search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai theft"

    • கட்டிட பொருட்கள் வாங்குவது போல சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை விபரங்களை கெஜின் அனித்திடம் கேட்டு பெற்றனர்.
    • வாடிக்கையாளர்கள் போல வந்த மர்மநபர்கள் 2பேரும் கவனத்தை திசை திருப்பி பணத்தை சுருட்டி சென்றது தெரிந்தது.

    போரூர்:

    சென்னை வடபழனி, சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கெஜின் அனித். அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மாலை "டிப் டாப்" உடையணிந்த வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்கள் கட்டிட பொருட்கள் வாங்குவது போல சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை விபரங்களை கெஜின் அனித்திடம் கேட்டு பெற்றனர். பின்னர் நாளை வந்து பொருட்களை வாங்குவதாக கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

    சிறிது நேரம் கழித்து கெஜின் அனித் பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 40 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது. வாடிக்கையாளர்கள் போல வந்த மர்மநபர்கள் 2பேரும் கவனத்தை திசை திருப்பி பணத்தை சுருட்டி சென்றது தெரிந்தது.

    • மூதாட்டி சுசித்ரா கொள்ளை குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
    • அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அண்ணாநகர்:

    சென்னை, அண்ணாநகர், வி பிளாக், 4-வது அவென்யூவில் வசித்து வருபவர் சுசித்ரா(வயது76). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன் அமெரிக்காவில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார்.

    இதையடுத்து சுசித்ரா மட்டும் வீட்டில் தனியாக வசித்தார். அவருக்கு உதவியாக சிவகாசியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் வீட்டு வேலைகள் செய்து அவருடனேயே தங்கி உள்ளார்.

    நேற்று இரவு சுசித்ராவும், மகாலட்சுமியும் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். அதிகாலை 3 மணியளவில் 2 வாலிபர்கள் கத்தியுடன் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் அறையில் தூங்கிக்கொண்டு இருந்த மூதாட்டி சுசித்ரா, மற்றும் வேலைக்கார பெண் மகாலட்சுமியை கத்திமுனையில் மிரட்டினர். அலறினால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி அமர வைத்தனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இதைத்தொடர்ந்து மர்மநபர்கள் 2 பேரும் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் மூதாட்டி சுசித்ரா, வேலைக்கார பெண் மகாலட்சுமி அணிந்து இருந்த நகைகள் மற்றும் விலை உயர்ந்த 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து மூதாட்டி சுசித்ரா கொள்ளை குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

    அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் உருவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • எம்.பி.ஏ. பட்டதாரியான பாலாஜி என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
    • பாலாஜி சூளைமேடு பகுதியில் போலீஸ் என கூறி தொடர்ச்சியாக மிரட்டி பணம் பறித்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    அரும்பாக்கம் பகுதியில் போலீஸ் என்று மிரட்டி வாலிபர் ஒருவரிடம் பணம் பறிக்கப்பட்டது. ரூ. 92 ஆயிரம் பணம், அரை பவுன் தங்க நகை ஆகியவற்றை பறித்தது தொடர்பாக அரும்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் எம்.பி.ஏ. பட்டதாரியான பாலாஜி என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. முன்னாள் ஊர்க்காவல் படை வீரரான பாலாஜி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விலகியுள்ளார். இதன்பின்னர் பாலாஜி சூளைமேடு பகுதியில் போலீஸ் என கூறி தொடர்ச்சியாக மிரட்டி பணம் பறித்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • சிறுவன் தனது கூட்டாளிகள் 4பேருடன் சேர்ந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோவில், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
    • சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    போரூர்:

    சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 வாலிபர்கள் சுற்றி திரிவதாக வடபழனி போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் விரைந்து சென்று இருவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஏராளமான செல்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் விசாரணை செய்து கொண்டு இருந்த போது திடீரென ஒருவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட வாலிபர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிந்தது.

    சிறுவன் தனது கூட்டாளிகள் 4பேருடன் சேர்ந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோவில், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபர் உள்பட கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வரு கின்றனர்.

    • உதவி செய்வது போல் நடித்த 4 பேர் கும்பல் அத்வைத் மற்றும் சஞ்சயை பாழடைந்த கட்டிடத்திற்குள் கடத்தி சென்றது.
    • கல்லூரி மாணவர்களை மிரட்டி ரூ.3ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த வாட்ச், மற்றும் “இயர் பேட்” ஆகியவற்றை பறித்து 4 பேர் கும்பல் தப்பி சென்றுவிட்டது.

    சென்னை:

    சென்னை, தி.நகர் பகுதியை சேர்ந்தவர் அத்வைத். தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர் சஞ்சய் கல்லூரி மாணவர். இருவரும் கடந்த 27-ந் தேதி இரவு ஆலப்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்றுவிட்டது.

