search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby"

    • கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்துள்ளது.
    • குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பொதுவாக எல்லோருக்கும் 2 கைகளிலும் 10 விரல்கள், 2 கால்களிலும் 10 விரல்கள் என 20 விரல்கள் தான் இருக்கும். அரிதாக 6 விரல்களோடு பிறக்கும் குழந்தைகளை சில நேரங்களில் காண முடியும். அப்படி 6 விரல்களோடு பிறக்கும் குழந்தைகள் அரிது. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் 24 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அங்குள்ள நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராவளி. கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், கோரட்லா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சிறிது நேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்துள்ளது. இது அரிதிலும் அரிது என்று டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் அந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியதும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் அந்த குழந்தையை தெய்வத்தின் அவதாரம் என்று கூறி வழிபட்டு செல்வதோடு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 24 விரல்களுடன் பிறந்த அந்த குழந்தையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ராஜா (வயது 35). இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
    • றிது நேரம் கழித்து அன்னலட்சுமி வந்து பார்த்த போது, 2 வயது ஆண் குழந்தையை காணவில்லை.

    விழுப்புரம்:

          வானூர் அருகேயுள்ள காசிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35). இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இவர்கள் குடும்பத்துடன் பூத்துறை கிராமத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் தங்கி, விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இன்று காலையில் கணவன், மனைவி 2 பேரும் விவசாய வேலைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகள் 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அன்னலட்சுமி வந்து பார்த்த போது, 2 வயது ஆண் குழந்தையை காணவில்லை. மற்ற குழந்தைகளிடம் விசாரித்த போது, 2 வயது குழந்தை கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டி ருந்தது அன்னலட்சுமிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது கணவர் ராஜாவிடம் நடந்ததை கூறினார். கிணற்றில் குதித்து ராஜா குழந்தையை தேடினார். இதில் குழந்தை கிடைக்காத தால், ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்தனர். வானூர் தீயணைப்பு அலுவலர் ராஜா தலைமையில் வந்த வீரர்கள், கிணற்றில் குதித்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணி வரை குழந்தை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • குழந்தைகள் செய்யும் குறும்புகளால் பெண்கள் அவதிக்கு ஆளாவதை அடிக்கடி பார்க்கலாம்.
    • வீட்டின் சமையலறையில் இருந்த இட்லி தட்டை எடுத்து தட்டியபடி விரலை அதன் ஓட்டைக்குள் நுழைப்பதும், எடுப்பதுமாக இருந்தது.

    கன்னியாகுமரி:

    வீடுகளில் சிறு குழந்தைகளின் சேட்டைக்கு அளவே இருக்காது. இப்போது கோடை விடுமுறை விடப்பட்டதால் வீடுகளில் குழந்தைகள் செய்யும் குறும்புகளால் பெண்கள் அவதிக்கு ஆளாவதை அடிக்கடி பார்க்கலாம்.

    அந்த வகையில் கன்னியாகுமரி லூர்து மாதா தெருவில் குடியிருக்கும் ஆரோக்கிய செல்வி என்பவரின் 4 வயது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது வீட்டின் சமையலறையில் இருந்த இட்லி தட்டை எடுத்து தட்டியபடி விரலை அதன் ஓட்டைக்குள் நுழைப்பதும், எடுப்பதுமாக இருந்தது.

    ஒரு கட்டத்தில் குழந்தையின் விரல் இட்லி தட்டின் ஓட்டைக்குள் சிக்கி கொண்டது. அதனை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை அழுதது. சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், குழந்தையின் விரலை இட்லி தட்டில் இருந்து வெளியே எடுக்க முயன்றனர். அவர்களால் முடியாமல் போனதை தொடர்ந்து கன்னியாகுமரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து சென்று கட்டிங் எந்திரம் மூலம் இட்லி தட்டை துண்டு, துண்டாக வெட்டி குழந்தையின் விரலை மீட்டனர். கொஞ்ச நேரத்தில் ஏற்பட்ட களேபரத்தால் அந்த பகுதியே பரபரப்பாகி போனது. இனி இந்த விடுமுறை முடியும் முன்பு இதுபோன்ற எத்தனை குறும்புகளை இந்த குழந்தைகள் செய்யப்போகிறார்களோ என்று பெண்கள் இப்போதே தவிப்பில் உள்ளனர்.

