search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "counting"

    • தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
    • அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 93 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    சென்னிமலை,

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விதுறை சார்பாக 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள் திறம்பட செயல்படுத்துதல் நோக்கத்துடன் 3-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி சென்னிமலை அடுத்துள்ள மைலாடி பகுதியில் நடந்தது.

    இதில் சென்னிமலை வட்டாரத்திற்குட்பட்ட அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், காமராஜர் நகர், மற்றும் திப்பம்பாளையம், ஆகிய குறுவளமையங்களில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் ஆசிரியர்கள் வகுப்பறை கையாளுதல் மற்றும் அவர்கள் பயன்படு த்தும் கற்றல் உபகரணங்கள் செய்யும் முறை குறித்து ஆசிரியப்பயிற்றுநர் மற்றும் ஆசிரியக் கருத்தாளர்கள் விளக்கினார்கள்.

    வட்டார கல்வி அலுவலர்கள் செ.ராஜேந்திரன், மு.செல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோபிநாதன் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார்கள்.

    இப்பயிற்சியில் 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 93 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்று நர்கள் நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.

    இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக மாவட்ட ஆசிரியப் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முருகேசன் செயல்பட்டு பயிற்சி சிறப்பாக நடை பெறுவதை பார்வையிட்டனர்.

    இப்பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவிதிட்ட அலுவலர் ராதாகி ருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆசிரி யர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    • ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
    • காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.இதையொட்டி அந்தந்த அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு மதியம் 2 மணிக்குள் முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு 3 இலக்கத்தில் பதிவாகி வருகிறது.
    • கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர் .

    திருப்பூர்:

    தமிழகத்துக்கு வேலைவாய்ப்புக்களை தேடி, பீகார், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வடமாநிலத்தினர் ரெயில் மூலம் வருகின்றனர்.தமிழகத்தில் இயங்கும் சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ெரயில்களில் பெரும்பாலும் பயணிப்பவராக வட மாநிலத்தவரே உள்ளனர். நாட்டில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருந்த ஒரு நாள் தொற்று, மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    குறிப்பாக மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு 3 இலக்கத்தில் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,582 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 93 நாட்களில் இல்லாத அளவாகும்.இருப்பினும் ரெயில்களில் வடமாநிலத்தினர் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை. நேற்று முன்தினம் திருப்பூர் ரெயில் நிலையம் வந்த ரப்திசாகர், ஆலப்புழா, கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 1,500க்கும் அதிகமான வடமாநிலத்தினர் வந்திறங்கினர்.

    ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், வடமாநிலத்தினர் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கிருந்து முன்பதிவு செய்து தினமும் பலர் பயணிக்கின்றனர்.கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்த பின் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்த நிலை தற்போதும் தொடர்கிறது. வடமாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பால், ரெயிலில் பயணிப்போர் எண்ணிக்கை குறையவில்லை. வழக்கம்போல் உள்ளது என்றனர். இதனிடையே கொரோனா பரவலை தடுக்க திருப்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அந்தியூரில் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
    • பயிற்சிக்கான ஏற்பாட்டி னை அந்தியூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகன், மாதேஸா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் லிங்கப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அந்தியூ ர்ஒன்றி யத்திற்கு ட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

    இதில் 130 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    கொேரானா கால கட்டத்தில் மாணவ ர்களின் கற்றலில் இடை வெளி காரணமாக மாணவர்களின் பள்ளி செயல்பாடுகள் குறைந்தது. இதனை ஈடுகட்டும் வகையில், மாணவர்கள் திறனை மேம்படுத்து வதற்காக பல்வேறு உத்தி களை கையாண்டு ஆசிரிய ர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியினை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்து ஆசிரிய ர்களுக்கு அறிவுரை வழங்கி னார்.

    மேலும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் லக்குமி நரசிம்மன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராதா கிருஷ்ணன், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பானுமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நந்தினி தேவி மற்றும் சிவராமன் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்பட்டது.

    பயிற்சிக்கான ஏற்பாட்டி னை அந்தியூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகன், மாதேஸா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் லிங்கப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.
    புதுடெல்லி:

    17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

    இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துவக்கம் முதலே பாஜக அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றன. காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 150 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 58 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. மற்ற கட்சிகள் 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.



    அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ரேபரேலியில் சோனியா காந்தியும் முன்னிலை பெற்றனர். வாரணாசியில் பிரதமர் மோடி முன்னிலை பெற்றார். இதேபோல் நட்சத்திர வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் துவக்கம் முதலே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றனர்.

    தமிழகத்தைப் பொருத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. 
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி பதவிகளுக்கு 4 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிப்படுகின்றன. #kashmirMunicipalelection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.

    இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப்பதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்தார். இதனால், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் இந்த நகராட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.

    மொத்தம் 79 நகராட்சிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தல் போட்டியிட யாரும் முன்வராததாலும், ஒருவர் மட்டுமே போட்டியிட்டதாலும் 27 இடங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    தேர்தல் நடைபெற்ற நகராட்சி பகுதிகளில் மொத்தமுள்ள 598 வார்டு உறுப்பினர் பதவிகளில் 231 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 181 வார்டுகளில் யாருமே போட்டியிடவில்லை. இந்த 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக  மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின.

    இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நாளை வெளியாகும் முடிவுகள் சுமார் 3 ஆயிரம் வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கவுள்ள நிலையில்  அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  #kashmirMunicipalelection
    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து ஏ.பி.வி.பி. மாணவர் சங்க உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தால் தற்காலிகமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. #JNUSUPoll
    புதுடெல்லி:

    தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கியது. இந்த தேர்தலில் போட்டியிட்ட ஏ.பி.வி.பி. என்ற மாணவர் சங்கத்துக்கு வாக்கு எண்ணிக்கை குறித்து தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து, வாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.பி.வி.பி. சங்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, எதிர்ப்பாராதவிதமாக வாக்கு எண்ணும் அறைக்குள் நுழைந்த ஏ.பி.வி.பி. சங்க மாணவர்கள் வாக்குப்பெட்டிகளை உடைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பல்கலைக்கழக தேர்தல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஏ.பி.வி.பி. சங்க மாணவர்கள் மீது வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டுக்கு அதன் தலைவர் விஜய் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். தாங்கள் அமைதியான முறையில் நியாயம் கேட்கவே போராட்டம் நடத்தியதாக அவர் கூறியுள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஏபி.வி.பி.யின் போராட்டத்தினாலேயே வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டதாக கடுமையாக குற்றம்சாட்டுகின்றனர். #JNUSUPoll
    கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. #KarnatakaBypoll #Jayanagar
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்ததால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் ஜெயநகர் தொகுதியில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் 1,11,689 வாக்காளர்கள் (55 சதவீதம்) வாக்களித்தனர்.



    இந்த தொகுதியில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளித்துள்ளதால், காங்கிரசுக்கும் பா.ஜனதாவுக்கு இடையே நேரடிப் போட்டி இருந்தது.

    வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு, எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதல் சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி, பா.ஜ.க. வேட்பாளர் பிரகலாத்தை விட 427 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். #KarnatakaPoll #Jayanagar #JayanagarCounting
    ×