search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anna birthday"

    • இந்தியன்நகர் பகுதியில் தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்றப்பட்டது.
    • அண்ணாவின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

     மங்கலம் :

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட இந்தியன்நகர் பகுதியில் தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்றப்பட்டது. பின்னர் அண்ணாவின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியானது தி.மு.க. வர்த்தகஅணி திருப்பூர் ஒன்றிய அமைப்பாளர் சுல்தான்பேட்டை கோபால் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் மு.சர்புதீன் முன்னிலை வகித்தார் . மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மு.ரபிதீன் , ஒன்றிய கழக அவைத்தலைவர் மு.அப்துல்பாரி, மாவட்ட பிரதிநிதி மா.சிவசாமி, , திருப்பூர் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஷா.தம்பிரஹீம், மு.ஐக்கிரியா, மு.முஜிபுர்ரகுமான் க.முபாரக்ராஜா மற்றும் மங்கலம் தி.மு.க. ஊராட்சி கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கெ௱ண்டனர்.

    • அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி பாளையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது.
    • 13 வயதுக்குட்பட்டோர் பிரிவினருக்கு 10 கிலோமீட்டர் தூரம், 15 வயது பிரிவினருக்கு 15 கிலோ மீட்டர் தூரம், 17 வயது பிரிவினருக்கு 20 கிலோ மீட்டர் தூரம் என போட்டிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி பாளையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது.

    13 வயது, 15 வயது, 17 வயது என 3 பிரிவுகளாக மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 160-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போட்டியை மாநகராட்சி துணைமேயர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13 வயதுக்குட்பட்டோர் பிரிவினருக்கு 10 கிலோமீட்டர் தூரம், 15 வயது பிரிவினருக்கு 15 கிலோ மீட்டர் தூரம், 17 வயது பிரிவினருக்கு 20 கிலோ மீட்டர் தூரம் என போட்டிகள் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் அண்ணா விளையாட்டரங்கம் முன்பிருந்து ஐகிரவுண்டு பின்புறம் சாலை வழியாக பல்நோக்கு மருத்துவமனை, திருச்செந்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் வரை சென்று அதே பாதையில் திரும்பி விளையாட்டு அரங்கம் வந்தடைந்தனர்.

    போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 வரையிலான இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 என பரிசுகள் வழங்கப்படுகிறது.

    போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ண சக்கரவர்த்தி செய்திருந்தார்.

    • அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி அருகில் மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி அருகில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல். ஏ., சு.குணசேகரன், முன்னாள் எம். பி.,சி.சிவசாமி, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர் , பகுதி செயலாளர்கள் கண்ணப்பன் அன்பகம் திருப்பதி, கே.பி.ஜி. மகேஷ்ராம், ஹரிஹரசுதன், திலகர் நகர் சுப்பு, கருணாகரன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார்.
    • மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார்.

    திருப்பூர் :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த மேற்கு மண்டலம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதியில் நாளை 15-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்திற்கு அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார். மாவட்ட செயலாளர் கோவை மேற்கு சேலஞ்சர் துரை, நீலகிரி கலைச்செல்வன், கோவை மத்திய மாவட்டம் அப்பாதுரை, கோவை தெற்கு சுகுமார், திருப்பூர் வடக்கு ஆனந்தகுமார், ஈரோடு மாநகர் கிழக்கு சிவபிரசாத், ஈேராடு புறநகர் கிழக்கு சதாசிவ மூர்த்தி, ஈரோடு மாநகர் மேற்கு வெங்கடேசன், ஈரோடு புறநகர் மேற்கு வேலுச்சாமி, கோவை கிழக்கு செந்தில்குமார் , கோவை வடக்கு பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விழா பேரூரையாற்றுகிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரோகிணி கிருஷ்ணகுமார், மருத்துவ அணி இணை செயலாளர் செந்தில்குமார், அமைப்பு செயலாளர்கள் லட்சுமணன், துளசிமணி, தொழிற்சங்க பேரவை செயலாளர் செல்வபாண்டி, நெசவாளர் அணி செயலாளர் சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். முடிவில் வாலிபாளையம் பகுதி செயலாளர் சிவக்குமார் நன்றி கூறுகிறார்.

    பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு நாளான 3-ந்தேதி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்துகின்றனர். #ADMK #EPS #OPS
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு நாளான 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

    நிகழ்ச்சியில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள், அ.தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகளும், பிரதிநிதிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #EPS #OPS
    அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
    கரூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்டப்பிரிவின் சார்பில் முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி கரூர் தாந்தோன்றிமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டிகளை கரூர் மாவட்ட கல்வி அதிகாரி கனகராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13, 15, 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. 10, 15, 20 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

    போட்டிகள் தொடங்கியதும் மாணவ- மாணவிகள் சைக்கிளில் ஆர்வத்துடன் இலக்கை நோக்கி சென்றனர்.இந்த போட்டிகளில் மொத்தம் 78 மாணவர்களும், 62 மாணவிகளும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி புண்ணியமூர்த்தி செய்திருந்தார். 
    அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது.
    அரியலூர்:

    அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அரியலூர் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. சைக்கிள் போட்டி 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்டது. சைக்கிள் போட்டியை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரியலூர் மாவட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் 292 பேரும், மாணவிகள் 98 பேரும் பங்கேற்றனர்.

