என் மலர்

  நீங்கள் தேடியது "Brazil shooting"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மது பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். BrazilShooting
  ரியோ டி ஜெனிரோ:

  பிரேசில் நாட்டின் பாரா மாநிலம், பெலம் நகரில் உள்ள ஒரு மது பாரில் நேற்று மாலை வாடிக்கையாளர்கள் பலர் உற்சாகமாக மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி ஒரு பைக் மற்றும் 3 கார்களில் வந்த நபர்கள், பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

  சிறிது நேரம் துப்பாக்கியால் சுட்ட அந்த நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.  துப்பாக்கி சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. தாக்குதல் நடைபெற்ற மது பாரில் போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. எனவே, போதைப்பொருள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #BrazilShooting
  ×