search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான கூடம்"

    • தாசில்தார் மற்றும் போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் அந்த மதுபான கூடம் திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர்.
    • தற்போது அந்த மதுபான கூட நிர்வாகிகள் மீண்டும் மதுபான கூடத்தை திறந்து செயல்படுத்துவோம் என்று கூறி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் பகுதியை சேர்ந்த சுற்றுவட்டார பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் கிராமத்திற்கு உட்பட்ட பந்தம்பாளையத்தில் ஒரு தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கூடம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவருக்கும் இடையூறாக உள்ளது. ஏற்கனவே இந்த மதுபான கூடம் அமைவதற்கு முன்பு வேட்டுவபாளையம், முறியாண்டம்பாளையம், சேவூர் ஆகிய 3 ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டத்தில் இந்த மதுபான கூடம் அமைய கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.

    இதையடுத்து மதுபான கூடத்தை எதிர்த்து பொதுமக்கள் சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு குறைதீர்க்கும் கூட்டத்தில் 3 முறை மனு அளித்துள்ளோம். அதிகாரிகளிடமும் மனு அளித்து உள்ளோம். இதையும் மீறி அந்த மதுபான கூட நிர்வாகத்தினர், வேறொரு மாவட்டத்தில் அனுமதி உரிமம் பெற்று இங்கு மதுபான கூடத்தை அமைத்தனர். இதனால் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு முதல் முறையாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தாசில்தார் மற்றும் போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் அந்த மதுபான கூடம் திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கலைந்து சென்றோம்.

    பின்னர் சுமார் ஒரு வாரம் பூட்டி இருந்த அந்த மதுபான கூடம் மீண்டும் திறக்கப்பட்டது. இதையறிந்து மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போதும் பொதுமக்கள் முன்னிலையில் அரசு அதிகாரிகள் இந்த கடை இனி இங்கே திறக்கப்படாது என்று மீண்டும் உறுதி அளித்தனர். இதனால் கலைந்து சென்றோம்.

    இந்நிலையில் தற்போது அந்த மதுபான கூட நிர்வாகிகள் மீண்டும் மதுபான கூடத்தை திறந்து செயல்படுத்துவோம் என்று கூறி வருகிறார்கள். அப்படி மீண்டும் திறக்கப்பட்டால் அது பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே விவசாயிகளின் நலன் மற்றும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த மதுபான கூடத்தை இங்கிருந்து முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • தலைமறைவான 2 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • சுசீந்திரம் அருகே நல்லூரில் தனியார் மதுபான கூடம் நடத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி :

    கோட்டார் ஈழவர் சன்னதி தெருவை சேர்ந்த வர் குமரன் என்ற நயினார் குமார் (வயது 53). இவர்சுசீந்திரம் அருகே நல்லூரில் தனியார் மதுபான கூடம் நடத்தி வருகிறார்.

    இங்கு மேஜையில் இருந்த ரூ.94 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதையடுத்து நயினார் குமார், மதுபான கூடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா வின் காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் பணத்தை திருடியது தெரிய வந்தது.

    இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த அந்தோணி சவரி முத்து (45), களக்காட்டைச் சேர்ந்த சந்திரன், ராமநாதபுரம் மாவட்டம் வேம்பன் குளம் பகுதியைச் சேர்ந்த நம்புவேல் (40) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இது குறித்து சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி விசாரணை நடத்தி வந்தார். போலீசார் தேடுவதை அறிந்த 3 பேரும் தலைமறைவானார்கள். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் வேம்பன் குளம் பகுதியைச் சேர்ந்த நம்புவேல் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 28 மதுபான கூடங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • அனுமதி பெற்று இயங்கி வரும் தனியார் மதுபானம் அருந்தும் கூடங்களை மாவட்ட கலால் உதவி ஆணையர் ஷோபா தலைமையில், டாஸ்மாக் மேலாளர் திருமாறன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் மது அருந்தும் கூடங்களில் போலி மது மற்றும் டாஸ்மாக் தவிர மற்ற மதுபானங்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் அனுமதி பெற்று இயங்கி வரும் தனியார் மதுபானம் அருந்தும் கூடங்களை மாவட்ட கலால் உதவி ஆணையர் ஷோபா தலைமையில், டாஸ்மாக் மேலாளர் திருமாறன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது.இதில் மதுபானக்கூடங்களில் விற்கப்படும் மதுக்கள் டாஸ்மாக்கில் வாங்கப்பட்டதா? என்றும் மேலும் வேறு போலியான மது பானங்கள் விற்கப்படுகிறதா? என்றும் மது பாட்டில்களை நேரில் ஆய்வு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து மதுபான கூடத்தில் மதுபானங்கள் இருப்பு மற்றும் போதுமான கழிவறை வசதிகள் உள்ளிட்டவைகள் சரியாக உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் மதுபானம் அருந்தும் கூடத்தில் நேற்று தொடங்கிய ஆய்வு தொடர்ந்து அனைத்து இடங்களிலும் நடைபெறும் என்றும், மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 37 டாஸ்மாக் கடைகளில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 28 மது அருந்தும் கூடங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது அனுமதி பெற்ற மதுபான கூடங்கள் மட்டும் இயங்கி வருவதாக டாஸ்மாக் மேலாளர் திருமாறன் தெரிவித்துள்ளார்.

    • தனியார் மதுபானக் கூடம் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்களிடையே பலத்த எதிர்்ப்பு ஏற்பட்டது.
    • ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

    கடலூர்:

    நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் தனியார் தங்குவிடுதி பின்புறம், தனியார் மதுபானக் கூடம் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்களிடையே பலத்த எதிர்்ப்பு ஏற்பட்டது.  தனைக் கண்டித்து பா.ம.க வடக்கு மாவட்டத்தின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மாலினி சண்முகவேல் தலைமை தாங்கினார். முக்கிய அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ஜெகன் இதுகுறித்து பேசியதாவது:   இந்திரா நகர் ஊராட்சியில் தனியார் மதுபானக் கூடத்தை அனுமதிக்க மாட்டோம். அருகேயுள்ள வடக்குத்து ஊராட்சி மதுஇல்லா ஊராட்சியாக உள்ளது.

    இதற்கு நீதிமன்றம் உரிய சட்ட முறைகளை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலையில் மதுபானக் கடைகளுக்கு, தடை விதித்த நிலையில், மதுபானக் கூடம் விதிமுறைகளை மீறி அமைக்கப் பட்டுள்ளது. என்எல்சி மறுகுடியமர்வு வணிகபகுதியில், குடியிருப்புகள், அரசு பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் மதுபானக் கூடம் அமைந்துள்ளது.  ,அமைதிப் பூங்கவாக திகழும் இங்கு, இந்த மதுபானக் கூடம் இயங்கினால், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடையும். எனவே இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த மதுபான கூடத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அய்யா, அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் குறிக்கோளான மதுவில்லா தமிழகத்தை உருவாக்க பாடுபடுவோம், இவ்வாறு அவர் கூறினார்.  =இந்த ஆர்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், மு.மாவட்ட துணைசெயலாளர் சண்முகவேல், அமைப்பு செயலாளர் கயல்ராஜன், இந்திரா நகர் ஊராட்சி துணைத் தலைவர் உமாராமதாஸ், வார்டு உறுப்பினர் சுமதி ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், பிரகாஷ், ராஜா, பிரபாகரன், தேவா, கிருஷ்ணமூர்த்தி, சிவராமன், அமிர்தலிங்கம், மணிக்கண்ணன், குமரவேல், ஹரி, மற்றும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்த நெய்வேலி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.ெே

    ×