search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cycle competition"

    • அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சாலையோர மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
    • மாவட்ட விளையாட்டு அரங்கில் செந்துறை சாலை ராம்கோ சிமென்ட் ஆலை நுழைவ வாயில் வரை சென்று மீண்டும், தொடங்கிய இடம் வரையிலான சுமார் 7 கி.மீ தூரத்துக்கு போட்டி நடைபெற்றது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சாலையோர மிதிவண்டி போட்டி நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கில் செந்துறை சாலை ராம்கோ சிமென்ட் ஆலை நுழைவ வாயில் வரை சென்று மீண்டும், தொடங்கிய இடம் வரையிலான சுமார் 7 கி.மீ தூரத்துக்கு போட்டி நடைபெற்றது. சைக்கிள் போட்டி மாணவ-மாணவிகளுக்கு தனி, தனியே நடத்தப்பட்டது.

    இதில், அரியலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த மாணவ}மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றிப் பெறும் மாணவ,மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    முன்னதாக போட்டியை மாவட்ட உடற்கல்வி இயக்குநர் தேகளீசன் தொடக்கி வைத்தார். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின், உடற்கல்வி இயக்குநர் ரவி, உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், அருள்மொழி உள்ளிட்டோர் போட்டியை நடத்தினர்.

    • சைக்கிள் வீரர்கள் செல்லும் பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • நிர்ணயிக்கப்பட்ட 3 திருப்பங்களிலும் டிஜிட்டல் டயர் பதிவு கருவிகள் வைத்து துல்லியமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    மாமல்லபுரம்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் இன்று தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த சைக்கிள் போட்டி நடை பெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் 24கி.மீ தூரம் கொண்ட பெண்களுக்கான போட்டியும் நடைபெற்றது. கோவளம், வடநெம்மேலி, பூஞ்சேரி என மூன்று திருப்பங்களுடன் 3 அணிகள், என வெளிநாட்டு, வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்கள் 179 பேர் உட்பட மொத்தம் 1,125 பேர் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டனர். மொத்தம் 3 கட்டமாக இந்த போட்டிகள் நடைபெற்றது.

    இந்த போட்டியின் போது பிற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக, அப்பகுதியில் இரு வழித்தடங்களிலும் இன்று அதிகாலை 4 மணி முதல் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் அனை த்தும் கிழக்கு கடற்கரை சாலை வெங்கம்பாக்கத்தில் திருப்பி செங்கல்பட்டு வழியாக காலை 9 மணிவரை சென்றது.

    இதேபோல் கார், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் பூஞ்சேரியில் மாற்றுப்பாதையில் திரும்பி ஓ.எம்.ஆர் வழியாக சென்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் வாகனங்கள் அக்கரை சோழிங்கநல்லூர் வழியாக ஓ.எம்.ஆர் சாலையில் சென்றது. இதனால் கிழக்குகடற்கரை சாலை சுமார் 5மணி நேரம் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    சைக்கிள் வீரர்கள் செல்லும் பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வீரர்கள் சென்ற சைக்கிள்களின் பின்னால் சைக்கிள் மெக்கானிக், மருத்துவ பிரிவினர் அவர்களின் வேகத்திற்கு ஏற்ப மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து சென்றனர். நிர்ணயிக்கப்பட்ட 3 திருப்பங்களிலும் டிஜிட்டல் டயர் பதிவு கருவிகள் வைத்து துல்லியமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாதரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் அருகே மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது.
    • ரோட்டின் இருபுறமும் சைக்கிள் பந்தய ரசிகர்கள் போட்டிகளை கண்டு களித்தனர்.

    மேலூர்

    77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட சைக்கிளிங் கழகம் சார்பாக சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2023 போட்டி மேலூர் நாவினிபட்டியில் நடைபெற்றது. மேலூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மதுரை மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் சேர்மன் வல்லத்தரசன் முன்னிலை வகித்தார். மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் போட்டியை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் தலைவர் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் ராஜா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.மேலூர் தாலுகா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் கெங்காதரன், மதுரை மாவட்ட சேர்மன் சின்னன், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் துணைத் தலைவர் ஜான்சன் கலைச்செல்வன், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மேலூர் டி.எஸ்.பி ஆர்லியஸ் ரொபோனி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதல் 3 இடங்களை வென்றோருக்கு சான்றி தழ்களும், பதக்கங்களும், கோப்பை களும் வழங்கப்பட்டது. போட்டி தூரத்தை நிறைவு செய்யும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நடைபெற்ற போட்டியில் முதல் 2 இடங்களை வென்றவர் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாவட்டத்தின் சார்பில் கலந்து கொள்கிறார்கள். சைக்கிள் பந்தயத்தை ரோட்டின் இருபுறமும் சைக்கிள் பந்தய ரசிகர்கள் போட்டிகளை கண்டு களித்தனர்.

    • அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி பாளையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது.
    • 13 வயதுக்குட்பட்டோர் பிரிவினருக்கு 10 கிலோமீட்டர் தூரம், 15 வயது பிரிவினருக்கு 15 கிலோ மீட்டர் தூரம், 17 வயது பிரிவினருக்கு 20 கிலோ மீட்டர் தூரம் என போட்டிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி பாளையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது.

    13 வயது, 15 வயது, 17 வயது என 3 பிரிவுகளாக மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 160-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போட்டியை மாநகராட்சி துணைமேயர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13 வயதுக்குட்பட்டோர் பிரிவினருக்கு 10 கிலோமீட்டர் தூரம், 15 வயது பிரிவினருக்கு 15 கிலோ மீட்டர் தூரம், 17 வயது பிரிவினருக்கு 20 கிலோ மீட்டர் தூரம் என போட்டிகள் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் அண்ணா விளையாட்டரங்கம் முன்பிருந்து ஐகிரவுண்டு பின்புறம் சாலை வழியாக பல்நோக்கு மருத்துவமனை, திருச்செந்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் வரை சென்று அதே பாதையில் திரும்பி விளையாட்டு அரங்கம் வந்தடைந்தனர்.

    போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 வரையிலான இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 என பரிசுகள் வழங்கப்படுகிறது.

    போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ண சக்கரவர்த்தி செய்திருந்தார்.

    • அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் நடைபெருகிறது.
    • கியர் இல்லாத சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    கோவை,

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற உள்ள மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெருகிறது.

    போட்டி கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரி ரோட்டில் வரும் 15-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு கி.மீ. 15 கி.மீ. தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டி நடத்தப்பட உள்ளது.

    இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இந்தியாவில் தயாரான கியர் இல்லாத சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று, மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் வரும் 13-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இப்போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும், 4 முதல் 10-ம் இடம் வரை வருபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • போட்டியை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் விளையாட்டு பிரிவின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயது,17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தலா 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு தலா 15 கிலோ மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

    போட்டியை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, திருப்பூர் மாவட்ட கபடி கழக இணை செயலாளர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜகோபால் வரவேற்றார்.

    13 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி மாணவர் சபரீஸ்வர் முதலிடத்தையும், காங்கயம் எஸ்.ஆர்.ஆர். பள்ளி மாணவர் உதயகிரி 2-வது இடத்தையும், ஹரிஸ்ராம் 3-வது இடத்தையும் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி சர்நிதா முதலிடத்தையும், விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் தீக்ஷனா 2-வது இடத்தையும், சஞ்சனா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    15 வயதுக்கு உட்பட்டோர் மாணவிகள் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி மாணவி அனுஸ்ரீ முதலிடத்தையும், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மாணவி வர்ஷிதா 2-வது இடத்தையும், பொம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவி அபிநயா 3-வது இடத்தையும் வென்றனர். மாணவர்கள் பிரிவில் காங்கயம் எஸ்.ஆர்.ஆர். பள்ளி மாணவர்கள் சஞ்சீவ் ராகவேந்திரா முதலிடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், கருப்பகவுண்டம்பாளையம் அரசு பள்ளி மாணவர் பரத்ராம் 3-வது இடத்தையும் பெற்றனர்.

    17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் காங்கயம் எஸ்.ஆர்.ஆர்.பள்ளி மாணவர்கள் விஷ்ணு வர்தன், சிவபாலாஜி, அருண்விஷால் ஆகியோர் முறையே 3 இடங்களை பிடித்தனர். மாணவிகள் பிரிவில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் அபிநயாஸ்ரீ, அஞ்சலி சில்வியா, மதுமிதா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். மொத்தம் 87 மாணவிகள், 129 மாணவர்கள் பங்கேற்றார்கள்.

    வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் 4-வது இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    ×