search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Meteorological Department"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • 15-ந்தேதி வரை ஒருசில இடங்களிலும் கோடை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 3 நாட்க ளாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இத னால் ஓரளவு வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

    இன்று முதல் 13-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 106 டிகிரியும் இதர சமவெளி பகுதிகளில் 102 டிகிரியும் வெயில் பதிவாகலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் 15-ந்தேதி வரை ஒருசில இடங்களிலும் கோடை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 12 மற்றும் 14-ந்தேதிகளில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    • பத்து நாட்களில் பருவக்காற்றுக்கு முந்திய மழை பெய்யும்.
    • வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்யக்கூடும்.

    கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அரபிக் கடலில் தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்னும் பத்து நாட்களில் பருவக்காற்றுக்கு முன்னரே மழை பெய்யத்துவங்கும்.

    இதனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்க வாய்ப்புள்ளாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    கடந்த ஆண்டு அரபிக் கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக பருவமழை தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

    • தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும்
    • தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்

    நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.

    இந்நிலையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை 106% வரை பெய்யும் என்றும், தென்மேற்கு பருவமழை காலத்தில் நீண்ட கால சராசரிப்படி 87 செ.மீ. மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

    • தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சராசரி அளவைவிட கூடுதலாக பெய்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களிலும் கடந்த வாரத்தில் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வெள்ளக்காடாக்கியது.

    வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாளை (31-ந் தேதி) மற்றும் 1-ந் தேதியில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை இலாகா தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் ஜனவரி 1 மற்றும் 2-ந் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.

    வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் இந்திய பெருங்கடல் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதி வரை இந்த மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 3-ந் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    ஜனவரி 1 மற்றும் 2-ந் தேதியில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்துவில்-22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நாலுமுக்கு-21 செ.மீ. காக்கச்சி-20, மாஞ்சோலை-10 செ.மீ. மழை பெய்துள்ளது.

    • தென் தமிழகத்தை கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்கள் பயன்பாட்டில் உள்ளன.
    • இந்தியாவின் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்கள்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை வானிலையை கண்காணிக்க டாப்ளர் ரேடார்கள். சென்னை வானிலை ஆய்வு மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.

    தென் தமிழகத்தை கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்கள் பயன்பாட்டில் உள்ளன.

    உலக வானிலை அமைப்பு இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு, முன்னெச்சரிக்கைகளை உலகத்தரம் வாய்ந்தது என பாராட்டியுள்ளது.

    வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ், மிச்சாங் புயல்கள் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்தியாவின் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்கள்.

    சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள அர்ப்பணிப்போடு இயங்கும் பணியாளர்களை புண்படுத்துகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடந்த 17, 18ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை
    • நெல்லை மாவட்டத்தில் பால் விநியோகம் ஓரிரு நாளில் சீரடையும்.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சாலை எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இதுகுறித்து கூறியதாவது:-

    கடந்த 17, 18ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

    18ம் தேதி காலை முதல் மதியம் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 11 செ.மீ மழை பெய்துள்ளது. இதேபோல், நெல்லை மாவட்டத்தில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.

    காயல்பட்டினத்தில் 36 மணி நேரத்தில் 116 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

    திருச்செந்தூரில் 92 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    தென்மாவட்டங்களில் பெய்த மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பு தவறானது. அவர்கள் கூறியிருந்த கணிப்பின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருந்தது. ஆனால், கணிப்பை விட கூடுதல் மழை பெய்தததால் பாதிப்பு அதிகமாகி உள்ளது.

    மீட்பு பணிகளில் 1,350 பேரில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 250 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    160 நிவாரண முகாம்கள் அமைப்பு, சுமார் 17 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இன்று மட்டும் முகாம்கள் தவிர 34 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

    9 ஹெலிகாப்டர்கள் மூலம் கிராமங்களில் உணவு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 13,500 கிலோ உணவு வழங்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் வடிந்த பகுதிகளில் இதர சேவைகள் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பால் விநியோகம் ஓரிரு நாளில் சீரடையும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும்.

    தென்காசி, குமரி மாவட்டங்களில் 100 சதவீதம் மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 18 சதவீத மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 60 சதவீத இடங்களில் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. வெள்ளம் வடிய வடிய மின் விநியோகம் வழங்கப்படும்.

