search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்புலன்சு"

    • முற்றிலும் இலவசமாக மருத்துவ வசதியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்.
    • குறைந்த விலையில் உணவு சாப்பிடும் வகையில் அம்மா உணவகம் திறந்தால் வசதியாக இருக்கும்.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பஸ்நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் பயணிகளின் அவசர சிகிச்சைக்கு நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, புதிய பஸ் நிலையத்தில் இலவச தனியார் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர் ஆலோசனை, மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், மற்ற அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே முற்றிலும் இலவசமாக மருத்துவ வசதியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். அல்லது, அரசு மருத்துவமனை ஒன்றை இங்கு அமைக்க வேண்டும்.

    இதேபோல் ஏழை, எளியோர் குறைந்த விலையில் உணவு சாப்பிடும் வகையில் அம்மா உணவகம் திறந்தால் வசதியாக இருக்கும் என்றனர்.

    • 108 ஆம்புலன்சு அலுவலகத்தில் 4-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
    • ஓட்டுநர் பணிக்கு 24 முதல் 35 வயத்திற்குள் இருக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர்கள், ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்சு அலுவலகத்தில் 4-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் இந்த தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள், உரிய சான்றிதழ்களுடன் வர வேண்டும். மருத்துவ உதவியாளர் 19 வயதில் இருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு 24 முதல் 35 வயத்திற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 10 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    • 108 ஆம்புலன்சு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    தொண்டி

    தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட சின்னத் தொண்டி கிராமத்தில் பேரூராட்சிக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் நில அளவை செய்து வேலி அமைப்பது கடற்கரை எதிரே நல்ல தண்ணீர் ஊற்று உள்ள முடிச்சலான் தோப்பில் உள்ள கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய அங்கு அமைந்துள்ள 4 கிணற்றைச் சுற்றிலும் கம்பி வேலி சுற்றி இரும்பு கதவு அமைக்க வேண்டும்.

    பேரூராட்சிக்கு சொந்தமான 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே உள்ள பம்ப் ரூமிற்கு மின் இணைப்பு மற்றும் மராமத்து பணி செய்ய வேண்டும்.

    தொண்டியில் இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுவதாலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவசர கால மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவனை கொண்டு செல்வதற்கும், இங்கு முறையான அவசர ஊர்தி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய அவசர ஊர்தியான 108 வாகனம் அரசு வழங்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்வது, டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் புகை போக்கி எந்திரம் வாங்குதல், உயர் மின் அழுத்தம் காரணமாக பழுதடைந்த மின் விளக்குகளுக்குப் பதிலாக புதிதாக 164 மின் விளக்குகள் பொருத்துவது போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கியமான பகுதியாக விளங்கி வருகின்றது.

    இங்கிருந்து சென்னை, வேலூர், திண்டிவனம், செங்கல்பட்டு, திருப்பதி மார்க்கமாக தினமும் 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எப்போதுமே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக விளங்குகின்றது.

    இவ்வளவு மக்கள் வந்து செல்கின்ற இந்த இடத்தில் போதிய போலீசார் பாதுகாப்புக்கு இல்லாததாலும், பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்யாததாலும் அதிக சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது.

    பஸ் நிலையத்தின் உள்ளே சுற்றி திரியும் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பஸ் நிலையத்துக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடமும், பொது மக்களிடமும், மாணவ-மாணவிகளிடமும் பாராபட்சம் இல்லாமல் பணம் பறிக்கும் சம்பவம் தினந்தோறும் அரங்கேறி வருகின்றது.

    அது மட்டுமல்லாமல் திருநங்கைகளுக்குள் அவ்வப்போது போட்டி பொறாமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், ஆபாசமாக பேசிக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி என்ற 27 வயதுடைய திருநங்கை காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்அம்பி பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வருகிறார். அஞ்சலி கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆணாக இருந்து திருநங்கையாக மாறி உள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிக நடமாட்டம் உள்ளபஸ் நிலையத்தின் உள்ளே முககவசம் அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் திடீரென அஞ்சலி மீது பாய்ந்து அரிவாளால் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அஞ்சலியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அஞ்சலி அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.

    • நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • அரசு மருத்துவமனை நோக்கி செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானது.

