search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP MLA"

    காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கடத்துவேன் என்ற ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #BJP #RamKadam
    மும்பை:

    மும்பை காட்கோபரில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

    இதற்காக தனது செல்போன் எண்ணை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்று கூறி அதை கொடுத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ராம்கதம் எம்.எல்.ஏ. தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

    ஆனாலும் அவருக்கு எதிராக நேற்று 2-வது நாளாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில், ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்த நிலையில், ராம் கதம் வகித்து வந்த பா.ஜனதாவின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கலந்து பேசி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    மேலும் ராம் கதமை அவர் சில காலங்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார். #BJP #RamKadam 
    நீங்கள் காதலிக்கும் பெண் உங்களது பெற்றோருக்கு பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் கூறிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #RamKadam
    மும்பை:

    மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சிகள் நடந்தன. காட்கோபரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடந்தது.

    கூட்டத்தில் ராம் கதம் பேசும்போது, தாங்கள் விரும்பும் பெண்கள் காதலை ஏற்க மறுக்கிறார்கள் என பல இளைஞர்கள் என்னிடம் உதவி கேட்கிறார்கள். நீங்கள் உங்களது பெற்றோரை அழைத்து கொண்டு என்னிடம் வாருங்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணை அவர்களுக்கு பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்றார்.

    ராம் கதமின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ காட்சி நேற்று வைரலாகியது. அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சி தரப்பில் கண்டனங்கள் எழுந்து உள்ளன.

    இது தொடர்பாக ராம் கதம் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை, என்னுடைய பேச்சு திரித்து வெளியிடப்பட்டு உள்ளது என்றார்.  #BJP #RamKadam
    காங்கிரஸ் எம்.பி ஜோதிரத்யா சிந்தியாவை சுட்டுக்கொல்வேன் என பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த தனது மகன், சிறை செல்வதே சரியானது என பாஜக பெண் எம்.எல்.ஏ உமா தேவி கூறியுள்ளார். #JyotiradityaScindia
    போபால்:

    பா.ஜ.க ஆட்சியில் உள்ள மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஹட்டா தொகுதி பாஜக பெண் எம்.எல்.ஏ.வான உமா தேவி காதிக்கின் மகன் பிரின்ஸ்தீப் லால்சந்த் காக்திக் பேஸ்புக் தளத்தில் சர்ச்சைக்குரிய தகவலை பதிவு செய்து இருந்தார். 

    காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் ஹட்டாவில் நடைபெற இருந்த நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ஜோதிரத்யா சிந்தியா அதில் கலந்து கொள்ள உள்ளார். ‘ஹட்டாவிற்கு வந்தால் சிந்தியாவை சுட்டுக் கொல்வேன், ஒன்று சிந்தியா உயிரிழக்க வேண்டும் அல்லது நான் உயிரிழக்க வேண்டும்’ என்று பிரின்ஸ்தீப் லால்சந்த் காக்திக் பதிவு செய்து இருந்தார். 

    இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாகிய நிலையில் “என்னுடைய மகன் சிறையில் தான் இருக்க வேண்டும். கட்சிக்கும் இந்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என்று எம்.எல்.ஏ. உமா தேவி கூறியுள்ளார். மேலும், போலீசில் தனது மகனை ஒப்படைக்க அவர் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ. பசன்கவுடா பட்டில் யட்னால் கருத்து தெரிவித்துள்ளார். #KeralaFloods
    விஜய்புரா:

    கேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் 370 பேர் பலியானார்கள். ரூ.19,500 கோடிக்கு இழப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய மந்திரியுமான பசன்கவுடா பட்டில் யட்னால் சர்ச்சை அளிக்கும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    இந்து உணர்வுகள் தூண்டி விடப்பட்டால் மதம் தண்டிக்கும். உதாரணமாக கேரளாவில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அந்த மாநில மக்கள் நேரிடையாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்தனர். கடந்த ஆண்டு இதே மாதம் தான் அங்கு மாட்டு இறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. கேரளா வெள்ளத்துக்கு இதுதான் காரணம்.

    கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரி ஆவார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மாடு படுகொலை தடை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KeralaFloods #KeralaFloods2018
    ஒடிசா மாநிலம் அம்னாபாலி கிராமத்தில் சாதி பிரச்சனையால் புறக்கணிக்கப்பட்ட மூதாட்டி உடலை பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. சுமந்து சென்று இறுதி சடங்கு செய்தார். #RameshPatua
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் அம்னாபாலி கிராமத்தில் 80 வயதான பிச்சைக்கார பெண் வசித்து வந்தார். அவர் திடீரென்று இறந்து விட்டார்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிராமத்தினரிடம் அப்பெண்ணின் உடலை தூக்கி சென்று இறுதி சடங்கு செய்யுமாறு தெரிவித்தனர்.

    ஆனால் அப்பெண் எந்த சாதியை சேர்ந்தவர் என்பது தெரியாது என்றும், அவரை தொட்டால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்றும் கூறி மறுத்து விட்டனர்.

    இதுபற்றி போலீசார் ரென்காலி தொகுதி பிஜு ஜனதா தளம் எம்.எல்.ஏ. ரமேஷ் பட்வுலாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தனது மகன், உறவினர்களுடன் அங்கு வந்தார்.

