search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி
    X

    சைக்கிள் போட்டியை கலெக்டர் வினீத் தொடங்கி வைத்த காட்சி. 

    அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

    • போட்டியை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் விளையாட்டு பிரிவின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயது,17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தலா 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு தலா 15 கிலோ மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

    போட்டியை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, திருப்பூர் மாவட்ட கபடி கழக இணை செயலாளர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜகோபால் வரவேற்றார்.

    13 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி மாணவர் சபரீஸ்வர் முதலிடத்தையும், காங்கயம் எஸ்.ஆர்.ஆர். பள்ளி மாணவர் உதயகிரி 2-வது இடத்தையும், ஹரிஸ்ராம் 3-வது இடத்தையும் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி சர்நிதா முதலிடத்தையும், விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் தீக்ஷனா 2-வது இடத்தையும், சஞ்சனா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    15 வயதுக்கு உட்பட்டோர் மாணவிகள் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி மாணவி அனுஸ்ரீ முதலிடத்தையும், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மாணவி வர்ஷிதா 2-வது இடத்தையும், பொம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவி அபிநயா 3-வது இடத்தையும் வென்றனர். மாணவர்கள் பிரிவில் காங்கயம் எஸ்.ஆர்.ஆர். பள்ளி மாணவர்கள் சஞ்சீவ் ராகவேந்திரா முதலிடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், கருப்பகவுண்டம்பாளையம் அரசு பள்ளி மாணவர் பரத்ராம் 3-வது இடத்தையும் பெற்றனர்.

    17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் காங்கயம் எஸ்.ஆர்.ஆர்.பள்ளி மாணவர்கள் விஷ்ணு வர்தன், சிவபாலாஜி, அருண்விஷால் ஆகியோர் முறையே 3 இடங்களை பிடித்தனர். மாணவிகள் பிரிவில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் அபிநயாஸ்ரீ, அஞ்சலி சில்வியா, மதுமிதா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். மொத்தம் 87 மாணவிகள், 129 மாணவர்கள் பங்கேற்றார்கள்.

    வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் 4-வது இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    Next Story
    ×