என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சென்னை திருட்டு"
- கட்டிட பொருட்கள் வாங்குவது போல சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை விபரங்களை கெஜின் அனித்திடம் கேட்டு பெற்றனர்.
- வாடிக்கையாளர்கள் போல வந்த மர்மநபர்கள் 2பேரும் கவனத்தை திசை திருப்பி பணத்தை சுருட்டி சென்றது தெரிந்தது.
போரூர்:
சென்னை வடபழனி, சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கெஜின் அனித். அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மாலை "டிப் டாப்" உடையணிந்த வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்கள் கட்டிட பொருட்கள் வாங்குவது போல சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை விபரங்களை கெஜின் அனித்திடம் கேட்டு பெற்றனர். பின்னர் நாளை வந்து பொருட்களை வாங்குவதாக கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
சிறிது நேரம் கழித்து கெஜின் அனித் பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 40 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது. வாடிக்கையாளர்கள் போல வந்த மர்மநபர்கள் 2பேரும் கவனத்தை திசை திருப்பி பணத்தை சுருட்டி சென்றது தெரிந்தது.
- எம்.பி.ஏ. பட்டதாரியான பாலாஜி என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
- பாலாஜி சூளைமேடு பகுதியில் போலீஸ் என கூறி தொடர்ச்சியாக மிரட்டி பணம் பறித்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை:
அரும்பாக்கம் பகுதியில் போலீஸ் என்று மிரட்டி வாலிபர் ஒருவரிடம் பணம் பறிக்கப்பட்டது. ரூ. 92 ஆயிரம் பணம், அரை பவுன் தங்க நகை ஆகியவற்றை பறித்தது தொடர்பாக அரும்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் எம்.பி.ஏ. பட்டதாரியான பாலாஜி என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. முன்னாள் ஊர்க்காவல் படை வீரரான பாலாஜி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விலகியுள்ளார். இதன்பின்னர் பாலாஜி சூளைமேடு பகுதியில் போலீஸ் என கூறி தொடர்ச்சியாக மிரட்டி பணம் பறித்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- சிறுவன் தனது கூட்டாளிகள் 4பேருடன் சேர்ந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோவில், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
- சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
போரூர்:
சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 வாலிபர்கள் சுற்றி திரிவதாக வடபழனி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று இருவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஏராளமான செல்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை செய்து கொண்டு இருந்த போது திடீரென ஒருவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட வாலிபர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிந்தது.
சிறுவன் தனது கூட்டாளிகள் 4பேருடன் சேர்ந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோவில், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபர் உள்பட கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வரு கின்றனர்.
- உதவி செய்வது போல் நடித்த 4 பேர் கும்பல் அத்வைத் மற்றும் சஞ்சயை பாழடைந்த கட்டிடத்திற்குள் கடத்தி சென்றது.
- கல்லூரி மாணவர்களை மிரட்டி ரூ.3ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த வாட்ச், மற்றும் “இயர் பேட்” ஆகியவற்றை பறித்து 4 பேர் கும்பல் தப்பி சென்றுவிட்டது.
சென்னை:
சென்னை, தி.நகர் பகுதியை சேர்ந்தவர் அத்வைத். தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர் சஞ்சய் கல்லூரி மாணவர். இருவரும் கடந்த 27-ந் தேதி இரவு ஆலப்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்றுவிட்டது.
அப்போது உதவி செய்வது போல் நடித்த 4 பேர் கும்பல் அத்வைத் மற்றும் சஞ்சயை பாழடைந்த கட்டிடத்திற்குள் கடத்தி சென்று மிரட்டி ரூ.3ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த வாட்ச், மற்றும் "இயர் பேட்" ஆகியவற்றை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தினார். இந்த வழிப்பறி தொடர்பாக மதுரவாயல் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, திருவேற்காட்டை சேர்ந்த சதிஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
- பஸ் நிலையத்தில் பயணிகளை குறிவைத்து வாலிபர் செல்போன் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
- வாலிபரை போலீசார் கைது செய்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை:
சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வருபவர் கார்த்திக். இவர் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை பஸ் மூலம் கோயம்பேடு வந்தார். பின்னர் அவர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கார்த்திக்கின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை திருட முயன்றான். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் கூச்சலிட்டார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் செல்போன் திருடனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து பஸ் நிலைய போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி நடத்திய விசாரணையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டது முடிச்சூர் பகுதியை சேர்ந்த அன்பரசன்(21) என்பது தெரியவந்தது. அவன் இது போல் பஸ்நிலையத்தில் பயணிகளை குறிவைத்து செல்போன் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்