search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுக்கடைகளை அகற்றக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    மதுக்கடைகளை அகற்றக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • மூன்று டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஒரே சாலையில் தொடர்ந்து 3 மதுக்கடைகள் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அதனால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறினர்.

    பேராவூரணி:

    பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராவூரணி ஒன்றிய செயலாளர் இந்துமதி தலைமையில் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மாவடுகுறிச்சி ஊராட்சி மாந்தோப்பு பகுதியில் அரசு கல்லூரி மாணவியர் விடுதி அருகில் அமைந்துள்ள கடை எண் 7874, 8096, 8068 ஆகிய மூன்று டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மாவட்ட குழு வழக்கறிஞர் கருப்பையா, சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு ஆர்.எஸ்.வேலுச்சாமி, சிபிஎம் பேராவூரணி நகர செயலாளர் வே.ரெங்கசாமி, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் அப்துல் சலாம், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சிவா, நகர செயலாளர் மைதீன் மற்றும் தென்னங்குடி கீழக்காடு மாந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் தினந்தோறும் குடித்து விட்டு வீட்டில் சண்டை போடுவதால் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஒரே சாலையில் தொடர்ந்து 3 மதுக்கடைகள் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அதனால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த மூன்று டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மதுக்கடைகள் முன்பாக பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

    Next Story
    ×