என் மலர்
செய்திகள்

பசுவை கொல்வது பயங்கரவாதத்தை விட பெரிய குற்றம் - பாஜக எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை
இந்துக்கள் புனிதமாக வணங்கும் பசுவை கொல்வது பயங்கரவாதத்தை விட பெரிய குற்றமாகும் என ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #GyanDevAhuja
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தின் ராம்கர் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. கியான் தேவ் ஆஜா. இவெ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:
பயங்கரவாத செயல்களால் இரண்டு அல்லது மூன்று பேர் பாதிக்கப்படுவார்கள். ஆனால், பசுவை கொன்று கொடுமைப்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கிலான மக்களின் உணர்வுகள் புண்படுகிறது.
எனவே, பசுவை கொல்வது என்பது பயங்கரவாதத்தை விட மிக பெரிய குற்றமாகும் என பேசினார். இவரது கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பசுவை கொன்றதாக கூறப்படும் அக்பர் கானை தாக்கி கொன்ற விவகாரத்தில் தொடர்புடையவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. #BJPMLA #GyanDevAhuja
Next Story