    • பண்ருட்டியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவமாகி அழகான பெண் குழந்தை பிறந்தது.
    • ஆம்புலன்சில் பணியில் இருந்த அவசர கால நுட்புணர் சதிஷ் பிரசவம் பார்த்தார்,

    கடலூர்:

    பண்ருட்டியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவமாகி அழகான பெண் குழந்தை பிறந்தது.  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முடப்பள்ளியை சேர்ந்தவர் தமிழ்அரசன் மனைவி அனிதா (வயது 35). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ் விருத்தாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அனிதாவிற்கு பிரசவ வலி அதிகமானதால், டிரைவர் தவபாலன் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார். 

    அதிகாலை 5.45 மணி அளவில் ஆம்புலன்சில் பணியில் இருந்த அவசர கால நுட்புணர் சதிஷ் பிரசவம் பார்த்தார். இதில் அனிதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • சிவகாசியில் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் ஆண் சிசு உடலை வீசியது யார்? என சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கிறனர்.
    • தலைமை டாக்டர் அய்யனாரிடம் தகவல் தெரிவித்தார்.

    சிவகாசி

    சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். மகப்பேறு சிகிச்சை பிரிவு தனியாக இயங்கி வருகிறது. நேற்று மதியம் மகப்பேறு சிகிச்சை பிரிவில் உள்ள ஒரு கழிவறையை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் சென்றார்.

    அப்போது 250 கிராம் எடை உள்ள குறைமாத ஆண் சிசு உடல் கிடந்தது. இதைக்கண்ட தூய்மை பணியாளர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமை டாக்டர் அய்யனாரிடம் தகவல் தெரிவித்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிசு உடலை மீட்டு அதனை வீசி சென்ற பெண் யார்? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை ஆற்றங்கரையில் போட்டு சென்றது யார் என விசாரணை.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள கொத்தங்குடி மண்ணியாற்றங்கரையில் துணி துவைப்பதற்கு பொதுமக்கள் சிலர் சென்றனர். அப்போது பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது பிறந்து ஒரு சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக குழந்தையை மீட்டு கொத்தங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவ மனைக்கு குழந்தையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஏற்பட்டதாலும், குழந்தையை ஒப்படைத்து 2 மணி நேரமாகியும் திரவ உணவு கொடுக்கப்படாததாலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கொத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை ஆற்றங்கரையில் போட்டு சென்றது யார் ? குழந்தையின் பெற்றோர் யார் ? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 மணி நேரத்திற்கு மேல் ஆம்புலன்ஸ் கேட்டு கெஞ்சி கதறி அழுதார்.
    • இறந்து போன குழந்தையை பைக்கில் எடுத்துச் செல்வதைக் கண்டவர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், குமடா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மத்திஷ்ராய ராஜு. இவரது மனைவி மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான மகேஸ்வரிக்கு கடந்த 2-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் மகேஸ்வரியை படேரு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தார்.

    அங்கு மகேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்ததால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர். ஆனால் அவர்களது மகிழ்ச்சி ஒரு நாள் கூட நிலைத்திருக்கவில்லை.

    இந்நிலையில் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    குழந்தை நேற்று காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இறந்து போன குழந்தையை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தர வேண்டும் என குழந்தையின் தந்தை ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டார். ஆனால் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் மத்திஷ்ராய ராஜு கோரிக்கையை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆம்புலன்ஸ் கேட்டு கெஞ்சி கதறி அழுதார். ஆனாலும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மனம் இறங்காமல் கல் நெஞ்சம் படைத்தவர்களாக இருந்தனர்.

    இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸை நாடிய போது அவர்கள் அதிக அளவில் பணத்தை கேட்டனர். அந்த பணத்தை கொடுக்க குழந்தையின் தந்தையால் முடியவில்லை. செய்வது அறியாமல் தவித்த குழந்தையின் தந்தை குழந்தையை பைக்கில் கொண்டு செல்ல முடிவு செய்தார். ஊரிலிருந்து நண்பர்கள் கொண்டு வந்த பைக்கின் பின்னால் மனைவி குழந்தையை வைத்துக்கொண்டு 120 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றார்.

