என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ransom demanded"

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.10 லட்சம் கேட்டு துபாயில் இருந்து வாட்ஸ்அப் மூலம் மிரட்டும் தாதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷஹ்ர் மாவட்டத்துக்குட்பட்ட டேபாய் சட்டசபை தொகுதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக பதவி வகிப்பவர், டாக்டர் அனிதா லோதி ராஜ்புத்.

    சமீபத்தில் இவருக்கு துபாயில் இருந்து வாட்ஸ்அப் மூலம் ஒரு குறுஞ்செய்தி (மெசேஜ்) வந்தது. இன்னும் மூன்று நாட்களுக்குள் எனக்கு பத்து லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தாரையும் தீர்த்து கட்டி விடுவேன் என்று அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.



    துபாயில் வாழும் அலி புதேஷ் பாய் என்னும் பிரபல தாதா அனுப்பிய இந்த மிரட்டல் தொடர்பாக தான் வசிக்கும் காசியாபாத் மற்றும் புலந்த்ஷஹ்ர் காவல் நிலையங்களில் டாக்டர் அனிதா லோதி ராஜ்புத் புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
    ×