     திருப்பூர் :

    திருப்பூர், அவிநாசி ரோடு எஸ்.ஏ.பி., தியேட்டர் பஸ் நிறுத்தம் அடுத்துள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி கனகா ( வயது 32). கர்ப்பிணியான இவருக்கு நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து கணவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டார்.

    குமார்நகரில் இருந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ், கனகாவை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனை நோக்கி செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானது.

    இதனையடுத்து டெக்னீசியன், டிரைவர் குறளரசன் பிரசவம் பார்த்தனர். வழியிலேயே ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    • 2 மணி நேரத்திற்கு மேல் ஆம்புலன்ஸ் கேட்டு கெஞ்சி கதறி அழுதார்.
    • இறந்து போன குழந்தையை பைக்கில் எடுத்துச் செல்வதைக் கண்டவர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், குமடா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மத்திஷ்ராய ராஜு. இவரது மனைவி மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான மகேஸ்வரிக்கு கடந்த 2-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் மகேஸ்வரியை படேரு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தார்.

    அங்கு மகேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்ததால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர். ஆனால் அவர்களது மகிழ்ச்சி ஒரு நாள் கூட நிலைத்திருக்கவில்லை.

    இந்நிலையில் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    குழந்தை நேற்று காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இறந்து போன குழந்தையை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தர வேண்டும் என குழந்தையின் தந்தை ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டார். ஆனால் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் மத்திஷ்ராய ராஜு கோரிக்கையை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆம்புலன்ஸ் கேட்டு கெஞ்சி கதறி அழுதார். ஆனாலும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மனம் இறங்காமல் கல் நெஞ்சம் படைத்தவர்களாக இருந்தனர்.

    இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸை நாடிய போது அவர்கள் அதிக அளவில் பணத்தை கேட்டனர். அந்த பணத்தை கொடுக்க குழந்தையின் தந்தையால் முடியவில்லை. செய்வது அறியாமல் தவித்த குழந்தையின் தந்தை குழந்தையை பைக்கில் கொண்டு செல்ல முடிவு செய்தார். ஊரிலிருந்து நண்பர்கள் கொண்டு வந்த பைக்கின் பின்னால் மனைவி குழந்தையை வைத்துக்கொண்டு 120 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றார்.

    இறந்து போன குழந்தையை பைக்கில் எடுத்துச் செல்வதைக் கண்டவர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தார். இதனை ஒரு சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மருத்துவ துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் ‘கிரீன் காரிடார்’ அமைக்கப்பட்டது.
    • மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றபோது வாகனம் மோதியது. இதில் திருச்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருச்செல்வத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் நிலையை பார்த்து கண்கலங்கினர்.

    மூளைச் சாவு அடைந்த திருச்செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோவை மருத்துவமனையில் சந்திரமோகன் என்பவருக்கு கல்லீரலும், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புனேவை சேர்ந்த பாவுராவ் நகாடி என்பவருக்கு இதயமும் தேவைப்படுவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் திருச்செல்வத்தின் இதயம், கல்லீரலை பத்திரமாக அகற்றி ஆம்புலன்ஸ் மூலம், சாலை மார்க்கமாக கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் பிற மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்ல உடனே நடவடிக்கை எடுத்தனர்.

    போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழிகாட்டுதலில் மதுரையில் இருந்து இன்று காலை கல்லீரல், இதயத்துடன் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கோவை, புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. அதன் முன் போலீஸ் வாகனம் சைரன் ஒலித்தபடி சென்றது.

    நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் 'கிரீன் காரிடார்' அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது. இன்று மதியம் 2 மணிக்குள் ஆம்புலன்ஸ் உரிய இடத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. 

    • மூன்றாவதாக கர்ப்பமாக இருந்த வள்ளிக்கு அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது.
    • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸூக்கு தொடர்பு கொண்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், (வயது 30). இவரது மனைவி வள்ளி( 25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவதாக கர்ப்பமாக இருந்த வள்ளிக்கு அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸூக்கு பிரகாஷ் தொடர்பு கொண்டார். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் வள்ளியை அழைத்துக் கொண்டு, தலைமை அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தனர். அவிநாசி - திருப்பூர் ரோட்டில் ஆம்புலன்ஸ் பயணிக்கும் போது, வள்ளிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து டிரைவர் செந்தில்குமார் ஆம்புலன்ைஸ ஓரமாக நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் சுரேகா பிரசவம் பார்த்தார். அப்போது வள்ளிக்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    ×