    இறந்து போன குழந்தையை பைக்கில் எடுத்துச் செல்வதைக் கண்டவர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தார். இதனை ஒரு சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மருத்துவ துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • பையில் பிறந்து 2 நாளே ஆன குழந்தை இருந்தது.
    • சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னூர்,

    கோவை அன்னூர் அருகே உள்ள சாணாம்பாளையம் கட்டபொம்மன் நகரில் கடந்த 30-ந் தேதி கட்டப்பை ஒன்று கிடந்தது.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அப்போது அந்த பையில் பிறந்து 2 நாளே ஆன குழந்தை இருந்தது.குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்த பின்னர், காப்பகத்திற்கு அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். குழந்தையை இங்கு வீசி சென்றது யார்? அந்த பகுதியில் யாருக்காவது குழந்தை பிறந்ததா ஆரம்ப சுகாதார நிலையத்தில் யாருக்காவது குழந்தை பிறந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில், சம்பவதன்று அதிகாலை 12 மணிக்கு 2 பெண்கள் கையில் குழந்தையை எடுத்து ெகாண்டு வருவதும், சிறிது நேரம் கழித்து 2 பேரும் குழந்தை இல்லாமல் தனியாக செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அந்த பெண்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக இங்கு குழந்தையை வீசி சென்றனர் என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    தற்போது குழந்தையை வீசி சென்ற பெண்களின் அடையாளத்தை கண்டுபிடித்துள்ளனர். அதனை வைத்து அவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மனமகிழச்சியுடன் இருந்தால் நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
    • கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழங்கள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்–துறை ஒருங்–கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேராவூரணி என்.அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக பேராவூரணி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நவீனாரெட்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சேர்ந்த 250 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணியும் விழா நடைபெற்றது. பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் வி.சவுந்தராஜன் பேசியதாவது:-

    கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்தான உணவு உண்ண வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மனமகி ழச்சியுடன் இருந்தால் நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றார். தி.மு.க. தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுப சேகர், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீது ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழங்கள் வழங்கப்பட்டது. நிறைவாக சேதுபாவாசத்திரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அனுசியா நன்றி கூறினார்.

    • நிறைமாத கா்ப்பிணியான சந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
    • தாயும், சேயும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் பசுபதி. இவரது மனைவி சந்தியா (வயது 21). நிறைமாத கா்ப்பிணியான சந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனா்.

    தகவலின்பேரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா் நீலா, ஓட்டுநா் டேவிட்ராஜ் ஆகியோா் சந்தியாவின் வீட்டுக்கு சென்றனா். பின்னா் சந்தியாவை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அழைத்து வந்தனா்.

    ஆனால் வரும் வழியிலேயே சந்தியாவுக்கு வலி அதிகரித்தைத் தொடா்ந்து அம்மன் நகா் பகுதியில் ஆம்புலன்சை நிறுத்தினா். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்ததைத் தொடா்ந்து, தாயும், சேயும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு இருவருக்கும் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்தது.
    • கூடுதலாக உள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தை மொத்தம் 4 கால்களுடன் பிறந்துள்ளது.

    அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்ததால் பெற்றோர், உறவினர்கள் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேவேளை, குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர். குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதேவேளை, கூடுதலாக உள்ள 2 கால்கள் செயல் இழந்த நிலையில் உள்ளது.

    மேலும், கருமுட்டை பிரிதலின்போது ஏற்பட்ட குறைபாட்டால் குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளதாகவும், கூடுதலாக உள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என்றும் டாக்டர்கள் கூறினர்.

    • மேலூர் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
    • இதனை தொடர்ந்து உடனடியாக தாயும், சேயும் அதே ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி போதும் பொண்ணு. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான போது (35). இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர் . சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்சில் கர்ப்பிணியை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    ஆனால் வழியிலேயே பிரசவ வலி அதிகமானமானதால் வேன் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் போதுவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக தாயும், சேயும் அதே ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர்.ஆம்புலன்ஸ், குழந்தை, Ambulance, baby

    ×