என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடும்  ஆம்புலன்சில்  கா்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
    X

    ஓடும் ஆம்புலன்சில் கா்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது

    • நிறைமாத கா்ப்பிணியான சந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
    • தாயும், சேயும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் பசுபதி. இவரது மனைவி சந்தியா (வயது 21). நிறைமாத கா்ப்பிணியான சந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனா்.

    தகவலின்பேரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா் நீலா, ஓட்டுநா் டேவிட்ராஜ் ஆகியோா் சந்தியாவின் வீட்டுக்கு சென்றனா். பின்னா் சந்தியாவை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அழைத்து வந்தனா்.

    ஆனால் வரும் வழியிலேயே சந்தியாவுக்கு வலி அதிகரித்தைத் தொடா்ந்து அம்மன் நகா் பகுதியில் ஆம்புலன்சை நிறுத்தினா். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்ததைத் தொடா்ந்து, தாயும், சேயும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு இருவருக்கும் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

    Next Story
    ×