    இறந்த பிச்சைக்கார பெண்ணின் உடலை எம்.எல்.ஏ. மற்றும் உறவினர்கள் தோளில் சுமந்து சென்று இறுதி சடங்கு செய்து சுடுகாட்டில் தகனம் செய்தனர்.

    இது குறித்து ரமேஷ் பட்வுலா கூறுகையில், “சாதி தெரியாததால் அப்பெண்ணின் உடலை தொட்டால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று கிராமத்தினர் பயப்படுகிறார்கள். இறுதி சடங்கு செய்யகூட போதிய நேரம் தரவில்லை” என்றார்.

    ரமேஷ் பட்வுலா எம்.எல்.ஏ. இன்றும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார். அவர் ஒடிசா மாநிலத்தில் ஏழை எம்.எல்.ஏ.வாக உள்ளார். #RameshPatua
    இந்துக்கள் புனிதமாக வணங்கும் பசுவை கொல்வது பயங்கரவாதத்தை விட பெரிய குற்றமாகும் என ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #GyanDevAhuja
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தின் ராம்கர் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. கியான் தேவ் ஆஜா. இவெ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:

    பயங்கரவாத செயல்களால் இரண்டு அல்லது மூன்று பேர் பாதிக்கப்படுவார்கள். ஆனால், பசுவை கொன்று கொடுமைப்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கிலான மக்களின் உணர்வுகள் புண்படுகிறது.

    எனவே, பசுவை கொல்வது என்பது பயங்கரவாதத்தை விட மிக பெரிய குற்றமாகும் என பேசினார். இவரது கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் பசுவை கொன்றதாக கூறப்படும் அக்பர் கானை தாக்கி கொன்ற விவகாரத்தில் தொடர்புடையவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.  #BJPMLA #GyanDevAhuja
    காவல் நிலையத்திற்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது கான்ஸ்டபிளை பா.ஜ.க. எம்.எல்.ஏ. அறைந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #BJPMLASlappedConstable
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் உதய் நகர் காவல் நிலையத்திற்கு நேற்று இரவு பா.ஜ.க. எம்.எல்.ஏ. சம்பாலால் தேவ்டாவின் உறவினர் வந்துள்ளார். நள்ளிரவைத் தாண்டி காவல் நிலையத்திற்குள் நுழைந்த அவர், தடை செய்யப்பட்ட அறைக்குச் சென்று ஒரு நபரிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை பிடுங்கி உள்ளார். இதனை பணியில் இருந்த கான்ஸ்டபிள் சந்தோஷ் தடுத்து நிறுத்தி திட்டியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.வின் உறவினர், எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ. சம்பாலால் தேவ்டா உடனடியாக தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். வந்த வேகத்தில் கான்ஸ்டபிளிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கான்ஸ்டபிளை மாறி மாறி கன்னத்தில் அறைந்தார். கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின.

    அதன் அடிப்படையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சம்பாலால் தேவ்டா மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. எம்.எல்.ஏ. அடிக்கும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதுதொடர்பாக எம்.எல்.ஏ.விடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், தவறு செய்திருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி தலைமை கூறியுள்ளது. #BJPMLASlappedConstable
    உத்தரபிரதேசத்தில் குல்தீப்சிகை தொடர்ந்து மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
    பரெய்லி:

    உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மற்றொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. குஷாகரா சாகர் மீது 22 வயது பெண் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அந்த பெண், போலீசில் கொடுத்த புகாரில், “2012-ம் ஆண்டு எனக்கு 16 வயது இருந்தபோது குஷாகரா சாகர் வீட்டில் வேலை செய்து வந்தேன். அப்போது அவர் திருமணம் செய்துகொள்வதாக கூறி என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் எம்.எல்.ஏ. ஆன அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. என்னை ஏமாற்றியது குறித்து கேட்டபோது ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு தருவதாக கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக குஷாகரா சாகர் கூறுகையில், “2014-ம் ஆண்டு இதேபோல் அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அப்போது ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். தற்போது மீண்டும் பணம் பறிக்க திட்டமிடுகிறார்” என்றார்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.10 லட்சம் கேட்டு துபாயில் இருந்து வாட்ஸ்அப் மூலம் மிரட்டும் தாதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷஹ்ர் மாவட்டத்துக்குட்பட்ட டேபாய் சட்டசபை தொகுதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக பதவி வகிப்பவர், டாக்டர் அனிதா லோதி ராஜ்புத்.

    சமீபத்தில் இவருக்கு துபாயில் இருந்து வாட்ஸ்அப் மூலம் ஒரு குறுஞ்செய்தி (மெசேஜ்) வந்தது. இன்னும் மூன்று நாட்களுக்குள் எனக்கு பத்து லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தாரையும் தீர்த்து கட்டி விடுவேன் என்று அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.



    துபாயில் வாழும் அலி புதேஷ் பாய் என்னும் பிரபல தாதா அனுப்பிய இந்த மிரட்டல் தொடர்பாக தான் வசிக்கும் காசியாபாத் மற்றும் புலந்த்ஷஹ்ர் காவல் நிலையங்களில் டாக்டர் அனிதா லோதி ராஜ்புத் புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
    ×