search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11 killed"

    அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் என்பிபி கட்சி எம்.எல்.ஏ.வான திரோங் அபோ உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    இடாநகர்:

    அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தவர் திரோங் அபோ.

    இந்நிலையில், மேற்கு கோன்சா பகுதியில் உள்ள திரப் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் என்.பி.பி. கட்சி எம்.எல்.ஏ.வான திரோங் அபோ உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மேகாலயா மாநில முதல் மந்திரி கன்ராட் சங்மா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    அருணாசலப்பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதில்லை. எம்.எல்.ஏ மீதான தாக்குதல் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என மாநில உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். 

    அருணாசலப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மேற்கு கோன்சா பகுதியில் போட்டியிட்டவர் திரோங் அபோ என்பதும், 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மது பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். BrazilShooting
    ரியோ டி ஜெனிரோ:

    பிரேசில் நாட்டின் பாரா மாநிலம், பெலம் நகரில் உள்ள ஒரு மது பாரில் நேற்று மாலை வாடிக்கையாளர்கள் பலர் உற்சாகமாக மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி ஒரு பைக் மற்றும் 3 கார்களில் வந்த நபர்கள், பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    சிறிது நேரம் துப்பாக்கியால் சுட்ட அந்த நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



    துப்பாக்கி சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. தாக்குதல் நடைபெற்ற மது பாரில் போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. எனவே, போதைப்பொருள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #BrazilShooting
    ஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பஸ் ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். #JKAccident #BusFallsIntoGorge
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் லோரன் என்ற இடத்தில் இருந்து பூஞ்ச் நகருக்கு இன்று பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. பிளேரா மலைப்பகுதியில் சென்றபோது, அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகி, ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது. பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர்.



    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த கோர விபத்தில் 11 பேர் பலியானார்கள். 17 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. #JKAccident #BusFallsIntoGorge
    ஜோர்டான் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JordanFloods
    அம்மான்:

    ஜோர்டான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெட்ரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியாகினர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.



    ஜோர்டான் நாட்டின் பழமையான பாலைவன நகரமான பெட்ராவில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து ஜோர்டான் நாட்டு ராணுவம் ஹெலிகாப்டர்களில் சென்று சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #JordanFloods
    ×