search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ram Kadam"

    உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் தெரிவித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். #RamKadam #BJP
    மும்பை :

    மும்பையை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நடந்த உறியடி நிகழ்ச்சியில், இளைஞர்கள் விரும்பும் பெண்களை கடத்தி வந்து ஒப்படைப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார்.

    இந்த நிலையில் உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் செய்தி வெளியிட்டதன் மூலம் அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். ராம் கதம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்தி மற்றும் மராத்தியில் புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.



    ஆதாரமற்ற தகவல்களை வைத்து இரங்கல் செய்தி வெளியிட்ட அவரை சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலடித்தனர். சிலர் கண்டனமும் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் உடனடியாக தன் பதிவை திரும்பப்பெற்றுக்கொண்டார். மேலும் “நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து கடந்த 2 நாட்களாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவரின் நல்ல உடல்நிலைக்காகவும், வேகமாக குணமடையவும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என மற்றொரு பதிவை வெளியிட்டார். #RamKadam #BJP
    காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கடத்துவேன் என்ற ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #BJP #RamKadam
    மும்பை:

    மும்பை காட்கோபரில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

    இதற்காக தனது செல்போன் எண்ணை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்று கூறி அதை கொடுத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ராம்கதம் எம்.எல்.ஏ. தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

    ஆனாலும் அவருக்கு எதிராக நேற்று 2-வது நாளாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில், ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்த நிலையில், ராம் கதம் வகித்து வந்த பா.ஜனதாவின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கலந்து பேசி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    மேலும் ராம் கதமை அவர் சில காலங்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார். #BJP #RamKadam 
    நீங்கள் காதலிக்கும் பெண் உங்களது பெற்றோருக்கு பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் கூறிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #RamKadam
    மும்பை:

    மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சிகள் நடந்தன. காட்கோபரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடந்தது.

    கூட்டத்தில் ராம் கதம் பேசும்போது, தாங்கள் விரும்பும் பெண்கள் காதலை ஏற்க மறுக்கிறார்கள் என பல இளைஞர்கள் என்னிடம் உதவி கேட்கிறார்கள். நீங்கள் உங்களது பெற்றோரை அழைத்து கொண்டு என்னிடம் வாருங்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணை அவர்களுக்கு பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்றார்.

    ராம் கதமின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ காட்சி நேற்று வைரலாகியது. அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சி தரப்பில் கண்டனங்கள் எழுந்து உள்ளன.

    இது தொடர்பாக ராம் கதம் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை, என்னுடைய பேச்சு திரித்து வெளியிடப்பட்டு உள்ளது என்றார்.  #BJP #RamKadam
    ×