search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flight"

    • வாரம் நான்கு விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருகிறது.
    • டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவையை நிறுத்தியது.

    இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு செல்லும் விமான சேவையை ஏர் இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

    அதன்படி டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு செல்லும் நேரடி விமானங்கள் அனைத்தும் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லி மற்றும் டெல் அவிவ் இடையில் ஒவ்வொரு வாரம் நான்கு விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருகிறது.

    இஸ்ரேல் நகரின் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது.

    அதன்பிறகு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இடைவெளிக்கு பிறகு, கடந்த மார்ச் 3 ஆம் தேதி தான் டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவைகளை மீண்டும் துவங்கியது. 

    • விமானம் தவறான பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
    • நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது சுமார் 28 நிமிடங்கள் உறங்கினர்.

    153 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் சென்று கொண்டிருந்த சமயத்தில், அதை இயக்கிய விமானிகள் இருவர் அரை மணி நேரம் உறங்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    தென்கிழக்கு சுலவேசியில் இருந்து இந்தோனேசிய தலைநகர் ஜகார்டாவுக்கு கடந்த ஜனவரி 25-ம் தேதி படிக் ஏர் விமானத்தின் விமானம் ஒன்று சென்றது. அதை இயக்கிய விமானி மற்றும் இணை விமானி இருவரும் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது சுமார் 28 நிமிடங்கள் உறங்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் அந்நாட்டு தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. 153 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் 2 மணி 35 நிமிடத்தில் ஜகார்டாவில் தரையிறங்க வேண்டும். இந்த பயணத்தின் போது விமானம் தவறான பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, விமானி தன்னுடன் காக்பிட்-இல் இருந்த இணை விமானியிடம் தனக்கு ஓய்வு வேண்டும் என அனுமதி கேட்டுள்ளார். இணை விமானி அதற்கு அனுமதி அளித்ததால், விமானி உறங்கியுள்ளார். அனுமதி அளித்த இணை விமானியும், சிறிது நேரத்திலேயே அசதி காரணமாக உறங்கியுள்ளார். 28 நிமிடங்கள் விமானி மற்றும் இணை விமானி உறங்கியுள்ளனர்.

    இருவரும் உறங்கி கொண்டிருந்த போது, ஜகார்டா கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விமானியை தொடர்பு கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், இருவரும் உறங்கி கொண்டிருந்ததால், விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. 28 நிமிடங்கள் உறங்கிய இணை விமானி அதன் பின்னர் விழித்துக் கொண்டு விமானம் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தார்.

    இந்த சம்பவத்தின் போது உறங்கிய இரு விமானிகளின் பெயர் மற்றும் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், இருவருக்கும் முறையான ஓய்வு வழங்காமல் பணி செய்ய வைத்தது விசாரணையில் தெரியவந்தது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தின் போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

    • மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
    • மாயமான விமானத்தை மீண்டும் தேட வேண்டும் என்ற கோரிக்கை எழ துவங்கியுள்ளது.

    கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

    மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370-ஐ தேடும் பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழ துவங்கியது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா சென்ற மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம்-இடம் மாயமான விமானத்தை தேடும் பணிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், "தேடல் தொடர்பாக உறுதியான ஆதாரம் ஏதேனும் கிடைக்கும் பட்சத்தில், மீண்டும் தேடும் பணிகளை துவங்குவதில் மகிழ்ச்சி அடைவோம். இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருக்கும் என்று நினைக்கவில்லை."

    "மக்களின் உயிரை பாதிக்கும் விவகாரம் இது, இதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமா, அவற்றை நிச்சயம் செய்தாக வேண்டும்," என்று தெரிவித்தார்.

    முன்னதாக காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புது திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்து இருந்தனர். லண்டனில் உள்ள ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என்று வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் பெல்லி தெரிவித்தனர்.

    • சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடி அபராதம்.
    • சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம்.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரத்தில் இண்டியோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இதில், சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடியும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.
    • அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

    ஜப்பானை சேர்ந்த ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு (ஏ.என்.ஏ.) சொந்தமான விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்தில் இருந்து டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.

    பயணத்தை துவங்கிய சில நிமிடங்களில் இந்த விமானத்தின் காக்பிட் பகுதி கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

    இந்த விமானத்தில் மொத்தம் 59 பயணிகள், ஆறு பணியாளர்கள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விமான கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் விமானத்தை இயக்குவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான போயிங் 737-9 விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் அரங்கேறியது. இந்த விமானத்தின் கதவுகளில் ஒன்று நடுவழியில் திறந்ததே இதற்கு காரணம் ஆகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானத்தின் கதவு தனியே பிரிந்து கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • விமானம் வங்காளதேச நாட்டு தலைநகர் டாக்காவுக்கு திருப்பி விடப்பட்டது.
    • சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கவுகாத்தி:

    மும்பையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் 178 பயணிகள் இருந்தனர். அப்போது கவுகாத்தியில் கடும் பனிமூட்டம் நில வியதால் விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து விமானம் வங்காளதேச நாட்டு தலைநகர் டாக்காவுக்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் இன்று அதிகாலை 4 மணிக்கு டாக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    இதுகுறித்து விமான நிறுவனம் கூறும்போது, "கவுகாத்தியில் மோசமான வானிலை காரணமாக மும்பையில் இருந்து கவுகாத்திக்கு சென்ற இண்டிகோ விமானம் வங்காளதேசத்தின் டாக்காவிற்கு திருப்பிவிடப்பட்டது.

