search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cannabis"

    • கூத்தாநல்லூரில் அனுமதியின்றி மது பானங்கள் விற்கபடுவதாக தகவல் வந்தது.
    • கூத்தாநல்லூரில் போலீசார் தீவிர ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

    திருவாரூர்:

    தமிழக அரசு அனுமதியின்றி மது விற்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் அனுமதியின்றி மதுபானங்கள், கஞ்சா விற்க படுவதாகவும் ரகசிய தகவல் போலீசாருக்கு வந்தது.

    இதைத் தொடர்ந்து கூத்தாநல்லூர் போலீசார் நேற்று கூத்தாநல்லூர், மரக்கடை, கோரையாறு, சித்தாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்பனை செய்த சித்தாம்பூர் தெற்கு தெருவை சேர்ந்த காளிதாஸ் (வயது42), கோரையாறு அகமலாங்கரையை சேர்ந்த முருகதாஸ் (41), சுரேஷ் (43), சித்தாம்பூர் மேலத்தெருவை சேர்ந்த கண்ணையன் (52), மரக்கடை, கீழத்தெருவை சேர்ந்த நாகூரான் (55) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    அதேபோல் கஞ்சா விற்பனை செய்த கூத்தாநல்லூர் முகமதியா தெருவை சேர்ந்த சாகுல் அமீது (21) என்பவரை கைது செய்தனர்.

    • திருச்சுழி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. அதிலும் குறிப்பாக ஆலடிப் பட்டி பகுதியில் சமீப கால மாக கஞ்சா விற்பனை விறு விறுப்பாக நடந்து வருவதாக திருச்சுழி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெக நாதன் தலைமையில் திருச்சுழி இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் கெங்கராஜ் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப் பட்டது. அவர்கள் திருச்சுழி காவல் நிலைய எல்லைப் பகுதிக ளில் தீவிர ரோந்துப் பணி யில் ஈடுபட்டு கண்கா ணித்தனர்.

    அப்போது ஆலடிப்பட்டி பகுதியிலுள்ள கல்லறை தோட்டம் அருகே சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆலடிப்பட்டி மேலத்தெரு பகுதியை சேர்ந்த இருளாண்டி என்பவரின் மகன் சக்திவேல் (23) என்பதும், இவர் அந்த பகுதியில் சட்ட விரோதமாக கிலோ கணக்கில் கஞ்சாவை பதுக்கி வைத்து நெடுங்கா லமாக பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர் விற்ப னைக்காக வைத்திருந்த சுமார் 1.380 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அவரது வயிற்றின் அடிப்பகுதியில் மர்ம பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.
    • நீதிமன்றத்தில் கைதிக்கு கஞ்சா கொடுத்தது யார் என்பது குறித்தும் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி காட்சியை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் 100-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர்.

    போக்சோ வழக்கில் சிறையில் உள்ள தவக்குப்பத்தைச் சேர்ந்த புண்ணியகோடி மகன் பாலமுருகன் (வயது 23), போலீஸ் பாதுகாப்புடன் வழக்கு விசாரணைக்காக  புதுச்சேரி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

    வழக்கு விசாரணை முடிந்து பின்னர் காலாப்பட்டு மத்திய சிறைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு சிறை காவலர்கள் அவரை வழக்கம் போல் சோதனை செய்தனர். சோதனையில் பாலமுருகனின் உடலில் வழக்கத்திற்கு மாறான மாற்றம் இருந்தது.

    சந்தேகம் அடைந்த சிறை காவலர்கள் இதுகுறித்து சிறை சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். கைதி பாலமுருகனிடம் சிறை சூப்பிரண்டு பாஸ்கரன் விசாரணை நடத்திய போது அவர் எதுவும் சொல்லவில்லை. உடனே பாலமுருகனை கணபதி செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு அழைத்துச் சென்று அவரது உடலை ஸ்கேன் செய்தனர்.

    அப்பொழுது அவரது வயிற்றின் அடிப்பகுதியில் மர்ம பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.

    அப்போதுதான் கைதி பாலமுருகன் நடந்தவற்றை கூறினார், பல்வேறு கொலை வழக்குகளில் சிறையில் உள்ள மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜனா என்கிற ஜனார்த்தனன் உத்தரவின் அடிப்படையில் கைதி பாலமுருகன் கோர்ட்டில் ஆஜராகும் பொழுது ஒருவர் 50 கிராம் கஞ்சாவை கொடுத்ததும், அந்த கஞ்சா பொட்டலத்தை நீதிமன்றத்தில் உள்ள கழிவறையில் தனது ஆசனவாய் வழியாக செலுத்தியதும் தெரிய வந்தது. நடிகர் சூர்யா படித்த அயன் திரைப்படத்தில் போதை பொருளை வெளியே எடுப்பதற்காக 'இனிமா' என்னும் மருந்தை கொடுப்பதை போல் கைதி பாலமுருகனுக்கும் மருத்து வர்கள் 'இனிமா' கொடுத்து வயிற்றின் அடிப்பகுதியில் இருந்த 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை வெளியே எடுத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிறை சூப்பிரண்டு பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகள் பாலமுருகன், ஜனா என்கிற ஜனார்த்தனன் ஆகிய 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

