என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வானூர் அருகே   கிணற்றில் விழுந்த 2 வயது  ஆண்குழந்தை பலி
    X

    கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு வீரர்களை படத்தில் காணலாம்

    வானூர் அருகே கிணற்றில் விழுந்த 2 வயது ஆண்குழந்தை பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜா (வயது 35). இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
    • றிது நேரம் கழித்து அன்னலட்சுமி வந்து பார்த்த போது, 2 வயது ஆண் குழந்தையை காணவில்லை.

    விழுப்புரம்:

    வானூர் அருகேயுள்ள காசிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35). இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இவர்கள் குடும்பத்துடன் பூத்துறை கிராமத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் தங்கி, விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இன்று காலையில் கணவன், மனைவி 2 பேரும் விவசாய வேலைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகள் 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அன்னலட்சுமி வந்து பார்த்த போது, 2 வயது ஆண் குழந்தையை காணவில்லை. மற்ற குழந்தைகளிடம் விசாரித்த போது, 2 வயது குழந்தை கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டி ருந்தது அன்னலட்சுமிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது கணவர் ராஜாவிடம் நடந்ததை கூறினார். கிணற்றில் குதித்து ராஜா குழந்தையை தேடினார். இதில் குழந்தை கிடைக்காத தால், ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்தனர். வானூர் தீயணைப்பு அலுவலர் ராஜா தலைமையில் வந்த வீரர்கள், கிணற்றில் குதித்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணி வரை குழந்தை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×