search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது
    X

    செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது

    • 2 செல்போன்கள் பறிமுதல்
    • திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சின்னக்கோடியூர் பகுதி சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). இவர் நேற்று ஹட்டியாவிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் செல்லும் ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு பொது பெட்டியில் நேற்று பயணம் செய்துள்ளார்.

    அப்போது காட்பாடியை கடந்து சிறிது நேரத்தில் இவர் வைத்திருந்த செல்போன் மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் ரெயில் ஜோலார்பேட்டை 2-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றதும் தனது பின்புறத்தில் நின்று இருந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாக அந்த நபரை பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பின்னர் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பட்ல பள்ளி பகுதியை சேர்ந்த கோவிந்தன் (27) என்பதும் இவர் ராஜேசின் செல்போன் திருடியதும் தெரிய வந்தது.

    மேலும் இதே போன்று வேலூர் மாவட்டம் காட்பாடி கிழித்தான் பட்டறை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (52) என்பவர் நேற்று சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டியில் பயணம் கொண்டிருந்தார். அப்போது அவர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென காணாமல் போனது.

    இது குறித்து தான் பயணித்த பெட்டியில் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஜோலார்பேட்டை ெரயில்வே ேபாலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் ெரயில்வே போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பன்னீர்செல்வம் நகர் பகுதியை சேர்ந்த நவீன் குமார் (21) என்பதும் இவர் கோவிந்தராஜ் என்பவரின் செல்போனை திருடியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து ெரயில்வே போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×