    13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் அரியலூர் ஆர்.சி.நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளி மாணவன் கார்த்திக், 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் நித்தீஸ்வரன், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாமுவேல் டேனியல் ஆகியோர் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.

    13 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா, 15 வயதிற்குட்பட்ட பிரிவில் குணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி நந்தினி, 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜானகி ஆகியோர் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.

    இதையடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நான்காம் இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஆறுதல் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
    தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் ராஜன் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காய்கனி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு கீதாஜீவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில், பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அழகிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்புள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவ படத்துக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விளாத்திகுளம் அருகே அருங்குளத்தில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா தஞ்சையில் இன்று நடந்தது. இதில் அரசிய்ல கட்சியினர் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா தஞ்சையில் இன்று நடந்தது. இதில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க.வினர் தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பரசுராமன் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, முன்னாள் தொகுதி செயலாளர் துரை.திருஞானம், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், முன்னாள் நகர செயலாளர் பண்டரிநாதன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் அறிவுடை நம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், எம்.ஜி.ஆர்.மன்ற ஒன்றிய செயலாளர் தனபால் மற்றும் தம்பிதுரை, கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில பொருளாளர் ரெங்கசாமி தலைமையில் அக்கட்சியினர் தஞ்சை கீழவாசல் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சேகர், மாநகர செயலாளர் ராஜேஸ்வரன், பகுதி செயலாளர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் விருதாசலம், வட்ட செயலாளர் வேலாயுதம், வக்கீல் ஏ.ஜி.தங்கப்பன், துரை, நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் கீழவாசலில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, முன்னாள் நகர் மன்ற தலைவர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாநகர செயலாளர் நீலமேகம், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், பொதுக்குழு உறுப்பினர் முரசொலி உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    இதைபோல் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங் தலைமையில் தி.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர தலைவர் நரேந்திரன், நகர செயலாளர் முருகேசன், நகர துணைத் தலைவர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அண்ணாவின் 110 வது பிறந்த நாளினை முன்னிட்டு சின்ன காஞ்சீபுரம் பகுதியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #ArignarAnna
    காஞ்சீபுரம்:

    அண்ணாவின் 110 வது பிறந்த நாளினை முன்னிட்டு சின்ன காஞ்சீபுரம் பகுதியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், நிர்வாகிகள் வி.சோமசுந்தரம், கே.யு.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம், காஞ்சி பன்னீர்செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


    தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர்கள் க,சுந்தர் எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ மற்றும் எழிலரசன் எம்.எல்.ஏ. வி.எஸ்.ராம கிருஷ்ணன், சிறுவேடல் செல்வம், தசரதன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் வளையாபதி தலைமையிலும், தேமுதிக சார்பில் நகரச் செயலாளர் சாட்சி சண்முகசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அமைப்பினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #ArignarAnna
    அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, 128 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். #EdappadiPalaniswami
    சென்னை:

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டும் வழங்கப்பட்டும் வருகின்றன.

    மேலும் சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின்போது முதல்-அமைச்சர் அறிவித்ததையொட்டி, தடய அறிவியல் துறை அறிஞர்களுக்கும் இந்த ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு, காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல், முதல்நிலை காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் மாவட்ட அலுவலர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அலுவலர்களுக்கும்;

    சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அலுவலர்களுக்கும்; ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் பிரிவு தலைவர் வரையிலான 5 அலுவலர்களுக்கும்; விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும்;

    தடய அறிவியல் துறையில் துணை இயக்குனர் ஒருவருக்கும் என மொத்தம் 128 பேருக்கு, அவர்களின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் “மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சரின் அண்ணா பதக்கங்கள்” வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு அவரவர்களின் பதவிக்கு ஏற்றவாறு, பதக்க விதிகளின்படி ஒட்டு மொத்த மானியத் தொகையும், வெண்கல பதக்கமும் அளிக்கப்படும். பின்னர் நடைபெறும் விழா ஒன்றில், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவற்றை முதல்-அமைச்சர் வழங்குவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami
    மதுரையில் நாளை அண்ணாவின் 110-வது பிறந்தநாளை யொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அமைச்சர் செல்லூர்ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார். #ADMK #Sellurraju
    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (15-ந்தேதி) காலை 9 மணிக்கு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    நிகழ்ச்சியில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இதில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள், முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பிக்கும்படி வேண்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ADMK #Sellurraju
    ×