search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் அருகே கட்ைட பையில் குழந்தையை வீசிய பெண்கள் அடையாளம் தெரிந்தது
    X

    அன்னூர் அருகே கட்ைட பையில் குழந்தையை வீசிய பெண்கள் அடையாளம் தெரிந்தது

    • பையில் பிறந்து 2 நாளே ஆன குழந்தை இருந்தது.
    • சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னூர்,

    கோவை அன்னூர் அருகே உள்ள சாணாம்பாளையம் கட்டபொம்மன் நகரில் கடந்த 30-ந் தேதி கட்டப்பை ஒன்று கிடந்தது.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அப்போது அந்த பையில் பிறந்து 2 நாளே ஆன குழந்தை இருந்தது.குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்த பின்னர், காப்பகத்திற்கு அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். குழந்தையை இங்கு வீசி சென்றது யார்? அந்த பகுதியில் யாருக்காவது குழந்தை பிறந்ததா ஆரம்ப சுகாதார நிலையத்தில் யாருக்காவது குழந்தை பிறந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில், சம்பவதன்று அதிகாலை 12 மணிக்கு 2 பெண்கள் கையில் குழந்தையை எடுத்து ெகாண்டு வருவதும், சிறிது நேரம் கழித்து 2 பேரும் குழந்தை இல்லாமல் தனியாக செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அந்த பெண்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக இங்கு குழந்தையை வீசி சென்றனர் என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    தற்போது குழந்தையை வீசி சென்ற பெண்களின் அடையாளத்தை கண்டுபிடித்துள்ளனர். அதனை வைத்து அவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×