கல்லூரி மாணவரிடம் செல்போன் திருடிய வாலிபருக்கு தர்ம அடி

பஸ் நிலையத்தில் பயணிகளை குறிவைத்து வாலிபர் செல்போன் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. வாலிபரை போலீசார் கைது செய்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
கல்லூரி மாணவரிடம் செல்போன் திருடிய வாலிபருக்கு தர்ம அடி
Published on

சென்னை:

சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வருபவர் கார்த்திக். இவர் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை பஸ் மூலம் கோயம்பேடு வந்தார். பின்னர் அவர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கார்த்திக்கின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை திருட முயன்றான். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் கூச்சலிட்டார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் செல்போன் திருடனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து பஸ் நிலைய போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி நடத்திய விசாரணையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டது முடிச்சூர் பகுதியை சேர்ந்த அன்பரசன்(21) என்பது தெரியவந்தது. அவன் இது போல் பஸ்நிலையத்தில் பயணிகளை குறிவைத்து செல்போன் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com