    திருச்செந்தூரில் இன்று காலை அதிகனமழை பதிவானது.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் ஹெலிகாப்டர் மூலம் 2 முறை உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மேற்கு- தென்மேற்கு திசையில் இலங்கை பகுதியை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
    • தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
    இலங்கை கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது மேற்கு- தென்மேற்கு திசையில் இலங்கை பகுதியை நோக்கி நகரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் தென்கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் வரும் டிசம்பர் 25ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
    • நவம்பர் 11ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால், வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் நவம்பர் 11ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் உருவாகிறது.
    • ஆகஸ்ட் 8ம் தேதிக்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்பு.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுவடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவும், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும், நாளை மறுநாளும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.

    இந்நிலையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் உருவாகிறது. இதன் எதிரொலியால், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    பின்னர், ஆகஸ்ட் 8ம் தேதிக்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கேரளாவில் வருகிற 30-ந்தேதி வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். #KeralaRain #IMD
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்தது. இதனால் அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை உருவானது.

    வரலாறு காணாத பேரழிவை சந்தித்த கேரள மாநிலம் அந்த பாதிப்பில் இருந்து தற்போது மீண்டு வருகிறது. கேரளாவிற்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிதி உதவிகள் அளித்துள்ளன.

    ஆனாலும் மழை பாதிப்பில் இருந்து அந்த மாநிலம் சகஜ நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 26, 27 ஆகிய தேதிகளில் இடுக்கி, வயநாடு, பத்தனம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்று அறிவிக்கப்பட்டதால் இந்த 8 மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன்படி, கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    கோப்புப்படம்

    ஆனாலும் இந்த மழை வருகிற 30-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக் கோடு ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 30-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி அவர்களை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த மழை காரணமாக மலை கிராமப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மலை கிராமங்களுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #KeralaRain #IMD
    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்த நிலை ஒருவாரம் நீடிக்கும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வானம் மேக கூட்டமாக இருக்கும். சில நேரங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

    இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரம் பெய்த மழை அளவு வருமாறு:-

    செஞ்சி 4 செ.மீ., மதுரை விமானநிலையம், பூண்டி தலா 3 செ.மீ., புதுச்சேரி, பெருங்களூர் தலா 2 செ.மீ., திருத்தணி, சிவகங்கை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது. #MID #Tamilnadu
    புதுடெல்லி:

    நடப்பு ஆண்டின் தென்மேற்கு பருவமழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை ஆராய்ச்சி துறை வெளியிட்டது. அதில், தென்னிந்தியாவில், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதில், மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தென்னிந்தியாவில், மொத்தம் 125 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில், 54 மாவட்டங்களில் பற்றாக்குறையாகவும், 2 மாவட்டங்களில் மிகஅதிக பற்றாக்குறையாகவும் பருவமழை பெய்துள்ளது. அதாவது, 40 சதவீத மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாகவே பெய்துள்ளது.

    அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 32 மாவட்டங்களில், 20 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. ஒரு மாவட்டத்தில், மிகஅதிக பற்றாக்குறையாக பெய்துள்ளது.

    தென்மேற்கு பருவமழையால் நிலைகுலைந்துள்ள கேரளாவில், 10 மாவட்டங்களில் அதிக மழையும், 2 மாவட்டங்களில் மிகஅதிக மழையும் பெய்துள்ளது.

    புதுச்சேரியில் மொத்தம் உள்ள 4 மாவட்டங்களிலும் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.

    கர்நாடகாவில், மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் பற்றாக்குறையாகவும், 2 மாவட்டங்களில் மிகஅதிக பற்றாக்குறையாகவும் பருவமழை பெய்துள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா பகுதியில் உள்ள 4 மாவட்டங்களிலும், இதர பகுதியில் உள்ள 2 மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.

    தெலுங்கானாவில், மொத்தம் உள்ள 31 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் மிகஅதிக பற்றாக்குறையாக பருவமழை பெய்துள்ளது. லட்சத்தீவிலும், பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.

    நாடுதழுவிய அளவில், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், மழைப்பொழிவு 27 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது. நாட்டில் உள்ள 91 பெரிய அணைகளின் மொத்த கொள்ளளவில் 63 சதவீத நீர்மட்டம் உள்ளது. தென்னிந்தியாவில், 31 அணைகளில் 76 சதவீத நீர்மட்டம் உள்ளது.

    இவ்வாறு இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.  #MID #Tamilnadu

    ×