    டாக்காவில் இருந்து கவுகாத்திக்கு விமானத்தை இயக்க மாற்றுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

    • மத்திய பா.ஜ.க. அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
    • விமானத்தை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி நேற்று விமானம் மூலம் நாக்பூரில் இருந்து டெல்லி புறப்பட்டார். எனினும், டெல்லி செல்லாத விமானம் பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டது. டெல்லி செல்லும் வழியில் கடுமையான பனி காரணமாக வெளிச்சமின்மை ஏற்பட்டதால், விமானத்தை டெல்லி நோக்கி இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக டெல்லி செல்ல வேண்டிய விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. கடந்த சில நாட்களாக டெல்லியில் கடுமையன பனிப் பொழிவு பதிவாகி வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கிட்டத்தட்ட 60 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் மிகப் பெரிய விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் 1300 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    காங்கிரஸ் கட்சியின் 139-ம் ஆண்டு துவக்க விழா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராகுல் காந்தி நாக்பூர் வந்திருந்தார். இது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.  

    • கடந்த 14-ந் தேதி பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
    • பயணிகள் அனைவரும் 3 நாட்களாக விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர்.

    பாரீஸ்:

    துபாயில் இருந்து மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவுக்கு 303 இந்தியப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் கடந்த 14-ந் தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

    இந்த விமானம் மூலம் மனித கடத்தல் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வந்ததையடுத்து பிரான்ஸ் அதிகாரிகள் இந்த விமானத்தைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேசி வருவதாகவும், இந்திய பயணிகளுக்கு உரிய வசதிகள் வழங்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது.

    மேலும், இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டது. இந்நிலையில், பயணிகளிடம் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், பயணிகள் இன்று முதல் தங்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியானது. பயணிகள் அனைவரும் 3 நாட்களாக விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். இன்று அந்த விமானம் புறப்பட்டு சென்றது.

    • இதே போல் திருச்சியில் இருந்து செல்லும் பயணிகளும் அரிய வகை உயிரினங்கள் கடத்தி செல்கின்றனர்.
    • அப்போது 14 பயணிகள் உரிய அனுமதியின்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

    கே.கே.நகர

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் உடைமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உள்பட பல பொருட்களை கடத்தி வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

    இதே போல் திருச்சியில் இருந்து செல்லும் பயணிகளும் அரிய வகை உயிரினங்கள் கடத்தி செல்கின்றனர்.

    அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்வ தற்காக நேற்று காலை ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 14 பயணிகள் உரிய அனுமதியின்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனை கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க வில்லை.

    இதே போல் இன்றும் 17 பயணிகள் சிக்கினர். அவர்களிடம் சுங்கதுறை அதிகாரிகள் உடமைகளை தவிர்த்து செல்ல விரும்பி னால் பயணம் செய்யலாம் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து 5 பயணிகள் மட்டும் விமா னத்தில் பயணம் செய்தனர். மீதமுள்ள 12 பயணிகளும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    நேற்று 14 பயணிகளும் இன்று காலை 12 பயணிகளும் என மொத்தம் 26 பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மோசமான வானிலை காரணமாக விமானத்தை தரை இறங்க முடியாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • 5 மணி நேரத்துக்கு பின்னர் 9.20 மணிக்கு விமானம் கோழிக்கோட்டிற்கு புறப்பட்டு சென்றது.

    கோவை,

    வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது.

    இந்த விமானம் நேற்று நள்ளிரவு ஷார்ஜாவில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 170 பயணிகள் இருந்தனர். அதிகாலை 3 மணியளவில் விமானம் கோழிக்கோட்டிற்கு வந்தது. அப்போது அங்கு மோசமான வானிலை நிலவியது.

    இதன் காரணமாக விமானத்தை தரை இறங்க முடியாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விமானி விமானத்தை கோவை விமான நிலையத்துக்கு திருப்பினார். அதிகாலை 4 மணிக்கு விமானம் கோவை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

    பின்னர் விமானத்தை விட்டு இறங்கிய பயணிகள் விமான நிலையத்தில் உள்ள ஒய்வு அறையில் ஒய்வு எடுத்தனர். பின்னர் வானிலை சரியான பின்னர் 5 மணி நேரத்துக்கு பின்னர் 9.20 மணிக்கு விமானம் கோழிக்கோட்டிற்கு புறப்பட்டு சென்றது.

    • விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.
    • உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6:55 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.

    விமானம் ஓடுபாதையில் செல்வதற்கு முன்பு விமானத்தின் எந்திரங்களை விமானி சரிபார்த்த போது அதில் கோளாறு இருப்பதை அறிந்தார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் எந்திரம் பழுது பார்க்கப்பட்டு இன்று காலை 8:10 மணிக்கு தாமத மாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரியான நேரத்தில், விமானி கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • பயணியின் தவறான நடத்தையை கண்டித்து விமான பணியாளர்கள் எச்சரிக்கை.
    • ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்புத் தலைவர் சம்பந்தப்பட்ட பயணியை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

    மும்பை- டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது அதன் தரையில் மலம் மற்றும் சிறுநீர் கழித்ததாகக் கூறி டெல்லியில் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 24ம் தேதி அன்று ஏஐசி 866 விமானத்தில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    வழக்குப்பதிவு தகவலின்படி, இருக்கை எண் 17எப்-ல் பயணித்த ராம் சிங் என்பவர் விமானத்தின் 9வது வரிசையில் மலம்- சிறுநீர் கழித்து, துப்பினார் என தெரியவந்துள்ளது.

    பயணியின் தவறான நடத்தையை கண்டித்து விமான பணியாளர்கள் அவருக்கு வாய்மொழியாக எச்சரிக்கை விடுத்தனர்.

    பின்னர், விமானியின் கமாண்டிற்கும் நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்புத் தலைவர் சம்பந்தப்பட்ட பயணியை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

    இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 510 (குடிபோதையில் ஒருவரால் பொதுவில் தவறான நடத்தை) ஆகியவற்றின் கீழ் ராம் சிங் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    ×