search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leading"

    • அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
    • லெனின், இளைஞரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட் பட்ட முதுநகர் பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். 

    கலெக்டர் அருண்தம்பு ராஜ், மாநகராட்சி மேயர் சுந்தரி, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜய லட்சுமி செந்தில், பால சுந்தர், மாவட்ட பிரதிநிதி கள் துர்கா செந்தில், மஸ்கட் புகழேந்தி, பகுதி துணை செயலாளர்கள் வக்கீல் பாபு, லெனின், இளைஞரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் உள்ள முக்கிய வேட்பாளர்களை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது.

    தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. துத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொ.ம.தே. கட்சியின் ஈஸ்வரன், பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர், கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணி, அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஓசூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் முன்னிலை பெற்றனர்.ங



    வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித் ஷா, காசியாபாத்தில் வி.கே.சிங் (பாஜக) ஆகியோர் முன்னிலை பெற்றனர். ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் ஆசம் கானை விட பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா பின்தங்கினார். போபால் தொகுதியில் சாத்வி பிரக்யாவைவிட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்தங்கினார்.

    வடமேற்கு டெல்லியில் பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் முன்னிலை பெற்றார். இதேபோல் கோரக்பூரில் பாஜக வேட்பாளர் ரவி கிஷன், அனன்சோல் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபுல் சுபிரியோ முன்னலை பெற்றார். முசாபர்நகரில் தற்போதைய பாஜக எம்பி சஞ்சீவ் பால்யன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்கா பின்தங்கினார்.
    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.
    புதுடெல்லி:

    17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

    இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துவக்கம் முதலே பாஜக அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றன. காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 150 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 58 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. மற்ற கட்சிகள் 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.



    அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ரேபரேலியில் சோனியா காந்தியும் முன்னிலை பெற்றனர். வாரணாசியில் பிரதமர் மோடி முன்னிலை பெற்றார். இதேபோல் நட்சத்திர வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் துவக்கம் முதலே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றனர்.

    தமிழகத்தைப் பொருத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. 
    ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. #Results2018 #CongressLeading
    ஜெய்ப்பூர்:

    தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது.

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

    இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலங்களிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கி உள்ளன.



    வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் வெளியான தகவலின்படி காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக 5 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

    இதேபோல் ராஜஸ்தானில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. காலை நிலவரப்படி பாஜக 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 14 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12  தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 4 இடத்திலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. இந்த முன்னிலை நிலவரத்தில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மதியம் 12 மணியளவில் உள்ள முன்னிலை நிலவரத்தைப் பொருத்து வெற்றி தோல்வியை கணிக்க முடியும். #Results2018 #CongressLeading
    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. #panchayatpoll #TrinamoolCongress
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த14-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றன. 621 ஜில்லா பரிசித்துகளுக்கும், 6 ஆயிரத்து 123 பஞ்சாயத்து சமிதிகளுக்கும், 31 ஆயிரத்து 802 கிராம பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேடபாளர்கள் 1800 கிராம பஞ்சாயத்துகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

    மேலும், பா.ஜ.க. 100 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி 30 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பாரதிய ஜனதா 100 கிராம பஞ்சாயத்துகளிலும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 30 இடங்களிலும் முன்னிலையில்  உள்ளன. வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #panchayatpoll #TrinamoolCongress
    ×