என் மலர்
இந்தியா

இண்டிகோ பிரச்சனையால் மற்ற நிறுவனங்களின் விமான கட்டணங்கள் உயர்வு - மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு
- உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்துசெய்தது.
- தூரத்திற்கு ஏற்றவாறு கட்டண உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்து அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 3 நாளாக விமான சேவைகளை நிறைவேற்றுவதில் சொதப்பி வருகிறது. மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. நேற்றும்கூட ஏராளமான விமான சேவைகளை ரத்து செய்தது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்துசெய்தது. சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.
இதை பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமான கட்டணங்களை பன்மடங்கு அதிகரித்தன.
இந்நிலையில் விமான கட்டண உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் விமான வழித்தடங்களின் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டண உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்து அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி குறுகிய உள்நாட்டு வழித்தடங்களில் 500 கி.மீ. வரையிலான பயணத்திற்கு ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 500-1,000 கி.மீ. வரை ரூ.12,000, 1000-1500 கி.மீ. வரை ரூ.15,000 மற்றும் 1500 கி.மீ.க்கு மேல் ரூ.18,000 வரை கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டண உச்சவரம்புகளில் UDF, PSF மற்றும் வரிகளுக்கு விலக்கு அளிக்கத்தும், வணிக வகுப்பு கட்டணங்கள் மற்றும் RCS-UDAN விமானங்களுக்கு விலக்கு அளிக்கத்தும் உத்ராவிடப்பட்டள்ளது.
விமான கட்டணங்கள் சீராகும் வரை கட்டண உச்சவரம்புகள் அமலில் இருக்கும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