    அப்போது உதவி செய்வது போல் நடித்த 4 பேர் கும்பல் அத்வைத் மற்றும் சஞ்சயை பாழடைந்த கட்டிடத்திற்குள் கடத்தி சென்று மிரட்டி ரூ.3ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த வாட்ச், மற்றும் "இயர் பேட்" ஆகியவற்றை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தினார். இந்த வழிப்பறி தொடர்பாக மதுரவாயல் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, திருவேற்காட்டை சேர்ந்த சதிஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    • பஸ் நிலையத்தில் பயணிகளை குறிவைத்து வாலிபர் செல்போன் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
    • வாலிபரை போலீசார் கைது செய்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    சென்னை:

    சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வருபவர் கார்த்திக். இவர் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை பஸ் மூலம் கோயம்பேடு வந்தார். பின்னர் அவர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கார்த்திக்கின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை திருட முயன்றான். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் கூச்சலிட்டார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் செல்போன் திருடனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து பஸ் நிலைய போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி நடத்திய விசாரணையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டது முடிச்சூர் பகுதியை சேர்ந்த அன்பரசன்(21) என்பது தெரியவந்தது. அவன் இது போல் பஸ்நிலையத்தில் பயணிகளை குறிவைத்து செல்போன் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    சென்னை ராஜமங்கலத்தில் என்ஜினீயர் வீட்டில் 28 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கொளத்தூர்:

    சென்னை ராஜமங்கலம் செந்தில் நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா (42). தனியார் நிறுவனத்தில் கெமிக்கல் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 26-ந் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றார்.

    இந்த நிலையில் இவரது வீட்டில் வேலை செய்து வந்த கண்மணி என்பவர் நேற்று மாலை கிருஷ்ணா வீட்டருகே வந்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கிருஷ்ணாவின் மனைவி பிந்தியாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். கண்மணி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து ராஜமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னை அண்ணாநகரில் தொழில் அதிபர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiTheft
    அம்பத்தூர்:

    அண்ணாநகர், எல்.பிளாக், 1-வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் பெரம்பூரில் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் வைத்துள்ளார்.

    இவருடைய மனைவி, ஸ்ரீதேவி. கணவன்-மனைவி இருவரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் வீட்டு வேலையாட்கள், தோட்டத்தில் உள்ள செடிகளை பராமரிக்க கேட் கதவை திறந்து உள்ளே சென்றனர்.

    அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அண்ணாநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பீரோவில் இருந்த 100 சவரன் நகை, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கைக்கடிகாரம், ரூ.1லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

    மேலும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்தி எடுத்து சென்றுள்ளனர். அங்கிருந்த மற்றொரு லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த நகை-பணம் தப்பியது.


    இதுபோல், அதே பகுதி 26 -வது தெருவில் வசித்து வருபவர் முரளிகிருஷ்ணன். நேற்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் வந்த கொள்ளை கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்து தப்பினர்.

    அண்ணாநகர் எல் பிளாக் 21-வது தெருவில் மேக்ஸ் ப்யூர் வாட்டர் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் நிறுவனத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை சுருட்டினர். மேலும் கண்காணிப்பு கேமராவையும் உடைத்து கொண்டு சென்று விட்டனர்.

    அண்ணாநகரில் அடுத்தடுத்து 3 இடங்களில் நகை-பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ChennaiTheft
    சென்னையில் செயின்- செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி கொண்டே இருக்கிறது. ஒரே நாளில் 3 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் செயின்- செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி கொண்டே இருக்கிறது.

    நேற்று 3 பெண்களிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா டான்சரான சவிதா தனது தாலி செயினை வீட்டில் கழற்றி வைத்து விட்டு தூங்கினார். காலையில் கண்விழித்த போது அதனை காணவில்லை. அவரது 15 பவுன் தாலி செயினை யாரோ திருடிச் சென்று உள்ளனர்.

    கொளத்தூர் சாந்தி நகரைச் சேர்ந்த ரூபா என்ற பெண்ணிடம் 8 பவுன் செயினும், வில்லிவாக்கத்தில் அகிலா என்பவரிடம் 25 பவுன் தாலி செயினும் பறிக்கப்பட்டுள்ளது.

    கரூர் காகித ஆலையில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வரும் முருகேசன் சென்னையில் தனது நண்பரை பார்க்க வந்தார். பாண்டி பஜாரில் அவரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் செல்போனை பறித்து சென்றனர்.
    சென்னை அசோக்நகரில் வாலிபரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
    போரூர்:

    புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இளவரசு. இவர் வேலை காரணமாக சென்னை வந்தார். அப்போது அசோக் நகர், சாலையில் உள்ள சிக்னல் அருகே உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்ற இளவரசு பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம வாலிபர் இளவரசுவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றான்.

    இதுகுறித்து அசோக் நகர் போலீசில் இளவரசு புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சங்கர் கொள்ளைபோன செல்போன் ஐ.எம்.இ நம்பரை கொண்டு ஆய்வு செய்து அதை பயன்படுத்தி வந்த கண்ணம்மாபேட்டை கார்ப்பரே‌ஷன் காலனி 2-வது தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது19) என்பவரை கைது செய்தார்.

    அவனிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திகேயன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் இரவு நேரங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
    ×