search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bar"

    • தனியார் மதுபானக் கூடம் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்களிடையே பலத்த எதிர்்ப்பு ஏற்பட்டது.
    • ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

    கடலூர்:

    நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் தனியார் தங்குவிடுதி பின்புறம், தனியார் மதுபானக் கூடம் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்களிடையே பலத்த எதிர்்ப்பு ஏற்பட்டது.  தனைக் கண்டித்து பா.ம.க வடக்கு மாவட்டத்தின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மாலினி சண்முகவேல் தலைமை தாங்கினார். முக்கிய அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ஜெகன் இதுகுறித்து பேசியதாவது:   இந்திரா நகர் ஊராட்சியில் தனியார் மதுபானக் கூடத்தை அனுமதிக்க மாட்டோம். அருகேயுள்ள வடக்குத்து ஊராட்சி மதுஇல்லா ஊராட்சியாக உள்ளது.

    இதற்கு நீதிமன்றம் உரிய சட்ட முறைகளை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலையில் மதுபானக் கடைகளுக்கு, தடை விதித்த நிலையில், மதுபானக் கூடம் விதிமுறைகளை மீறி அமைக்கப் பட்டுள்ளது. என்எல்சி மறுகுடியமர்வு வணிகபகுதியில், குடியிருப்புகள், அரசு பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் மதுபானக் கூடம் அமைந்துள்ளது.  ,அமைதிப் பூங்கவாக திகழும் இங்கு, இந்த மதுபானக் கூடம் இயங்கினால், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடையும். எனவே இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த மதுபான கூடத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அய்யா, அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் குறிக்கோளான மதுவில்லா தமிழகத்தை உருவாக்க பாடுபடுவோம், இவ்வாறு அவர் கூறினார்.  =இந்த ஆர்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், மு.மாவட்ட துணைசெயலாளர் சண்முகவேல், அமைப்பு செயலாளர் கயல்ராஜன், இந்திரா நகர் ஊராட்சி துணைத் தலைவர் உமாராமதாஸ், வார்டு உறுப்பினர் சுமதி ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், பிரகாஷ், ராஜா, பிரபாகரன், தேவா, கிருஷ்ணமூர்த்தி, சிவராமன், அமிர்தலிங்கம், மணிக்கண்ணன், குமரவேல், ஹரி, மற்றும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்த நெய்வேலி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.ெே

    • கலெக்டர் தகவல்
    • திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டதில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), மதுபானக் ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் வருகின்ற 16.01.2023 (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினம் அன்றும் மற்றும் குடியரசு தினமான 26.01.2023 (வியாழக்கிழமை) அன்றும் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கலெக்டர் உத்தரவின்படி மேற்படி இந்நாட்களில் ராணிப்பேட்டை மாவட்டதில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், அரசு மற்றும் தனியார் மதுகூடங்கள் இயங்காது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். அன்றைய தினங்களில் மது பார்கள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

    • குடிமகன்கள் மது வாங்கி கொண்டு வந்து பொதுமக்கள் நடந்து செல்லும் போதும் குடித்து வருகின்றனர்.
    • தட்டிக்கேட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் பஸ் நிலையத்திற்கு தினசரி ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன . பயணிகளும் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் 2 சப்வேக்கள் உள்ளன.

    இதில் மேல்புறமுள்ள மாடிக்கு செல்லும் படிக்கட்டில் 24 மணி நேரமும் குடிமகன்கள் மது வாங்கி கொண்டு வந்து பொதுமக்கள் நடந்து செல்லும் போதும் குடித்து வருகின்றனர். தட்டிக்கேட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • திருமங்கலம் அருகில் உள்ள அன்னை பாத்திமா கல்லூரியில் பட்டிமன்றம் நடந்தது.
    • ‘‘இன்றைய திரைப்படங்கள் குடும்ப வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறதா? சீரழிக்கிறதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

    மதுரை

    திருமங்கலம் அருகில் உள்ள ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் ஷகீலா ஷா ஆகியோது ஏற்பாட்டில் ''இன்றைய திரைப்படங்கள் குடும்ப வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறதா? சீரழிக்கிறதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

    ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் நிர்மலாதேவி வரவேற்றார். கல்லூரி இயக்குநர் சந்தோஷ்குமார், துணை முதல்வர் பூஜா சக்கரபோர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த பட்டிமன்றத்தில் அன்னை பாத்திமா கல்விக்கு ழுமத்தின் தாளாளர் எம்.எஸ்.ஷா நடுவராகப் பொறுப்பேற்றார். இரு அணியினரும் பாடல், திரைப்படக்கதை, நடை உடை பாவனைகளை எடுத்து கூறி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர்.

    இருதரப்பு வாதங்க ளையும் சீர்தூக்கிப் பார்த்து இன்றைய திரைப்படங்கள் குடும்ப வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன என்ற தீர்ப்பை நடுவர் வழங்கினார். இந்த பட்டி மன்றம் மாணவர்களின் சிந்தனை யைத் தூண்டியதோடு விழிப்புணர்வையும் ஏற்படு த்தியது.

    பட்டிமன்றத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ராமுத்தாய் நன்றி கூறினார்.

    கல்லூரி ஒருங்கிணை ப்பாளர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனியாண்டி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், மாணவர்களும் செய்திருந்தனர்.

    அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 113 சார்பில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டு கண்ணன் அவர்கள்- நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின் பேரில் ஆலம்பட்டி ஊராட்சியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தூய்மை பணிகள் மேற்கொண்டனர்.

    பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான பேரணியை அன்னை பாத்திமா கல்லூரி இயக்குநர் சந்தோஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    இதையொட்டி தூய்மை பணி வாகனம் ஒன்றும் கல்லூரின் சார்பில் ஆலம்பட்டி ஊராட்சி அலுவ லகத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் 260 கிலோ பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டு ஆலம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசனிடம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி , ஆலம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அரசு மதுக்கடை இல்லாததால் கள்ளச்சந்தையில் வீதிகளில் மது விற்பனை செய்யப்படுகிறது.
    • பெட்ரோல்- டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூர் வர்த்தகா் சங்கத்தினர் நேற்று காலை முதல் மாலை வரை கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    கோட்டூரில் அரசு மதுக்கடை இல்லாததால் கள்ளச்சந்தையில் வீதிகளில் மது விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே கோட்டூரில் அரசு மதுபானக்கடை திறக்க வேண்டும்.

    மின்கட்டண உயர்வு, பெட்ரோல்- டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோட்டூரில் திருவாரூர் ரோடு, மன்னார்குடி ரோடு, திருத்துறைப்பூண்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    இதனால் காலை நேரத்தில் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோட்டூர் கடைவீதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

    • மதுக்கடை ஊழியரிடம் குளிர்ந்த பீர் பாட்டில் தருமாறு கேட்டதற்கு அவர் குளிர்ந்த பீர் பாட்டில் இல்லை என கூறினார்.
    • ஆத்திரம் அடைந்த இருவரும் சரவணக்குமாரை அடித்து உதைத்து மது பாட்டில்களை சூறையாடினர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி ஊராட்சியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் பணியாற்றுபவர் சரவணகுமார் (வயது 42). சம்பவத்தன்று கூனஞ்சேரி மணி, திருவைகாவூர் சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் மதுக்கடையில் வந்து பீர் பாட்டில் கேட்டுள்ளனர். பீர் பாட்டில் தந்த மதுக்கடை ஊழியர் சரவணகுமாரிடம் குளிர்ந்த பீர் பாட்டில் தருமாறு கேட்டதற்கு அவர் குளிர்ந்த பீர் பாட்டில் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சரவணக்குமாரை அடித்து உதைத்து மது பாட்டில்களை சூறையாடினர்.

    இது குறித்து சரவ ணகுமார் கொடுத்த புகாரி ன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன் சப்-இன்ஸ்பெ க்டர் முருகே சன், சிறப்பு சப்- இன்ஸ்பெ க்டர் அன்ப ழகன், தலை மை காவலர் கார்த்திகேயன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மணி, சத்தியமூர்த்தி ஆகியோரை வலை வீசி தேடி வருகி ன்றனர்.

    • அம்மாசி கவுண்டன் காட்டுவளவு பகுதியில் மதுக்கடையை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சமரச பேச்சு நடத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த பண்ணப்பட்டி அம்மாசி கவுண்டன் காட்டுவளவு பகுதியில் மதுக்கடையை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பா.ம.க. மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சமரச பேச்சு நடத்தினர்.

    • மூன்று டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஒரே சாலையில் தொடர்ந்து 3 மதுக்கடைகள் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அதனால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறினர்.

    பேராவூரணி:

    பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராவூரணி ஒன்றிய செயலாளர் இந்துமதி தலைமையில் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மாவடுகுறிச்சி ஊராட்சி மாந்தோப்பு பகுதியில் அரசு கல்லூரி மாணவியர் விடுதி அருகில் அமைந்துள்ள கடை எண் 7874, 8096, 8068 ஆகிய மூன்று டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மாவட்ட குழு வழக்கறிஞர் கருப்பையா, சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு ஆர்.எஸ்.வேலுச்சாமி, சிபிஎம் பேராவூரணி நகர செயலாளர் வே.ரெங்கசாமி, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் அப்துல் சலாம், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சிவா, நகர செயலாளர் மைதீன் மற்றும் தென்னங்குடி கீழக்காடு மாந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் தினந்தோறும் குடித்து விட்டு வீட்டில் சண்டை போடுவதால் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஒரே சாலையில் தொடர்ந்து 3 மதுக்கடைகள் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அதனால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த மூன்று டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மதுக்கடைகள் முன்பாக பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

    பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மது பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். BrazilShooting
    ரியோ டி ஜெனிரோ:

    பிரேசில் நாட்டின் பாரா மாநிலம், பெலம் நகரில் உள்ள ஒரு மது பாரில் நேற்று மாலை வாடிக்கையாளர்கள் பலர் உற்சாகமாக மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி ஒரு பைக் மற்றும் 3 கார்களில் வந்த நபர்கள், பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    சிறிது நேரம் துப்பாக்கியால் சுட்ட அந்த நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



    துப்பாக்கி சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. தாக்குதல் நடைபெற்ற மது பாரில் போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. எனவே, போதைப்பொருள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #BrazilShooting
    கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #CaliforniaBarShooting
    தவுசண்ட் ஓக்ஸ்:

    அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் மாணவர்கள் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தி புளோரிடாவில் சட்டம் இயற்றப்பட்டது.
     
    இந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.



    தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாருக்குள் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சுமார் 30 ரவுண்டுகள் சுட்டுள்ளான். இதில் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பாரை சுற்றி வளைத்தனர். அங்கு துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.

    இந்த தாக்குதலில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #CaliforniaBarShooting
    உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேக திருவிழாவையொட்டி, ஆகஸ்ட் 9 முதல் அடுத்த 9 நாட்களுக்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple
    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 12 ஆண்டுகள் கழித்து இந்த வருடம் திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், திருப்பதியில் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம், மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் மற்றும் பயணிகளுக்கு மாற்று பாதைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், ஆகஸ்ட் 17-ம் தேதி அதிகாலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple
    ×