search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இண்டிகோ"

    • கொல்கத்தாவில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ஒரே ரன்வேயில் உரசிக் கொண்டன.
    • இந்தச் சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பீகாரின் தர்பங்கா நோக்கி இண்டிகோ விமானம் நேற்று புறப்பட்டது. அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. பயணிகளுடன் சென்ற இரு விமானங்களும் ஒரே ரன்வேயில் சென்றதாகக் கூறப்படுகிறது.

    அப்போது இரு விமானங்களின் இறக்கைகளும் உரசியதாகவும், விமானிகள் சாதுரியமாக செயல்பட்டதால் விமானம் திசை திருப்பப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சம்பவத்தின்போது விமானங்களில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

    இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்ததால் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு, மாற்று விமானங்களால் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கொல்கத்தா விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் ஊழியர்களிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

    • சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடி அபராதம்.
    • சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம்.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரத்தில் இண்டியோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இதில், சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடியும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • ஏர் இந்தியா 470 ஏர்பஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம்
    • 2035-க்குள் வினியோகம் செய்யப்படும் எனத் தகவல்

    இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, 500 ஏர்பஸ் (A320) விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. நேற்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    ஒரே தவணையில் 500 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாவது வணிக விமான சேவை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

    ஏர்இந்தியா சில வாரங்களுக்கு முன் 470 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது. இந்த நிலையில் இண்டிகோ 500 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

    விமானத்தில் பயணிப்பவர்களின் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், உலகளாவிய மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள விமான நிறுவனங்களிடையேயான போட்டிதான் இதற்கு காரணம் எனக் கருதப்படுகிறது.

    2030-2035-க்குள் இந்த விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் வினியோகம் செய்ய இருக்கிறது.

    • விமான நிறுவனங்களில் ‘இண்டிகோ’, 15-வது இடத்தைப் பெற்றுள்ளது.
    • ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

    புதுடெல்லி :

    உலகளவில் நேரந்தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பற்றிய பட்டியலை 'அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்' எனப்படும் 'ஓஏஜி' நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனமாகும் இது.

    நேற்று வெளியான இதன் பட்டியல்படி, உலகளவில் நேரந்தவறாமல் இயங்கும் முதல் 20 விமான நிலையங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் கோவை விமான நிலையம் இடம்பெற்றுள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் இந்த விமான நிலையம், 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

    நேரந்தவறாத விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான 'இண்டிகோ', 15-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தோனேசியாவின் கருடா இந்தோனேசியா விமான நிறுவனம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

    நேரந்தவறாத விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து கோவை விமான நிலையமும், இண்டிகோ விமான நிறுவனமும் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இண்டிகோ விமான நிறுவனம் தொடங்கப்பட்டு 11-ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல ரூ.1,212-க்கு சலுகை விலையில் டிக்கெட்டுகளை அறிவித்துள்ளது. #IndiGo
    மும்பை :

    இந்தியாவின் முன்னனி விமான சேவை நிறுவனமான இண்டிகோ கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதியுடன் இண்டிகோ நிறுவனம் 12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    இந்நிலையில், இதை சிறப்பிக்கும் விதமாக 12 லட்சம் விமான டிக்கெட்டுகளை சலுகை விலையாக ரூ.1,212-க்கு விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இந்த மெகா டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜூலை 25-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி வரையிலான விமான டிக்கெட்டுகளை இந்த சலுகை விலையில் முன்பதிவு செய்ய முடியும் என இண்டிகோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி வில்லியம் போல்டர் தெரிவித்தார்.

    உள்நாடு மற்றும் வெளிநாடு என 57 நகரங்களுக்கு செல்லும் இண்டிகோ விமானத்தின் டிக்கெட்டுக்களை சலுகை விலையில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiGo
    ×