என் மலர்

  நீங்கள் தேடியது "JK Poonch"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் கால்நடைகளை கடத்தும் கும்பலை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து கால்நடைகளை மீட்டனர்.
  ஜம்மு:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சட்டவிரோதமாக கால்நடைகளை சிலர் ஏற்றி செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பூஞ்ச் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினர்.

  இதில், 5 வாகனங்களில் சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த  வாகனங்களில் ஏற்றப்பட்டிருந்த 50 கால்நடைகளை மீட்ட போலீசார், கால்நடைகளை கடத்தி வந்த வாகன ஓட்டிகள் 5 பேரையும் கைது செய்தனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

  இதேபோல் ஜம்மு மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் 4 வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது, போதை மருந்து விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பஸ் ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். #JKAccident #BusFallsIntoGorge
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் லோரன் என்ற இடத்தில் இருந்து பூஞ்ச் நகருக்கு இன்று பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. பிளேரா மலைப்பகுதியில் சென்றபோது, அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகி, ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது. பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர்.  விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  இந்த கோர விபத்தில் 11 பேர் பலியானார்கள். 17 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. #JKAccident #BusFallsIntoGorge
  ×