search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே ஓடும் ஆம்புலன்சில் இளம் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது: ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு
    X

    பண்ருட்டி அருகே ஓடும் ஆம்புலன்சில் இளம் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது: ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

    • பண்ருட்டியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவமாகி அழகான பெண் குழந்தை பிறந்தது.
    • ஆம்புலன்சில் பணியில் இருந்த அவசர கால நுட்புணர் சதிஷ் பிரசவம் பார்த்தார்,

    கடலூர்:

    பண்ருட்டியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவமாகி அழகான பெண் குழந்தை பிறந்தது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முடப்பள்ளியை சேர்ந்தவர் தமிழ்அரசன் மனைவி அனிதா (வயது 35). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ் விருத்தாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அனிதாவிற்கு பிரசவ வலி அதிகமானதால், டிரைவர் தவபாலன் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

    அதிகாலை 5.45 மணி அளவில் ஆம்புலன்சில் பணியில் இருந்த அவசர கால நுட்புணர் சதிஷ் பிரசவம் பார்த்தார். இதில் அனிதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    Next Story
    ×