     நீதிமன்ற உத்தரவு பெற்று இருவரையும் கைது செய்கின்றனர். மேலும் நீதிமன்றத்தில் கைதிக்கு கஞ்சா கொடுத்தது யார் என்பது குறித்தும் நீதி மன்றத்தில் பதிவா கியுள்ள சி.சி.டி.வி காட்சியை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 4 பேரையும் கைது செய்து 580 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறு வதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்குக்னு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைய டுத்து அவரது உத்தரவின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கஞ்சா விற்ற வேதாரண்யம் அடுத்த கீழ ஆறுமுக கட்டளையைச் சேர்ந்த கபிலன் (வயது 26), உச்சகட் ( 24), ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி நெடுமாறன் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்து 580 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா-கள்ளச்சாராய விற்பனை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக மதுரை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
    • நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கஞ்சா, கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மதுரை மாவட்ட காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கஞ்சா, கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கத்தில் பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் 9498181206 என்ற சிறப்பு தொலைபேசி எண் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த தொலைபேசி எண்ணுக்கு கஞ்சா, கள்ளச்சாராயம், சட்டத்திற்கு புறம்பான மது விற்பனை, போதை பொருள் விற்பனை குறித்த தகவல் தெரிவித்தால் துரித நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் தகவல் தருபவர் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படுவதுடன், தகவல் தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவையில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.
    • மது பாட்டில்களை விட குறைந்த விலையில் அதிக போதை தரும் கஞ்சா விற்கப்படுவதால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள்வரை கஞ்சா பழகத்துக்கு ஆளாகிவுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. மது பாட்டில்களை விட குறைந்த விலையில் அதிக போதை தரும் கஞ்சா விற்கப்படுவதால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள்வரை கஞ்சா பழகத்துக்கு ஆளாகிவுள்ளனர்.

    சமூக விரோதிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கஞ்சா வை கடத்தி வந்து புதுவையில் விற்பனை செய்கிறார்கள்.

    இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கஞ்சா விற்பனை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை.

    இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டு அவ்வப்போது கஞ்சா விற்பனை செய்து வருபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள் ஆனாலும் புற்றீசல் போல கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரியாங்குப்பம்-தவளகுப்பம் மற்றும் கிராம பகுதிகளில் பள்ளி - கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

    நேற்று முன் தினம் அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    அதுபோல் காலாப்பட்டு பல்கலைக்கழகம் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் தவளகுப்பம் முத்து முதலியார் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தவளகுப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று கண்காணித்தனர்.

    இந்த நிலையில் சந்தேகப்படும் படியாக இருந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அங்கு 2 பேர் கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் பிடிபட்ட 2 பேர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடலூர் மாவட்டம் எஸ்.எம். சாவடியை சேர்ந்த சந்தோஷ்  மற்றும் 17 வயது சிறுவர் ஒருவர் என்பதும் தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 38 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன் ஒரு பைக் பறிமுதல் செய்தனர்.

    • சேலம் அஸ்தம்பட்டியில், சேலம் மத்திய சிறை சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டியில், சேலம் மத்திய சிறை சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பாதுகாப்பு பணியில் ஏராளாமான போலீசார் ஷிப்ட் முறையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனபால் (வயது 39). இவர், சேலம் மத்திய ஜெயிலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜெயில் வளாகத்தில் சமைத்துக் கொண்டிருந்த போது தனபால், சமையல் வேலைக்கு ஒரு கட்டையும் நூலும் தேவைப்படுவதாக கூறி ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.

    இதையடுத்து அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனபால் மீண்டும் சிறைக்குள் வரும்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து சேலம் மத்திய சிறை அலுவலர் மதிவாணன், கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமையல்காரர் தனபாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரை மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் சிக்கினர்.
    • மது விற்ற 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பகுதியில் சினிமா தியேட்டர் எதிரே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் 2-வது தெருவைச் சேரந்த காஜா மைதீன் (40) என்பது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா, ரூ.9,740 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்ற குற்றத்திற்காக காஜா மைதீனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் ரோடு சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நாகமலை மேலக்குயில்குடியை சேர்ந்த முருகன் (54) என்பவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவையும், ரூ.14 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகர் 4-வது தெருவை சேர்ந்த திவ்யதர்ஷன் என்பவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மது விற்பனை

    மதுரை அவனியாபுரம், திருநகர், திடீர்நகர், சுப்பிரமணியபுரம், திலகர்திடல், கரிமேடு, அண்ணாநகர் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விறபணை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது மது விற்பனை செய்த 26 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஈரோடு கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன்கோவில் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு, ஜூன். 15-

    ஈரோடு கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன்கோவில் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.

    அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர்கள் கருங்கல்பாளையம், மாரியம்மன்கோயில் வீதியை சேர்ந்த வினோத்(32), ராஜாஜிபுரம் மணி(30) என தெரியவந்தது.

    அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • ஈரோட்டில் புகையிலை பொருட்கள்- கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடா சலபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது எண்ணமங்கலம், ராம கவுண்டன் குட்டை பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சோத னை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் - ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிந்தது.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வன் என தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை கைது செய்தனர் அவரிடமிருந்து 105 புகையிலை, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதேப்போல் சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சலீம் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சத்தியமங்கலம்-பவானிசாகர் ரோட்டில் தரைபாலம் அருகே அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பியோட முயன்றார்.

    அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(27) என்பதும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்தி ருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
    • புதுவை-கடலூர் மெயின் ரோட்டில் அந்தோணியார்கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில்

    புதுச்சேரி:

    பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை-கடலூர் மெயின் ரோட்டில் அந்தோணியார்கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர்.

    சோதனையில் அவரது சட்டை பையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தார். மொத்தம் 300 கிராம் கஞ்சா அவர் வைத்திருந்தார். கஞ்சாவை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த சுனில் என்ற கிஷோர்குமார் (வயது22) என்பது தெரியவந்தது. இதையடுத்து கிஷோர்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    • கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது தம்பிபட்டி தனியார் மில் அருகே பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இருவரையும் வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தபோது கூமாபட்டி அமச்சியார்புரம் காலனியைச் சேர்ந்த முத்துச்செல்வம் (25), அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (18) என்பது தெரியவந்தது. 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர். 

    ×