெண்களும் செல்போன் திருடியதை ஒப்புகொண்டனர். தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், 2 பெண்களையும், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை செய்ததில், அந்த 2 பெண்களும், நாகப்பட்டினம் ெரயிலடி தெருவைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது60) மற்றும் அவரது மகள் மணிமேகலை (36) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கடை மேலாளர் கொடுத்தப் புகாரின் பேரில், போலீசார் 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×