என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baby Born"

    • லண்டனை சேர்ந்த பெண்ணிற்கு பிறவியிலேயே கருப்பை இல்லை.
    • லண்டன் இம்பீரியல் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

    இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்த 34 வயது பெண்ணிற்கு பிறவியிலேயே கருப்பை இல்லை.

    இந்நிலையில், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 40 வயது பெண் ஒருவரின் கருப்பை, கடந்த 2023-ம் ஆண்டு இவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. லண்டன் இம்பீரியல் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

    கருப்பை பொருத்தப்பட்ட சில மாதங்களிலேயே கருத்தரித்த அந்த பெண், தற்போது எவ்வித பாதிப்புமின்றி ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். "இறந்த பின்பும் ஒரு பெண்ணால் இன்னொருவருக்கு தாய்மையைத் தர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என டாக்டர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் மருத்துவத் துறையில் புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

    • மூன்றாவதாக கர்ப்பமாக இருந்த வள்ளிக்கு அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது.
    • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸூக்கு தொடர்பு கொண்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், (வயது 30). இவரது மனைவி வள்ளி( 25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவதாக கர்ப்பமாக இருந்த வள்ளிக்கு அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸூக்கு பிரகாஷ் தொடர்பு கொண்டார். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் வள்ளியை அழைத்துக் கொண்டு, தலைமை அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தனர். அவிநாசி - திருப்பூர் ரோட்டில் ஆம்புலன்ஸ் பயணிக்கும் போது, வள்ளிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து டிரைவர் செந்தில்குமார் ஆம்புலன்ைஸ ஓரமாக நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் சுரேகா பிரசவம் பார்த்தார். அப்போது வள்ளிக்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    ×